Archive for மார்ச் 12th, 2008




பிச்சை:

மூடிக்கிடந்த என்
மெளன அறைக்குள்
நீ .. வீசிச்சென்ற..
பிச்சை வார்த்தைகள்….

எடுத்து விதைக்க…
அறுவடையாய்…கவிதைகள்….

உன்னை  கொண்டு
உனையே பார்த்தேன்..

விளக்கின் ஒளியால்…
விளக்கை…பார்ப்பதாய்

Add comment மார்ச் 12, 2008

விரும்பி தோற்ப்பவை:

ஒலி அலை வரிசையின்
குரல் பிணைப்பு வழியே…
உனை வந்து அடையும்
எனது ஜீவன்….

நேரத்தையும்  ரூபாய்
நாணயத்தையும்  தின்று
வளர்வதாய் குற்றச்சாட்டு…
எப்போதும் அதன் மீது நீ…..

தகிக்கும் வெயிலில்
துடிக்கும் மீனாய்
தரையிலே விட்டெரிந்தாய்…
நீ..கோழையான ஒரு பொழுதில்..

அதை உணர்த்தும்
எண்ணம் விட்டு..
மீண்டும் அடைபடும்
அதன் ஆழ்குழியில்…

வருத்திவிட்ட ..
வெற்றியில்  நீ..
வளையவரும் போதெல்லாம்..

உனக்கு வலித்துவிடக்கூடாத
கவனத்துடன்…

ஏனோ….
விரும்பி தோற்கிறது…
ஒவ்வொரு முறையும்..!…

1 comment மார்ச் 12, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

மார்ச் 2008
தி செ பு வி வெ ஞா
« பெப்   ஏப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Posts by Month

Posts by Category