Archive for மே 5th, 2008
எண்ணங்கள்..வண்ணங்கள்….
நிஜங்கள்..நிறங்கள்..
நித்தமும்..வழியும்…
சுற்றுகிற..பூமியில்..
வண்ணத்தை…பொழியும்…
குணங்கள்..மனங்கள்..
மாறும்..தருணம்…
கலந்து..மறைந்து..
புதிதாய்..பிறக்கும்…
இன்பம்..சிறிதாய்…
திறக்கும்..நொடியில்…
வெளிர்ந்த..நீலமாய்..
வானத்தின்..வண்ணத்தில்…
இன்னும்..அதிகமாய்…
பூரித்து…மகிழ்ந்தால்..
இள..மஞ்சள்..மென்மையாய்…
பூக்களாய்..செரியும்….
கோபமாய்..செல்லமாய்…
முரைத்து..விலகினால்..
செவ்விளம் சிவப்பாய்..
காரத்தின்..நிறமாய்…
ஒதுக்குகின்ற..வெறுப்பாய்..
உயிரையும்..சிதைத்தால்
சூரிய..வண்ணமாய்..
தீப்பிழம்பாய்..ஜொலிக்கும்…
காதலில்..கலந்து…
கரைகின்ற பொழுது…
ஆளிலை…பச்சையாய்..
ஆத்மாவில்..சுரக்கும்….
காமமும்..கடந்து..
காதலில்..நிறைந்து…
விழிநீர்..கலக்கையில்..
உண்மையாய்..வெண்மையாய்…
நெஞ்சத்தில்..நிறையும்..
பிடித்த..நிறங்கள்…
நடத்தையில்..கொள்வோம்..
அது..மட்டும்..ஒளிர..
அடுத்தடுத்து..செய்வோம்…
வண்ணங்கள்..சுமக்கும்..
வானவில்..வாழ்க்கை…
எண்ணங்கள்..முழுதும்..
வேண்டும்..அந்த..வேட்கை…
Add comment மே 5, 2008
வெட்கம்..விட்டு….
பூங்கொத்தெடுத்து…
முகம்மூடி …கொள்கிறேன்…
வலிக்குமடி..என..
பிரித்தெறிகறாய்…
புடவைத் தலைப்பில்..
புதைக்கிறேன்..அழகை…
சரி..தான்..போதுமென…
இழுத்து பறிக்கிறாய்….
விரல்கள்..பத்தும்…
பதிய..ப்பொத்தினேன்..
இடுக்கில்..வழியும்..
வெட்கம்..கண்டெடுத்தாய்…
இத்தனை…நாளும்..
பார்த்த..முகம் தானே..
இன்று..என்ன..உனக்கு..
ஒளிவட்டம்..தெரிந்தது…
ஒவ்வொரு..நொடியும்…
உனை..முரைத்து..சிவந்த..
விழிதானே..
இன்றென்ன..மயக்கம்..
எனை..வெட்டிச்சாய்க்கும்..
உன்..சீன்டல்..கண்டு
பேசாமல்..சொல்லிவிடு..
இதுதான்..காதல்..என்று..
நானும்..ஒத்துவிட்டு..போகிறேன்…
இந்த..கஷ்டம்..விட்டு….
2 comments மே 5, 2008