Archive for மார்ச் 7th, 2008
தனிமை:
எப்போதும் சண்டையிட்டு கிடக்கும்
என்னுடன் ஒட்டி பிறந்த..
என் த்னிமை…
இரண்டு வார்த்தை
இடைவேளியிலும்….
மற்றவர் ரசிக்காததும்…
தவறாக நினைத்ததுமான..
என் வார்த்தைகள்..
திரும்பி வந்து சேரும்..
கால அவகாசத்திலும்…
தீராமல் தொல்லைபடுத்தும்.
எனக்கான தனிமை….
நான் பாடும் பாடலின்
ஒலி முடிவடைய..
நொடிப்பொழுதில் ஏறும்
அதன் கணமான தேகம்
என் முதுகில்….
உயிரை எடுக்கும்
குழந்தையாய்…திண்பன்டம்
கொடுத்து வைத்திருப்பேன்…
சக மனித உரையாடலில்…அது
அடம்பிடிக்கும் ஆரம்பத்துக்குள்..
எல்லாம் சகித்துக்கொள்வேன்…
பாசப்பினைப்புடன்…
குழியில் படுக்கும்
நேரத்திலும்..
கூடப்படுக்கும்..நம்பிக்கையில்…
Add comment மார்ச் 7, 2008
காற்று:
வெற்றிடம் தேடும்
காற்றாய் நான்..
செல்லுமிடம் எல்லாம்
நிரப்புவேன் அன்பால்..
நிறைவாக இருப்பேன்
நிரைய்யும் இடத்தில்..
குமிழாக இருந்தல்
சில நொடி வாழ்க்கை..
உயிராக இருந்தால்..
இறுதிவரை வாழ்க்கை..
நீ என்ன குமிழா.. உயிரா..
உன்னை பொருத்து
1 comment மார்ச் 7, 2008
அமீபா:
எனக்குள் கிடந்த
காதலின் வடிவம்..
அமீபாவை போல்
நேர்த்தியற்று கிடந்தது..
விபரம் ஏதும் சொல்லாமல்
சரி செய்து போனாய்..நீ..
வந்து போன பதிவிற்க்காய்
உன் கையெப்பம் அதில்..
பெரும் அவக்ஷ்த்தயாய்….
ஒன்றுக்கு இரண்டாக
இனப்பெருக்க வளர்ச்சி..
எனக்குள் நீ…
இரத்த திசுக்களாய்…
குணப்படுத்த முடியாத
நோயாய் காதல்…
அதே அமீபாவாய்..
சற்றே அழகானதாய்…..
Add comment மார்ச் 7, 2008