மழை மொழி:-

கோடி கரங்கள்
கொண்ட கதிரவன்
கொள்ளை அழகினன்
ஏழு நிறத்தவன்

கொடையாய் உன்னிடம்
ஒரு துளி வேண்டுவான்
வானவில் என்னும்
ஜாலம் காட்ட..

Add a comment ஜனவரி 21, 2012
குறிச்சொற்கள்: , , , , , ,

மழை மொழி…

சல சலவென நீ
பெய்திருக்கையில்

சட்டென அடித்த
இளம் வெயிலில்

என் சாலரமெங்கும்
சரிகைத்தோரணம்

Add a comment ஜனவரி 19, 2012
குறிச்சொற்கள்: , , , , , , ,

விழிப்பறிக்கொள்ளை

விழிப்பறிக்கொள்ளை

இனிய கோவை நண்பர்களுக்கு எனது கவிதை தொகுப்பான”விழிப்பறிக்கொள்ளை”, விஜயா பதிப்பகத்தில் (ராஜ வீதி)கிடைக்கும் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கறேன்,

Add a comment ஜனவரி 18, 2012
குறிச்சொற்கள்: , , , , , , ,

மழை மொழி

 

தகதிமிதா வென சில நேரம்
தடதட தடவென சில நேரம்
சலசல சலவென சில நேரம்
சத்தமில்லாமல் சில நேரம்

பலபல தாளமாய்
தவில் அடித்து
குளிர் கொண்ட
ஈரத்தின்
குரலெடுத்து

துளி என்ற ஒற்றை
ராகத்திலே
தொடர்க்கச்சேரியோ
நில மேடையில்..

Add a comment ஜனவரி 14, 2012
குறிச்சொற்கள்: , , , , , , ,

மழை மொழி

பூத்தூறலாய் தூவிய போது
சிலு சிலுத்தேன்

சிறு துளியாய் விழுந்த போது
பட படத்தேன்

பெருந்துளியாய் மாறிய போது
போராடினேன்

பெரு மழையாய் ஆன போது
தலை தாழ்ந்தேன்

நானும் ஒரு மலராய்..

 

 

Add a comment ஜனவரி 12, 2012
குறிச்சொற்கள்: , , , , , ,

“விழிப்பறிக் கொள்ளை”

இனிய தோழர்களுக்கு..

               என் முதல் கவிதை த்தொகுப்பான “விழிப்பறிக் கொள்ளை” புத்தகத்திருவிழாவில்  கடை எண் 334,யுனிவர்சல் புத்தக நிலையத்தில் கிடைக்கும்   என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்

Add a comment ஜனவரி 11, 2012
குறிச்சொற்கள்: , , , , , , ,

விழிப்பறிக்கொள்ளை

இனிய தோழமைக்கு
புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

எனது முதல் கவிதை தொகுப்பினை “விழிப்பறிக்கொள்ளை” என்ற தலைப்பில்,உமா செளந்தர்யா என்ற பெயரில் “நாக ரத்னா” பதிப்பகத்தின் வாயிலாக சென்னையில் நடைபெறவிருக்கும் புத்தகத்திருவிழாவில் வெளியிடுகிறேன் என்பதை மிகுந்த மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நாக ரத்னா பதிப்பகம்:99404 48599
கருத்துக்களுக்கு:mu_sowmi@yahoo.com

4 பின்னூட்டங்கள் ஜனவரி 2, 2012
குறிச்சொற்கள்:

புள்ளிகளாய
உனை வைத்து
கோலங்கள்
வரைகிறேன்
கவிதைகளாய்

காதலினால்

Add a comment December 29, 2011

வெட்கத்தின்..
தாழ்வாரமெங்கும்…
வெளிர் சிவப்பு..
வண்ணங்கள்

நாணக்குடை..
மீறி..நனைக்கும்..
எனை..
நீ..பொழிந்த..
காதல்..மழை…

சூடியதை…விட..
உதிர்ந்தவை..அதிகம்..
கொலுசுக்கொண்டாட்டத்தில்..
தரை விரிப்பாய்..
மல்லிகைகள்..

இயல்பாகத்தான்
இருக்க நினைக்கிறேன்

இத்தனையும்
நடந்துவிடுகிறத
உனைக்கண்ட
கண்கள் பின்..
கண்ணாடி பார்க்கும்
பிரதிபலிப்பில்
………………………………………..

அறுந்த..மணியாய்
உருளும்..
விழித்துளி
நொறுங்ச்சொல்கிறது
நம்
நேசத்தை..

மலர்ந்த..பூக்கள்..
மகரந்தம்.தூவி.
மகிழ்த்தும்…காதல்..
தேசத்தை

தொலைத்த..சிரிப்பை…
மறந்த..மகிழ்வை..
தேடிக்கொடுத்தது..
உனது..குரல்..

உயிரே..
உயிரே…
உருவம்..ஒலியாய்..
என்..
உடலைச்சேர்ந்தது..
உனது..நிழல்..

வலிகள் மறந்து
விழிகள் திறந்து
உலகை ரசிக்கும்
எனது குணம்

இனிது…
இனிது..
காதல்..இனிது..
இனி..
இறப்பைக்கேட்க்கும்..
எனது..மனம்…

Add a comment நவம்பர் 23, 2011

பூவாளி

காதல் சொன்ன

கவிதைகள் ஆயிரம்

காதல் கொண்ட

மனிதர்கள் ஆயிரம்

நானும் கொண்டேன் காதலை

நாளும் கொள்வேன் காதலை

பருவம் வாய்த்த காலம் முதல்

பழுத்த கிழவியாய் சாயும் வரை

நிலையாய் நிறைவாய் மனதில்

நிம்மதியாய் நேர்மையாய் காதல்

குறுக்கு எண்ணம் எதுவுமில்லை

குற்றம் சொல்லும் பழக்கமில்லை

நினைத்த வார்த்தை நெஞ்சில்

தொடங்கி வாய்வழித்தள்ளும்

பெருத்த சோகமில்லை

செப்படி வித்தையில்லை

கிடைத்த அனுபவத்தால்

குழவியில் கிழவியாக..

பருத்த உலகின் மடியில்

பானைசோற்றாய் சிறுத்தும்

எடுத்த அவதாரம் போல

என்னை விரித்தது காதல்

பசியை புசித்து இருந்தோம்

பழமை பேசித்திறிந்தோம்

கசிந்த கண்கள் தவிர

கனவுக்கண்களோடும் அலைந்தோம்

நடக்கும் சண்டை முடிவில்

யாருக்கு யார் உயிர் என்று

வெறுத்து தவித்தும் இறுந்தோம்

வயது கழிந்த நிலையில்

வாலிபம் தெளிந்த பொழுதில்

அதட்டும் விழிகள் அனைக்க

நடித்த பெண்மை இறுக்க

பிடித்த விரலுடன் நடக்கும்

பிள்ளையுடன் பிள்ளையாய்

காதல்

எனக்குள் பிறந்து

எனக்குள் வளர்ந்து

எனக்குள் வாழும்

என்னை ஆளும்

காதலே உனை

காலமெல்லாம் பாடுவேன்

காலமுள்ளவரை பாடுவேன்

Add a comment நவம்பர் 22, 2011

பக்கங்கள்

வகைகள்

இணைப்புகள்

மேல்

நாள்காட்டி

ஜனவரி 2012
தி செ பு வி வெ ஞா
« Dec    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Most Recent Posts

 
Follow

Get every new post delivered to your Inbox.