Archive for மார்ச் 14th, 2008
இறுதியில்
உன் காதலின்
காற்று வெள்ளத்தில்..
சுழன்றுவரும்
கூழாங்கல்லாய்..நான்..
எனை..
தொடர்வதும்…படர்வதும்…
உன்.. காதல் விளையாட்டு…
என் அழகிய உருவம்
உன் அடர்ந்த
அணைப்பில் புணரும்..
ஓயாமல் ..ஓடுகிறாய்..
எனையும் புரட்டியபடி….
களத்தில்..கடைசியாய்..
என்..நினைவில்…
கடலாய்..கலப்பாய்…
இறுதியில்..நான்..என்ன?…
வெறும் கல்லா…சிலையா?…
உன் நினைவில்…..
Add comment மார்ச் 14, 2008
மனக்குழந்தை
கண்ணாடி தடுப்பிற்குப் பின்
கை கால்களை அசைத்தபடி…
கண்களை சுருக்கி..விரித்து….
வித..வித கோணங்களில்..
வாயை சரி செய்து..
என்னமோ பேசி விளையாடும்..
எதிரில் குழந்தை….
பலசமயம்..வார்த்தைகளற்று..
தனக்குள் உழன்று திரியும்…
என் மனதைப்போல்….
Add comment மார்ச் 14, 2008
நண்பன்
என் நட்பு உலகத்துள்..
நானும்..நீயும்..
கண்டங்களாய்..
உனக்குள் நடக்கும்
உள்நாட்டுப் பிரச்சனைகள்…
எனக்குள் நடக்கும்
நிலநடுக்க பிரச்சனைகள்…
நமக்குள்.. அத்துப்படி…
கிடைக்கும் வலிகளும்..
சந்தோசங்களும்..
இடம் மாறக்கூடும்
அவரவர் விதிப்படி…..
எல்லா..நேரங்களிலும்
உன் வார்த்தைகளில்..
ஒரு தலையணையுண்டு..நான்..
சாய்ந்து..தேற்றிக்கொள்ள….
எப்போதும்..என் பேச்சிலும்..
ஒரு கண்டிப்பு இருக்கும்
உனை வழிநடத்திச்செல்ல…
என்றாலும் ..நமக்குள்
நடக்கும் சண்டையும்!….
ஆனால்..எப்போதும் முடியும்..
சமாதானமாய்….
உற்ற நண்பன் என்பதால்
மட்டுமல்ல…
என் நட்பின் வரைபடம் ..
உன்னில் தொடங்கி..
உன்னுள் முடியும்…
என் ஒற்றை..நண்பன்
என்பதாலும்……
Add comment மார்ச் 14, 2008