Archive for மார்ச் 31st, 2008
காதல் கடிகாரம்
உன்னிடம் பேசும்
நிமிடத்தை நோக்கி..
சிறிய ..முள்ளாய் வருகிறேன்..
எனை எட்டிப்பிடிக்கும்..
வேகத்தோடு..நீயும்..
வருகிறாய்..
பெரிய..முள்ளாய்..
இணையும்..நொடியில்..
நிமிர்ந்து..விழிவிரிகையில்…
கடந்து விடுகிறது..
சந்திப்பிற்கான…
கால அவகாசம்…
மறுபடியும்..நடக்கிறது.
மறுக்கமுடியாமல்..
இந்த..நாடகம்…
பரந்த..பிரபஞ்சத்தில்…
கண்ணாடிக்குள்..சிக்கிய..
காதலர்….நாம்..
கடிகாரமாய் ..துடிக்கிறது…
நடிக்கத்தெரியாமல்….
நம்..காதல்.
Add comment மார்ச் 31, 2008