காதல்..சிறையில்..!
ஜூன் 22, 2008
uumm
Tags: Add new tag
வெகு..துராம்..
சென்றிருக்கிறாய்..
என்..நினைவுகளை..
தவிக்கவிட்டு…
நீ சென்ற..
வாகனத்தை..துரத்தும்..
உன்னிலிருந்து..
பயனப்பட்டு..பழக்கப்படாத…
என்..அன்பு.
விடைபெறும்..நொடியில்..
உறுதியளித்த..உன் பார்வையில்..
ஊசலாடிக்கொண்டிருக்கிறது..
உயிரின்..எச்சங்கள்..
திரும்பிவிடுவாய்..எனும்..
திடமான..உண்மை..தெரிந்தும்..
ஏனோ..சலசலக்கிறது..மனம்..
கூலாங்கற்களுடன்..
கும்மியடிக்கும்..நதியாய்..
சமாதானமாய்..
வெள்ளை..கவசமணிந்து..
யாருடன்..
போரிட்டுக்கொண்டிருக்குமோ!..
உன் கைகள்..வாள்களாய்..
ஆயிரம்..சாம்ரஜ்யங்கள்..
அள்ளி..வந்தாலும்..உனை..
திரும்பபார்க்கும்…நொடிபோல்..
மகிழ்வில்லை..
எப்பரிசும்..எவ்வெற்றியும்..
நீ..வந்து விடும்..தினத்தில்..
மனவலிகள்..மறக்கும்..
ஞாபக..மறதியாய்…
உறுதியாய்..
என்றாலும்..தன்னை..
தோற்கடித்து..
மீறிச்சென்றதால்..
உன்னிடம்..வரமறுத்து..
சிறைபடுத்திக்கொண்டிருக்கிறது..
என்..காதல்
Entry Filed under: கவிதை
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
vijaygopalswami | ஜூன் 22, 2008 at 5:19 பிற்பகல்
காமத்துப் பாலிலே ஒரு குறள் உண்டு:
தலைவனே, நீ போய் வருகிறேன் என்று என்னிடம் ஏன் சொல்லுகிறாய், நீ திரும்பி வரும்போது யாரெல்லாம் உயிரோடு இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுப் போ, என்று தலைவி சொல்வதாக அமைந்த குறள். கருத்து மட்டும்தான் ஞாபகம் வந்தது. குறள் நினைவுக்கு வரவில்லை. தங்களது இந்தக் கவிதை அந்தக் குறளை நினைவுபடுத்தியது.
வாழ்த்துக்கள்….
2.
uumm | ஜூன் 24, 2008 at 8:33 மு.பகல்
நலமா…விஜய்..கவிதையில்..சந்தித்து..வெகுநாட்கள்…ஆகிறதே…உங்கள்..மறுமொழிக்கு..நன்றி.
3.
vijaygopalswami | ஜூன் 25, 2008 at 7:06 பிற்பகல்
வணக்கம் அக்கா. நலமாக இருக்கிறேன். என்னுடைய கவிதையை ரசித்த நீங்கள் அதில் உங்களைப் பகடி (பின் நவீனத்துவ வார்த்தை) செய்திருப்பதைக் கவனித்தீர்களா இல்லையா?