Archive for பெப்ரவரி 22nd, 2008
போர் முறை
மலை போல் குவிந்திருக்கும்
உன் வார்த்தை எல்லாம்
பள்ளத்தில் வீழ்ந்து விடும்
என் மவுனத்தால்
சேர்த்திருக்கும்
உன் சார்பு பொய்களெல்லாம்
அவிழ்ந்து வழியும்
என் கூர்ந்த பார்வையால்
என்னை வெல்ல
உன்னிடத்தில்
எத்தனையோ
உனை வெல்ல
என்னிடத்தில்
ஜீவன் மட்டும்!
Add comment பெப்ரவரி 22, 2008