Archive for மே, 2008




ஏக்கம்..

உன்னை..
பிரிந்துகிடக்கவே..
நினக்கிறது..மனம்..
உன்னை…
நினைத்து..துடிக்கும்..
நிமிடங்களுக்கு..ஏங்கி…..

Add comment மே 31, 2008

தனித்தனியே…

தனித்தனியே..
இருப்போம்..
தன்டவாளங்களாய்..
நம்..மீது..
பயனிப்பவர்கள்…
பத்திரமாய்..
இருக்கட்டும்..

2 comments மே 30, 2008

என்..காதலே..

என்..காதலே….
உனக்கென்று…
உருவமில்லை….
நான்..படைத்த….
கடவுள்..நீ..

நான்..
மனுஷி என்பதனால்…
வேடமிட்டு..வந்த..
மனிதன்..நீ..

நானென்றும்…
நீ..யென்றும்..
வேறில்லை..
என்றாலும்..
நான்..வேறு..
நீ..வேறு..
நான்..ரசிக்கும்..
நொடியில்..நீ..

நிலவாக..
வளர்ந்துவிடு..
என்..இரவின்..
வீதியெங்கும்…

நிலமாக..
விரிந்துவிடு..
நான்..வாழும்..
பூமியெங்கும்..

கவியாக..
மலர்ந்துவிடு..
நான்..பேசும்..
மொழியெங்கும்..

கை..கால்கள்..
முளைத்திட்ட…
காற்றாக..நிரம்பிவிடு..
நான்..சுமக்கும்..
உயிரெங்கும்..

2 comments மே 30, 2008

தனிமை..

நண்பர்கள்..வந்துசேர..
நடக்கின்றது..இங்கே…
திருவிழா..

சத்தங்களாலும்..
சிரிப்புகளாலும்…
சிலிர்க்கிறது…என்..வீடு..

காற்றை.கலைத்தது..
உண்டு..விட்ட..
ஏப்ப..வாடை…

ஒரே..பாடல்..
பலரின்..பிரதிபலிப்பாய்..
வித..வித…உணர்வுகள்..
பாடிக்களித்த..மொட்டைமாடி..

நிலாச்சோற்றில்…
கசிந்தன..
கவிதைகளும்..
கண்களும்..

அனைவரும்..கிளம்ப..
அடர்ந்து..அடங்கிகிடக்கிறது..
முன்பிருந்த…ஒலி…

“நான்..என்ன..செய்வது.!”என்கிறது..
தனித்து..விடப்பட்ட..
என்..மொழி..

 

2 comments மே 29, 2008

வந்துவிடு..

உனை..கடைசியாய்..
பார்த்த..நொடியோடு..
நின்றுவிட்டது..என்..
உலகச்சுழற்ச்சி…

பாதி..திரும்பிய…
பூமியாய்..
இருண்டுகிடக்கிறது..
சந்தோசப்பிரதேசங்கள்…

உனைதிரும்ப..ப்பார்க்கும்..
சந்தர்ப்பத்திற்காய்..
சதிகள்..தீட்டுகிறது..
இதய..மிருகம்..

ஒருமுறை..போதும்
நம்..விழிகள்மோத..
விலங்கு குணம்..
வென்று..நான்..
மனித..மனம்..கொள்ள…

சதிகளை..முறியடிக்காமல்..
சடுதியில்..வந்துவிடு…
விடுதலை..தந்து..
பூமி..வெளிச்சம்..
கொள்ள..விடு

2 comments மே 27, 2008

போல…

சூரியன்..சுமக்கும்..
சுடுகதிர் போல…
சூழ்நிலை ..சுமக்கும்..
விளைவுகள்..போல..

மேகங்கள் ..சுமக்கும்..
நீர்த்துகள்..போல…
மோகங்கள்..சுமக்கும்..
முத்தங்கள்..போல..

விளைநிலம்..சுமக்கும்..
வேர்கள்..போல..
வெண்ணிலா..சுமக்கும்.
விந்தைகளைப்போல..

மனங்கள்..சுமக்கும்..
நினைவுகள்..போல…
மலர்கள்..சுமக்கும்..
மகரந்தம்..போல..

எனக்குள்..நானும்..
உன்னை..சுமக்கிறேன்….
இனிதாய்…
இயல்பாய்…
இயற்கையைப்போல….

 

Add comment மே 26, 2008

ச்சீ..ச்சீ..

என்..வீட்டை கடக்கும்..
உன் கால்களில்..ஒட்டிச்..
சிதறிய மண்துகளும்…
என்..விரல்விட்டு..
சிந்திய கோலப்பொடியும்..
ரகசியம்..பேசுகிறது..
நம் காதல் நாடகம்பற்றி…
என் வீட்டு வாசலில்…

நீ..கானாத பொழுது..
உனை தொட்டுத்திரும்பிய…
என் பார்வை..எனை..
முறைத்த படியே..
உட்செல்கிறது..
என்..விழிபடலத்திற்க்குள்..

நீ..வெளியேற்றிய..
மூச்சுக்காற்றும்..
நான்..வெளியேற்றிய..
மூச்சுக்காற்றும்..
எதிர்பாராமல்..சந்தித்தால்..
நித்திய..சந்திப்பின்..
நிச்சயமின்றி..
இணைந்து விடும்..
இன்னொரு..பெருமூச்சு..

“பிடித்திருக்கிறது”என்று..
பிறக்க..காத்திருந்த..வார்த்தை..
பொருமை..இல்லாமல்..
எனை..”எருமை”..
என..திட்டுகிறது..

கனவுகளிலாவது..
கை..கூடிவிடாதா?..
என காத்திருந்த  கரங்கள்…
காத்துகிடக்கிறது…
மூளையின்..கட்டளைக்கு..

இத்தனை..புரிந்தும்..
நாணம் எனும்..கோணிமூடி…
நடிக்கிறது..பொண்மை..
காதலா!
ச்சீ..ச்சீ..என்று…

4 comments மே 22, 2008

சண்டைக்காரி….

என்…
ஏன்?..என்ற..கேள்விக்கும்..
எதற்க்கென்ற..வினவளுக்கும்…
பல..பதில்கள்..தேடி..அலையும்..
உன்..பொறுப்பற்றத்தனம்….

எந்த..உறுத்தலுமின்றி…
எல்லா..மறத்தலுக்குமிருக்கும்..
ஏதோ..ஒரு..காரணம்…

குற்றங்கள்..அனைத்தும்..
குறைவின்றி..செய்தாலும்…
கூசாமல்..வைப்பாய்..
எனக்கொரு..பெயர்…
“சண்டைகாரி”..என்று.

Add comment மே 21, 2008

முடியாதது..

ஒவ்வொரு..நொடியும்..
ஒவ்வொருவரிடமும்..
சொல்லி..த்திறிகிறேன்..
உனை..மறந்து..விட்டென்..என்று..
அந்த..நொடியில்..
உனை..நினைத்த..கொண்டு..
அவர்களையும்..நினைக்க வைத்து..

Add comment மே 20, 2008

அளந்து..வைக்க….

கைகள்..வீசி அளக்கின்றேன்..
காற்றின்..அடர்வு தனை…

பாதங்கள்..கொண்டு..அளக்கின்றேன்..
பாதையின்..நீளம்..தனை..

பேசி..ப்பேசி…அளக்கின்றேன்..
பேச வேண்டிய..வார்த்தை தனை…

பார்த்து..பருகி..அளக்கின்றேன்..
நிலவொளியின்..குளிர்வு தனை…

கொடுத்து..பெற்று..அளக்கின்றேன்..
நட்பு..கொண்ட..உறுதி..தனை…

எதனை..கொண்டு.அளந்து..வைக்க…
உனக்கும்..எனக்குமான..உறவு.. தனை…

உலகம்..கொண்டு..அளந்து..வைக்க..
இன்னொரு..உலகம்..வேண்டும்..இங்கே..
உயர்ந்து..குவிந்த..நம்..காதல்..தனை..

Add comment மே 20, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

மே 2008
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Posts by Month

Posts by Category