Archive for ஏப்ரல், 2008




கடவுள்..வேலை..

பூப்பறிக்க ப்போனேன்..
கடவுளின்..தோட்டத்திற்க்கு…
கத்தி கொண்டு வந்தாயா?..என..
வாயிலிலே..நின்றிருந்தான்…

மலர்கள்..பறிக்க…
கத்தியா..என்றேன்..
தண்டனையாய்..
முட்கள்..பறித்து..
மூலையில்..அடுக்கச்சொன்னான்…

முட்கள் முடிந்ததும்..
பூக்களிடம்..வந்தேன்..
முள்…இல்லா..
வாழ்க்கை..வாழ…
வாய்ப்பு  கேட்டது…

மெண்மையே..உள்ளமென…
உண்மையாய்..திரும்பினேன்..

மலரிடம்..இருந்து..பின்பு..
மடல்..வந்தது..

“கடவுள்..காவலாளியாகிவிட்டான்
வேலை..காலி
வருகிறாயா..”என்று.

Add comment ஏப்ரல் 30, 2008

ஓர் எல்லையில்…

எல்லோரையும் போலவே..
நின்றிருக்கலாம்..
நானும்.ஓர் எல்லையில்…

உன்னை..முற்றிலும்
அறிந்ததாய்….
கொண்ட அகங்காரம்..
நாம் வெறுத்த..நொடியில்..
தூக்கிட்டது…தற்கொலையாய்..

எந்த..தயக்கமும்..இன்றி..
இன்று..உன்குரல்..தொடுகையில்..
தழும்புகள்  கூட  ..
தடயங்கள்..அறுக்கும்…

அவரவர்..
காதல்..களங்கலும்…
பின்னர்..கண்ணீர் கதைகளும்..
பரி..மாறிச்சிரிக்கும்..
நாம்..சுவாசித்தனுப்பிய…
மூச்சின் எச்ச்ம்..

இன்னும்..கூட..
புரிவதற்கான..மனதின்..மிச்சம்..
இருந்தது..தெரியாமல்..
இறந்தகாலமானது…அன்று..
நம்..எதிர்காலம்..

கடந்து..வாழ்ந்து..
உணர்ந்த..பின்னும்..
வலிக்கிறது..ஏனோ…
நீ..வழியனுப்பிய…
பார்வைகள்..

பதராமல்..
இருக்க..தெரியவில்லை..
பழகிய..முகம்பார்த்து..
உன்னைப்போல்..

எல்லோரையும் போலவே..
நின்றிருக்கலாம்..
நானும்..ஓர் எல்லையில்…
குறைந்தது..
நீ..நின்ற..எல்லையிலாவது….

2 comments ஏப்ரல் 29, 2008

நிஜந்தான்…

இரவில்..வழியும்..
நிலவில்..நனைந்து..
உயிரை..திறந்தேன்..
உன்..நினைவில்..

உலகம்..வெடிக்க..
உதடு..துடிக்க..
கவிகள்..படைத்தேன்…
என்..கனவில்..

நிஜங்கள்..தினமும்..
நெருப்பாய்..வருட…
கனவில்..கிடைக்கும்..
நிம்மதி..நீ

தொடரும்..என்றோ…
முடியும்..என்றோ…
பதில்..இல்லாத..
தொடுவானம்..நீ

சுகமும்..உண்டு..
வலியும்..உண்டு…
வாழ்வின்..சக்கர..
சுழற்ச்சியும்..நீ

இத்தனை..புரிந்தும்..
பொய்யே..உன்னை..
மெய்யென..நினைக்கும்..
உறுதியில்..நான்…

இன்பம்..என்பதும்..
துன்பம்..என்பதும்..
அவரவர்..மனதின்..
எண்ணம்..போல்…

மனதில்..நீ..தான்..
நீயே…தான்..அதுதான்..
கனவிலும்..வந்தாய்..
இது..நிஜந்தான்….

5 comments ஏப்ரல் 28, 2008

வலி

அடிக்க…அடிக்க…
அம்மியும்..நகருமாம்..
நானும்..நகர்ந்தேன்..
உனை..விட்டு……

Add comment ஏப்ரல் 24, 2008

மெளன..மொழி….

பார்வையால்…
பாதை..விரித்து…வைக்கிறேன்…
வந்து விட..மாட்டாயா?..
விழி..வெண் படலத்திற்கு….

வெட்கத்தை…
வீசிச்செல்கிறென்…
வழி..பிடித்து..
வரத்தெறியாதா..?..
இதயத்தின்..வாசலுக்கு…

சுவை..சுமக்கும்…
இதழ்..விரித்து…
உயிர்..திறக்கிறேன்..
கலந்து..விடத்தோன்றவில்லையா..?
காதலின்..கருவில்…

நின்ற..இடத்திலேயே..
கை..நீட்டி..அழைக்கிறாய்..
ஓட..மறந்த…நதியாய்..

நான்..
இன்னும்..கற்கவேண்டுமோ?..
காதலின்..
மெளன..மொழி..

 

2 comments ஏப்ரல் 23, 2008

உண்மை…

எல்லா..ஆணின்..
வெற்றிக்குப்பிண்ணும்…
பெண் தான்..இருக்கிறாள்..
அவன்…
தோற்றவைகளின்..
கோபங்களை…
சுமந்தபடி..

1 comment ஏப்ரல் 21, 2008

பிரியங்காவும்..நளினியும்

கொதித்த..ரத்தமும்..
குவிந்த..துயரமும்…
குறைந்திருக்கலாம்…
காலக்குளிர்ச்சியால்…

பிசைந்த..கரங்கள்..
தளர்ந்து..இளகி…
கைகுலுக்கிக்…கொண்டதோ….
நேசமுடிவில்…

பிரியங்கா…பார்வையை..
சந்தித்த..பொழுது…
என்ன…நினைத்தீர்கள்…நளினி…?

சரியென்றும்..தவறென்றும்..
விவாதங்கள்..இருக்கட்டும்…

அஹிம்சை..என்பதும்…
அறவழி…என்பதும்…
அண்ணல்..காட்டிய….
வழிதானே….

இருந்தும்..இன்று..
ஏனிந்த..கூச்சல்…
இருக்கட்டும்…
இந்த…இயல்புதானே…

கொடுமை..செய்வதும்…
கோபம்..கொள்வதும்..
மட்டும்..மனித…
குணமல்ல..

மண்ணிப்பதும்…
கொஞ்சம்..மறப்பதும்..கூட..
மனித..மனம்தான்…
மானுடர்களே….

Add comment ஏப்ரல் 18, 2008

காத்திரு..

adfsdஎன்.அன்பு..கொட்டுகிறது..
அருவியாய்…
காதலாக…மாறி..
நடைபயின்று…
உன்னுடன்..கலக்கலாம்…
காத்திரு..
என்..கடலே….

 

1 comment ஏப்ரல் 16, 2008

சுகமாய்…

பச்சை..பசும் புல்லில்….
பாதம்..பதித்த..சுகமாய்….

பிஞ்சுக்குழந்தை…ஸ்பரிசம்…
கண்ணம்..தீண்டிய..சுகமாய்..

பால்..வழியும்..முழுநிலவை…
பார்வை..குடித்த…சுகமாய்….

காத்துக்கிடந்த..நிமிடம்..சரியாய்..
சிரித்து..வந்த..சுகமாய்…

நேற்று..தொலைத்த..முத்து…
இன்று..கிடைத்த..சுகமாய்…

காமம்..கழித்த..காதலர் கண்டு…
கண்கள்.பனித்த..சுகமாய்…

சோகம்..கொண்டு..உள்ளம்…
சோம்பிக்கிடக்கும்..நேரம்…

வார்த்தை..கொண்டு…வருடி…
வலிகள்..தீர்த்த..சுகமாய்….

ஏதோ..ஒன்று..முளைக்கும்…
இயல்பாய்..வாழ்வில்..சுகமாய்…

காத..தூரம்..நடக்கும்…
துயரக்காட்டின்….வழியாய்….

Add comment ஏப்ரல் 15, 2008

குற்ற உணர்வு…

நான்..உண்ண..
அமர்ந்த..உணவில்…
கூட்டமென..இருக்கிறது..
எறும்பு..

தட்டிவிட்டு..
உண்ணச்சொல்கிறது…
பிடிங்கித்திண்ணும்..உறுத்தலில்லாமல்…

ரோஜாச்செடியில்..
சுற்றிப்படர்ந்து…
பசுந்திருக்கும்..
சங்குபுஷ்பம்..
வெட்டிப்பிரிக்கையில்….
வலிக்கவில்லை…அதன்..
வாழ்வைகெடுப்பதாய்…

கூரையில்..கூடுகட்டி..
காற்றை கிழித்து…
தன் குரலால்..
தூக்கம்..கெடுக்கிறதென…..
அதன்  வீட்டை..பிரிக்கையில்…
பழகிய..வீடு..
பிரிந்த..துக்கமில்லை….

இப்படித்தான்…
இயல்பாக…நடந்துவிடுகறது..
உறுத்தலற்ற….குற்றங்கள்…..

தேற்றிக்கொள்கிறேன்…
அவைகளும்..யோசிக்கும்….
எனக்களித்த…தொந்தரவுகளை…
என்ற..எண்ணத்துடன்

Add comment ஏப்ரல் 15, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

ஏப்ரல் 2008
தி செ பு வி வெ ஞா
« மார்   மே »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Posts by Month

Posts by Category