Archive for மே 17th, 2008
தேடி..த்தேடி..
உனை..தேடி..த்தேடி…
தொலைகின்றேன்…
எனை..தொலைத்து…தொலைத்து..
உனை..தேடுகின்றேன்…
காதலின்..திருவிழாவில்..
இன்னும்..கைப்பிள்ளையாக….
அசைந்து..வரும்..தேரில்..
அம்மனாக…
தெறித்து..விழும்..
நீர்த்துளியில்..தீர்த்தமாக…
வாங்கப்படும்..பொருளில்..
கிளுகிளுப்பையாக…
விற்க்கப்படும்..பொருளில்..
சர்க்கரை..மிட்டாயாக….
மாறிக்கொண்டெயிருக்கிறது..
திருவிழா..இடமும்..
என்..வேசமும்…
சீக்கிரம்..கிடைத்துவிடு…
திருவிழா..முடிவதற்க்குள்..
அல்லது..என்..
சுயமுகம்..வருவதற்க்குள்..
Add comment மே 17, 2008
படையல்..
எனக்கு..பிடித்த..
பல காரங்கள்….
விரும்பும்..கலரில்..
புத்தம்..புது துணி…
மல்லிகை..இன்னும் பிற..மாலைகள்…
நான்…சூட…
எதுவும்..அனுபவிக்க..முடியாமல்..
இது என்ன…பொழப்பு…
புகைப்பட..சட்டத்திற்க்குள்..நான்
Add comment மே 17, 2008