Archive for மார்ச் 13th, 2008
வலிமைபயம்
என் கவிதை வரிகள் மீது..
தீக்குளம்பைத் தெளித்தன…
உன் நாக்குகள்…
சுட்டு சுருங்கிய எழுத்துக்களும்..
அதன் முகங்களும்..
படையில் வந்து மீண்டும்..
அணிவகுத்து நிற்கும்..
உனை எதிர்தேயிராத
பார்வைகூட புருவம் சுருக்கி..
உன் முகத்தைமேய..
தடுமாற்றத்தை தவிர்ப்பாய்…
ஒவ்வொரு முறையும்…
எனை..நீ…
புதைத்துப்போன இடத்தில்..
புல்..பூண்டு..முளைக்காமல்..
நானே..முளைத்தும்..
நம்பவில்லை..என்
நேசத்தை….
உன்..படையெடுப்பின்
களிப்பில்…
வார்த்தைகள்..இறந்து போக…
அதன் கருக்கள்
ஈன்றெடுக்கும்..
புதுப்புது வார்த்தைகளை..
என்றாலும்..
என் கவலையெல்லாம்..
உன் வலிமையை கண்டு அல்ல..
உன் பயத்தைக் கண்டுதான்….
Add comment மார்ச் 13, 2008
கனவு
வீடு பெருக்கி..
சாணி மொழுகி…
மாட்டைக் கழுவி..
பால் கறந்து..
சோளச்சோறும்,
கீரையும் கடைந்து…
இருப்பதை உண்டு
கிடைப்பதை சேமித்து..
புள்ளையையும்..
புருஷனையும்..
விரித்த முந்தானையில்
உறங்க விட்டு…
இப்படியும் …
ஒரு வாழ்க்கை..
மன மூலையில் கிடக்கிறது…
கணினியில் ஆங்கிலத்தில்
கை தட்டிக்கொண்டிருக்கும் போது!…
1 comment மார்ச் 13, 2008
உனக்காக
உனக்காக சமைத்து…
உனக்காக துவைத்து….
உனக்காக கழுவி…….
உனக்காக பெருக்கி…
இப்படி உனக்கான..
வேலைகளில்தான்
எனக்கான நாட்கள்
நிறைவுபெறுகின்றன….
Add comment மார்ச் 13, 2008