பிறந்த வீடு:

மார்ச் 11, 2008 uumm

Tags: , ,

அழிந்திடாத வரைபடமாய்
என் ஆழ்மனதில்
என் பிறந்த வீடு….

கதகதப்புடன் கலந்த குளிரில்..
எனை அணைத்துக்கிடந்த..
அடர்ந்த சுவர்கள்…

சிம்னி விளக்கின்
கண் சிமிட்டலில்
கரைந்த இரவுகள்
பாசப்பிணைப்புகள்….

யார் யாரோ ஒழித்துவைத்த
சில்லரைக் காசுகள்
பெரிய திட்டின்
பதுங்கு குழிகளில்..

கையூன்றி நின்று பார்த்த
தடயங்கள் சின்ன திட்டில்…

ஒரு நாள்காலை..
மனித நம்பிக்கையை வேண்டி
அக்கா சாய்ந்தழுத
தலகாணி அடுக்குகள்…

ஒன்றுமே இல்லாமல்..
திறந்து பார்க்கத் தூண்டும்
சிதம்பர ரகசியமாய்
பழைய மரப்பெட்டி….

எப்போதும் எல்லொரையும்
அழகாகவே காட்டும்
கண்ணாடி மர பீரொ…..

பெரியவளான பயத்தில்
மருண்டழுத என்னை..
அனைத்து தாயாகிய
பெயர்ந்து உடைந்த
ஜலதாரை…

இன்னும் எத்தனையோ…

சுவரின் வண்ணங்களும்… மச்சும் மாடியும்…
ஜன்னலும் திரைச்சீலையும்…
களவாடிக்கொண்டது….

நான் காற்றில் தெளித்த…
கண்ணீர்த் துளிகளையும்…
அழுது மறந்த அவலங்களையும்…
தனதாக்கிக்கொண்டு…
இன்னும் கூட நினைத்திருக்கலாம்..

புதிய வீட்டிற்குள் புதைந்த..
என் பூர்வீக வீடு…
என்னைப்போல்……

Entry Filed under: கவிதை

2 Comments Add your own

  • 1. ஜயராமன்  |  மார்ச் 11, 2008 at 9:50 மு.பகல்

    கருத்தும், உணர்வுகளும் நெஞ்சைக் கவ்வுகின்றன. அழகான கவிதைக்கு நன்றி.

    ஏகப்பட்ட எழுத்துப்பிழை. கொஞ்சம் தமிழிலும் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்.

    அனைத்துக்கிடந்த = அணைத்துக்கிடந்த

    பாசப்பினைப்புகள்…. = பாசப்பிணைப்புகள்

    சில்லரை காசுகள் = சில்லரைக்காசுகள்

    திற்ந்து பார்க்க த்துண்டும் = திறந்து பார்க்கத் தூண்டும்

    எல்லொரைய்யும் = எல்லோரையும்

    இன்னும் எத்தனையோ!!

    :-) ))

    நன்றி

    ஜயராமன்

  • 2. பொன்.சுதா  |  மார்ச் 11, 2008 at 12:37 பிற்பகல்

    அனைத்து கவிதைகளும் நன்றாக இருக்கிறது. கவித்துவம் கை கூடி இருக்கிறது. தொடர்ந்து எழுதவும். இன்னும்… இன்னும்…


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

மார்ச் 2008
தி செ பு வி வெ ஞா
« பெப்   ஏப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Most Recent Posts