Archive for ஜூன், 2008




வசந்தம்..வாசலில்..

இன்றென்ன..திருவிழாவோ?..
இப்படி..ஒரு  மகிழ்ச்சி..

பொங்கி வரும்..உன் நினைவால்..
பெருகுகிறது…மலர்ச்சி…

வழிகின்ற..விழி மயக்கம்..
விதை..எங்கும்..த்தூவ..

பதிகின்ற..பார்வையெல்லாம்..
பூக்காடு..பூக்கும்..

வருகின்ற..உன் வார்த்தை…
வருடும்..மழலை.. விரலாய்..

புரிகின்ற..அர்த்தமெல்லாம்..
பூப்பெய்தும்..மங்கை..வடிவாய்…

ஒரு போது…விலகாமல்..
உனை..நானும்..ஆள..

மறுப்பேதும்..சொல்லாமல்..
வரம் தந்து..நீ..வாழ..

சூழ்கின்ற..போரெல்லாம்…
சுட்டெரிக்கும்..நம்..காதல்..

இனி..வாழ்கின்ற..நாளெல்லாம்..
வசந்தம்..நம்..வாசல்…

Add comment ஜூன் 28, 2008

வாசம்..

பூக்களின்..தெருவெங்கும்..
புண்ணகையின்..வாசம்..

ஈக்களின்..தெருவெங்கும்..
இதழ் பருகிய தேன் வாசம்..

நட்பின்..தெருவெங்கும்..
நம்பிக்கையின்..வாசம்..

நாட்களின்..தெருவெங்கும்..
நிறைந்த..நொடிகளின்..வாசம்..

கனவுகளின்..தெருவெங்கும்..
உன் கரம்பிடித்த..வாசம்..

நினைவுகளின்..தெருவெங்கும்..
அதனால்..நிம்மதியின் வாசம்…

என்..கவிதையின்..தெருவெங்கும்..
நம்..காதலின்..வாசம்..

நம்..காதலின்..தெருவெங்கும்..
உயிர்..கலந்திட்ட..வாசம்

Add comment ஜூன் 25, 2008

காதலானோம்..

நீ..ஒரு..துளி..
நான்..ஒரு..துளி..
கடலானோம்….

நீ..ஒரு..ஒளி..
நான்..ஒரு..ஊடகம்..
வெளிச்சமானோம்..

நீ..ஒரு..மொழி..
நான்…ஒரு..வார்த்தை…
கவிதையானோம்..

நீ..ஒரு..மணம்..
நான்..ஒரு..மலர்..
சோலையானோம்…

இவையனைத்தும்..
நிகழும்முன்..

நீ..ஒரு..உயிர்..
நான்..ஒரு..உயிர்..
காதலானோம்…

Add comment ஜூன் 24, 2008

காதல்..சிறையில்..!

வெகு..துராம்..
சென்றிருக்கிறாய்..
என்..நினைவுகளை..
தவிக்கவிட்டு…

நீ சென்ற..
வாகனத்தை..துரத்தும்..
உன்னிலிருந்து..
பயனப்பட்டு..பழக்கப்படாத…
என்..அன்பு.

விடைபெறும்..நொடியில்..

உறுதியளித்த..உன் பார்வையில்..
ஊசலாடிக்கொண்டிருக்கிறது..
உயிரின்..எச்சங்கள்..

திரும்பிவிடுவாய்..எனும்..
திடமான..உண்மை..தெரிந்தும்..
ஏனோ..சலசலக்கிறது..மனம்..
கூலாங்கற்களுடன்..
கும்மியடிக்கும்..நதியாய்..

சமாதானமாய்..
வெள்ளை..கவசமணிந்து..
யாருடன்..
போரிட்டுக்கொண்டிருக்குமோ!..
உன் கைகள்..வாள்களாய்..

ஆயிரம்..சாம்ரஜ்யங்கள்..
அள்ளி..வந்தாலும்..உனை..
திரும்பபார்க்கும்…நொடிபோல்..
மகிழ்வில்லை..
எப்பரிசும்..எவ்வெற்றியும்..

நீ..வந்து விடும்..தினத்தில்..
மனவலிகள்..மறக்கும்..
ஞாபக..மறதியாய்…
உறுதியாய்..

என்றாலும்..தன்னை..
தோற்கடித்து..
மீறிச்சென்றதால்..
உன்னிடம்..வரமறுத்து..
சிறைபடுத்திக்கொண்டிருக்கிறது..
என்..காதல்

3 comments ஜூன் 22, 2008

காலம்..பூப்பெய்தும்..

கால்..ஆண்டுக்கொருமுறை…
காதலோடு..அமர்வோம்..
கடந்திட்ட…நொடிகளை…
கண்களுக்குள்…தேடி…

இறந்திட்ட..நிமிடங்களின்..
இம்சைகள்..உணர்வோம்..
புரிந்திட்ட..ரணங்களின்..
புண்களுக்கு..மருந்திடுவோம்…

சிலிர்த்து..சிவந்த..நொடிகளை..
மகிழ்வாய்..பகிர்வோம்..
சிவந்து..மலர்ந்த..தினங்களை…
நெகிழ்வாய்..ரசிப்போம்..

காரணத்தோடு..நடந்த தவறுக்கு..
மண்ணிப்பு..வழங்குவோம்..
காரணமின்றி..நடந்தவைகளை..
கழித்து..விடுவோம்..
நானே..குற்றவாளி…என..
உன்..மடியில்..விழுவேன்..
நானே..குற்றவாளி…என..
என்..விழியய்..த்தொழுவாய்..

கலந்து..அழுகையில்..
நம்..காதல்..பலப்படும்..
கரைந்து..எழுகையில்..
வரும்..காலம்..பூப்பெய்தும்..

3 comments ஜூன் 22, 2008

காதலும்…

காதலும்…
கணிப்பொறி தான்..
எதை..பதிகிறாயோ..
அதைதான்..பெறுவாய்…

காதலும்..
வானொலிதான்..
எந்த..அலைவரிசை..
என்பதும்..
உன் முடிவு..

காதலும்..
தொலைபேசிதான்..
எதிர்முனை..
யார்..என்பது..
உன்..கையில்

காதலும்..
வெறும்..
கருவிதான்..
ரத்த..சதைகொண்ட..
உயிராக்குவதும்..
நீதான்..

Add comment ஜூன் 16, 2008

பந்தயக்குதிரைகள்..

வரிசைகட்டி..
நிற்கிறது..
வார்த்தைகள்..
தொலைபேசி…
ஒலிக்குமுன்னே…

மெளனங்களும்..
தவிக்கிறது..
அவற்றை…
இடித்துக்கொண்டு…

ஒலித்ததும்..
தயாராகிறது..
பந்தய…
குதிரைகளாய்…

பேசிமுடித்ததும்..
எனை..
வழிமறிக்கிறது…
தோற்ற…குதிரைகள்..

சமாதான..முயற்ச்சியாய்…
மீண்டும்..தொடரும்..
பந்தய..நொடிகள்..

அவைகள்..அறியுமா…
என்..வெற்றியிம்..
சூட்ச்சுமம்…

 

Add comment ஜூன் 14, 2008

மி ச்சப்படி..

கனவில்  வருகிறாய்..
கண்கள் சிரித்தபடி..அக்
கண்களால்..
எனை..எடுக்கிறாய்..
காதல்..கசிந்தபடி…

பரிசை..தருகிறாய்..
பிரிவை..நிரப்பியபடி…
மகிழும்..என்..அகத்தை..
மலர்ந்து..ரசித்தபடி..

காதல்..ஒருபடி..
அதில்..கலந்து..
குடித்தபடி…
காலம்..உள்ளவரை..
இக்காதல்.வாழும்படி…

கனவுதானா…என..
எண்ணும்..மனம்..
துடிக்கும்..விழித்தபடி..
பின்..உணரும்..அது..
உனை..எதிர்பார்க்கும்
நினைவின்..மிச்சப்படி…

Add comment ஜூன் 9, 2008

எதிர்மறை..

நிகழ்ந்துவிடக்கூடிய…
பூகம்பங்களுக்கு..
பயந்து  தான்..
நீ..வரக்கூடாது..
என்று..
வேண்டிக்கொண்டேன்..
வராமல்..
போனபோதும்..
நிகழ்ந்தது…
அதே..அறிகுறிகள்..
என்..இதயத்தில்…

Add comment ஜூன் 6, 2008

திருக்காதல்…

தூரத்தில்..
வெண்ணிலவு…
பால்..வெளியில்..
நாம்..இருவர்…

தோள்.உரசும்..
அருகாமை..
தொட..விரும்பா…..
மன…நிலைமை…

மூடாத..
பூக்களைப்போல்..
மலர்ந்து..விரிந்த..
என்..விழிகள்..

ஆடாத..வண்டினமய்..
அடர்ந்த..உன் பார்வை..
அதில்..ஆழமாய்..

நிறை குடம்..
தழும்பிய..
நீர்த்துளியாய்..
விழி..நீர்த்தள்ளி..
நீ.சிரித்தாய்..

குறையாத..காதலின்.
குறிய்யீட்டாய்…
வெட்கிச்சிரித்தேன்..நான்..
வெள்ளந்தியாய்…

ஈரேழு..உலகமும்..
இணைந்து…சுருங்கியது…
இருவரும்.அமர்ந்த..
இரண்டடிக்குள்…

கோல்..கொண்டு…
படைத்த…
திருக்குறள்..போல்..
புது..பூமிதனை..
படைபோம்…
நம்..திருக்காதலால்..

Add comment ஜூன் 2, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

ஜூன் 2008
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Posts by Month

Posts by Category