Archive for மார்ச், 2008




காதல் கடிகாரம்

உன்னிடம் பேசும்
நிமிடத்தை நோக்கி..
சிறிய ..முள்ளாய்  வருகிறேன்..

எனை எட்டிப்பிடிக்கும்..
வேகத்தோடு..நீயும்..
வருகிறாய்..
பெரிய..முள்ளாய்..

இணையும்..நொடியில்..
நிமிர்ந்து..விழிவிரிகையில்…
கடந்து விடுகிறது..
சந்திப்பிற்கான…
கால அவகாசம்…

மறுபடியும்..நடக்கிறது.
மறுக்கமுடியாமல்..
இந்த..நாடகம்…

பரந்த..பிரபஞ்சத்தில்…
கண்ணாடிக்குள்..சிக்கிய..
காதலர்….நாம்..
கடிகாரமாய்  ..துடிக்கிறது…
நடிக்கத்தெரியாமல்….
நம்..காதல்.

Add comment மார்ச் 31, 2008

மீண்டும் தொடர…

உன்னை..திட்டித்தீர்த்த..
வார்த்தைகள்..
வலுவிழந்து..ஒழிந்து..
சினேகித்து க்கொண்டிருக்கும்…
உன்..
புத்தக..மயிலிறகுடன்…

நீ..மறந்து விட்டிச்சென்ற..
கலர் பென்சிலும்..
கதை புத்தகமும்…
இருக்கும் இடம் சொல்லாமல்..
பயந்து தவிக்கும்..
என் கோபத்திற்கும்..
உன் வருகைக்குமாய்……

அழிக்காமல்..நீ..விட்டுப்போன..
அசிங்கமான…என் உருவம்..
கோபத்தையும்..சிரிப்பையும்…
விநோதமாக இணைக்கிறது…
கரும்பலகையில்…
தொங்கியபடி….

உனை..விரட்டும் பொழுது..
என் பால்யம் மறந்து…
என் தயாகவே..ஆகிறேன்…
நானும்…

உன்..கொலுசொலியும்..
சிரிப்பொலியும்….
பதிந்திருக்கும்…தரைபோல்..

சினுங்களும்…குறும்புகளும்..
ஒழிந்திருக்கும்…சுவர்போல்..
நானும்..காத்திருக்கிறேன்…

விடுமுறையில்..
பாட்டிவீடு..
சென்ற..மகளே…
உனக்காக….

இவையெல்லாம்…
மீண்டும்..தொடர…

1 comment மார்ச் 30, 2008

மூக்குத்தி..

மூக்கை க்குத்திக்கொண்டு..
அமர்ந்தாய்..என் முகத்தில்..

அழகுக்காய்..
என அக்கா..சொல்ல…

கோபம்  குறையும்..என
அம்மா…இடிக்க…

திருமணத்திற்கு..அவசியமாம்..
தந்தை..வற்புறுத்த…

எவர்பொருட்டு..உண்மையோ…
என் பொருட்டு வந்தாய்…

வலிக்க…வலிக்க..
வந்த நாட்களில்..
வெறுப்பாய்..உனை
முரைத்தேன்..

போகப்போக…ஒன்றுமில்லை..
உனக்கும்..எனக்கும்..
உறவாய்…

வரம் தரும் அளவிற்கு..
வளர்ந்துவிட்டேன்..இப்போது..
என்ன வேண்டும்..உனக்கு?..

முகத்திலிருந்து..விடுதலையா?…
மூக்கிற்கான…பட்டாவா?…
 

Add comment மார்ச் 30, 2008

செல்லப்பெயர்

உன்னை..வெறுத்து…
ஒதுக்கி…
மறந்த பிறகும்…

உன் உருவம்..
கரைத்து…ஆழ்கடல்..
கலந்த பிறகும்…

உன் செயல்கள்…
வலித்து…
கசந்த பிறகும்

என்றாவது…எவர்..
வாயிலிருந்தாவது
வரும்போதெல்லாம்..
எனை எரித்துவிட்டு ச்செல்கிறது..

உனக்கு நானிட்ட…
செல்லப்பெயர்……

3 comments மார்ச் 30, 2008

என் பேனா

என் உயிரைக் கொண்டு
உலவும் உருவம்…
என் நினைவைக் கொண்டு..
பறக்கும்…
அதன் இதயம்…

என் உயிர் மெய்யெல்லாம்
மையாய்க் கொண்டு…
உழுது நடக்கும்..
ஒரு கால் எருது…

நான் எண்ணி முடித்த…
எண்ணம் எழுதும்..
என்னைபோல்..
இன்னொரு பிரதி….

நான் இருக்கும் வரைக்கும்
என் எண்ணம் அறிவாள்..
இவள் மட்டுமே..நான்
இறந்த பின்னும்..எண்ணிய..
எண்ணம்..அறிவாள்…

காசெல்லாம் கேட்காத..
காந்தீயவாதி…
கைப்பைக்குள் வசிக்கும்..
என் காரியதரிசி….

Add comment மார்ச் 30, 2008

மனச்சிதைமாற்றம்

காதல்…
கூட்டுப்புழுவை…
பட்டாம்பூச்சியாக்குகிறது..
வளர்ச்சிதை…மாற்றத்தால்….

கல்யாணம்…
பட்டாம்பூச்சியை…
கூட்டுப்புழுவாக்குகிறது….
மனச்சிதைமாற்றத்தால்…

1 comment மார்ச் 29, 2008

நினைவுகள்

நினைவுகளை சுமந்தபடி..
நீருக்குள்..நெடும்பயனம்.
அழிந்துவிட க்குடும் என்ற..
அச்சம் என் நெஞ்சில்..

பயணங்கள் முடிந்தபின்னும்..
பாதை மாறி நடந்தபின்னும்..
அழியாமல் அப்படியே….
நீயே தான்…என்
நினைவுகளாய்….

Add comment மார்ச் 29, 2008

உயிர்பந்தல்

மனப்பந்தலில்
மல்லிகையின் வாசம்…

குணப்பந்தலில்..நீ
கொன்று விட்ட கோபம்..

விழிப்பந்தலில்..
வழியெங்கும் விழாக்கள்…

என் உயிர்ப் பந்தலில்..
நீ…
உள்ளடங்கி ..இருப்பதனால்…..

Add comment மார்ச் 22, 2008

ஈரநினைவு

மழை வரும் தினமெல்லாம்..
மனதில்..உன் நினைவு…

பள்ளியில் மரத்தடியில்
துளி த்துளியாய் நனைந்தது….

பேருந்து நிறுத்தத்தில்
பாதியாய் நனைந்தது…

வேறு வழியின்றி..
வெறுமென நனைந்தது…

ஆசை ஆசையாய்
அவ்வப்போது..நனைந்தது…

அனைத்தும்..கடந்து…
ஆழ்மனதில்..ஈரமாய்…

நீயும்…நானும்..

நேர்கோட்டில்..நனைந்தது…..
 

Add comment மார்ச் 22, 2008

விழிமழை

என் வானம்
திரண்டுகிடக்கிறது…..
உன் நினைவுகளைப்போல்…
எப்போது வேண்டுமானாலும்
பெய்யலாம்…
விழிகளில் மழையாய்……

Add comment மார்ச் 22, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

மார்ச் 2008
தி செ பு வி வெ ஞா
« பெப்   ஏப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Posts by Month

Posts by Category