Archive for பெப்ரவரி, 2008




போர் முறை

மலை போல் குவிந்திருக்கும்
உன் வார்த்தை எல்லாம்
பள்ளத்தில் வீழ்ந்து விடும்
என் மவுனத்தால்

சேர்த்திருக்கும்
உன் சார்பு பொய்களெல்லாம்
அவிழ்ந்து வழியும்
என் கூர்ந்த பார்வையால்

என்னை வெல்ல
உன்னிடத்தில்
எத்தனையோ

உனை வெல்ல
என்னிடத்தில்
ஜீவன் மட்டும்!

Add comment பெப்ரவரி 22, 2008

முடியும் பொழுது…

ஒரு  நேசப் பொழுதில்
நீண்ட என் நகங்கள்
உன் சட்டை  நூலில்
சிக்கித்  தவிக்கும்
நகம்  உடையுமோ…
உடை  கிழியுமோ…

வழக்குகள் முடியும்
வாழ்க்கை முடியும்  பொழுது.

Add comment பெப்ரவரி 14, 2008

தளும்பல்

உன் நினைவுக்  காற்று  வீச
தளும்பி விடுகிறது
நிறைகுடமாய்…
நான்  சேர்த்து வைத்த
அன்பு
என்  கண்களில்.

2 comments பெப்ரவரி 12, 2008

ஆதலினால்…

மறந்து விடக் கூடும்
என்று நினைத்ததா மனம்…

மறக்கவில்லை.

அழித்து விடக் கூடும்
என்று இருந்ததா காலம்…

அழிக்கவில்லை..

எரித்து விடக் கூடும்
என்று இருந்ததா நினைவுகள்…

எரியவில்லை.

உன்னை பிரிந்ததும்
இறந்து விட வேண்டும்
என்று துடித்த உயிர்
இறக்காததால்…

Add comment பெப்ரவரி 9, 2008

?

முடியாது என்று
எதுவுமில்லை…

எல்லாம்
முடிந்த பின்பு…

Add comment பெப்ரவரி 8, 2008

விழிப்பு

கண்கள் இரண்டும்..
கனவின் புதைகுழி..

விடிந்தால் தெரியும்
விழிப்பது..

கண்களா?
கனவுகளா…

Add comment பெப்ரவரி 7, 2008

மீண்டும்

எப்போதோ திருவிழாவில்…
தொலைத்த உன்னை..

இப்போது… மீண்டும்..
கண்டடுத்தேன்…

அப்போதிருந்து.. பழகிய வாழ்க்கை..
இப்போது..நெருடலாய்..
உன் .. வருகையால்..

எப்போது.. வரும்..
திருவிழா..?

1 comment பெப்ரவரி 6, 2008

ஒன்றுமில்லையென்று..

காதல் என்றும்..
ஒன்றுமில்லை

பாசம் என்றும்..
ஒன்றுமில்லை

நட்பு என்றும்..
ஒன்றுமில்லை

ஒன்றுமில்லை என்றும் ..
ஒன்றுமில்லை..

பேசாமல்..
பேசிவிடு..

இந்த மௌனம்
நிரப்பிவிடக்கூடும்..

ஒன்றுமில்லை என்பதை…

Add comment பெப்ரவரி 5, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

பெப்ரவரி 2008
தி செ பு வி வெ ஞா
    மார் »
 123
45678910
11121314151617
18192021222324
2526272829  

Posts by Month

Posts by Category