Archive for மே 10th, 2008
விழி..க்கணக்கு..
பால்..பொழியும்..
நிலவொளியில்..
உன் விழிபொழிய…
எனை..நனைத்தாய்..
யாருமற்ற…வீதியில்..
அவசரமாய்..எனை..
தொட்டுச்சென்ற..உன் பார்வை..
முட்டிமோதி..சிரிக்கும்..
காயவைத்த…என்..உடையில்..
எனக்கு..அனுப்பிய..
உன் புண்ணகை..
இடம் மாறி முழிக்கும்..
இடையில் வந்தவர்களால்..
தைரியமற்ற..என்..
ரகசிய பார்வை..
எதிர்பாராமல்..
உன்..விழியில் மோத..
கூக்குரலிடுவாய்..
பாட்டிசைப்பாய்..
உன் அழகு முகம்.
ஆழ்ந்து..பார்த்து..
அருகருகே..இருப்பதிவிட…
பார்வையை.செலவு..செய்து..
காதலை..வரவு வைக்கும்..
இந்த..விழிக்கணக்கு..
இனிக்கிறது..இனிதாய்..
6 comments மே 10, 2008