Archive for மார்ச் 6th, 2008
ஒன்றுதான்:
நானும் நீயுமொன்றுதான்.
இருவரும் ஒரு வகையில்..
நீர் கோலம்..
உனக்குள் நான்..
நீரில் வரையும் நீர்கோலம்..
எனக்குள் நீ
தரையில் வ்ரையும் நீர் கோலம்
முன்னது இறந்துகொண்டே பிறக்கிறது…
பின்னது பிறந்துகொண்டே இறக்கிறது…
காற்றின் களைத்தலில்..
காலத்தின் தொலைத்தலில்..
அனைத்தும் அழிகிறது
அவரவர் மனதில்.
கெளரவ தோற்றம் போல்
உடன் பிற்ந்த நீர் அலைகள்..
உதிர்ந்து சொட்டிய நீர் துளிகள்..
கடன்பட்டு உரைக்கிற்து..
என்க்கும் உன்க்குமான ஒற்றுமையை…
கலந்தபோதும்.. கரைந்தபோதும்..
விளங்காத உண்மை.
தொலைந்தபோதும்..மறந்தபோதும்..
உரைத்திடுமா!…
நீயும் நானும் ஒன்றுதான் என்பதை……
Add comment மார்ச் 6, 2008
நிறம்:
கனவுகளை நானும்..
நினைவுகள் எனையும்..
தின்னும் நடுநிசியிலும்..
உன் கருத்த உருவம்..என்
இரவை கடந்து செல்லும்.
உன்னுடன் மகிழ்ந்து..
உன்னுடன் இணைந்து…
உன்னுடன் புணரும்..
ஒரு துளி வியர்வை சொல்லும்..
உன்னுடனான காதலை.
நீ சற்றே திறந்து வந்த போதும்
இருளாகத்தான் இருந்தது
இதயம் உன்..
கரிய நிறத்தால்.
உருவம் இனையாது..
பெயரும் பதியாது….
நடந்து கொண்டிருக்கிற்து
வாழ்க்கை…
உன் நிறத்துடன்…..
Add comment மார்ச் 6, 2008