Archive for ஜூலை, 2008




மகனே..உனக்காக…

விழித்திருக்கும்..
எங்கள்..விழிகளுக்குள்..
உறங்குகின்றன…
எங்கள்..கனவுகள்..

உறங்குகின்ற..
உந்தன்…விழிகளுக்குள்..
விழிக்கத்துடிக்கும்..
உந்தன்…கனவுகளுக்காக..

2 comments ஜூலை 30, 2008

தனித்தனியே..

L o v  e b e a t s

ஒவ்வொரு..
அழகையும்..ரசித்து..
ஒவ்வொரு..
உறவையும்..நேசித்து..
ஒவ்வொரு..
முறையும்..துடித்து..
இதயம்…ஒவ்வொன்றும்..
ஒன்றுபோல் தான்…
மூளைதான்..இருக்கவைத்தது..
தனித்தனியே..தவமாய்…

(மேலும்…)

2 comments ஜூலை 29, 2008

காலம்…

அன்பான புண்னகை..
அழகான..வார்த்தை..
இனிமையான..செயல்கள்..
இப்படித்தான்..செய்கிறேன்..
அனைவரையும்..புரிந்துகொள்ள..

இப்படியே..
கடந்துகொண்டிருக்கிறது…
என்னை..
புரிந்துகொள்வதற்க்கான..
கால அவகாசமும்..
என்..
எதார்த்த..உலகமும்..

Add comment ஜூலை 28, 2008

அதே..வாசலில்…

நட்பின்…வாசலில்..
நாம்தான்..வரைந்தோம்…
நண்பர்களாய்..நம்மை..

என்னை..நன்கு..
புரிந்ததன்..நம்பிக்கையில்..
எப்போதும்..கொட்டிவிடுவேன்..
உள்மன..உறுத்தல்களை…
உலறல்களாய்…உன்னிடம்.

உன்னை..
அறிந்ததன்..
அர்த்தமாகத்தான்..
வாதிடுவேன்..உனக்காக..
உன்னுடையவர்களிடம்…

வார்த்தைகளின்..
துளிமழையிலும்..
அடர்மழை..கொட்டியதாய்
அழிந்து கொண்டிருக்கிறது…
நம்..நட்ப்பின்..
வரைபடம்…

ஆனாலும்..இருக்கிறேன்..
அழிந்திட்ட..நிலையிலும்..
அதன்..அச்சிருக்கும்…
நம்..நெஞ்சில்..
என்ற…
அழியாத..நம்பிக்கையுடன்..
அதே..வாசலில்..
நான்.

2 comments ஜூலை 24, 2008

கிடைக்கவில்லை…

நெடுநேர..
த்தேடலுக்குப்பின்..
கிடைத்தது..உன்.
பழையமுகம்..

முன் இரண்டு பல்லில்..
ஒன்று கொஞ்சம்..உடைந்திருப்பது…
உன்.சிரிப்பை..
மறந்த.. நிலையிலும்..
மறக்காமல்..மனதில்…

பல கோடி..
மனித..நடையிலும்..
உன் நடை மட்டும்…
ரிதமாய்..பதிவாகியிருக்கிறது..
விழிகளின்..தாளத்தில்..

விலகாமல்..ஒன்றோடொன்று…
ஒட்டியிருக்கும்..
பாதவிரல்கள்
என் பார்வை..வெகுவாய்..
பதிந்திருந்தபடியால்..
அழியாமல்..அப்படியே….

இன்னும்..இன்னும்..தேட..
தொலைந்த..உன் வடிவை.
ஒருவழியாய்..
மீட்டெடுத்தேன்..

ஆனாலும்..கிடைக்கவில்லை..
பதிவுகளின்..காலமும்..
பதிந்திட்ட..காதலும்…

Add comment ஜூலை 23, 2008

வாழ்ந்திடட்டும்..

சிலு..சிலுவென..காற்றாகி..
சிறு..சிறுவென..த்துளியாகி…
விறு..விறுவென.வழிந்தோடி…
பெருமழையாய்…பெய்கிறது…
மழை…

அசரீரியாய்..குரல்கேட்டு…
மெது  மெதுவாய்..முகம்தோன்றி..
நடப்பது போல்..ஒலிகேட்க..
என் உயிராய்..நிறைகிறது..
உன்..நினைவு…

குளிர்ந்துவிட்ட..பூமியைப்போல்..
குவிந்துவிட்ட..காதல் மேட்டில்..
குதிக்கிறது..என் சலங்கைக்கால்கள்..
சிறுபிள்ளையின்  குறும்பினைப்போல்…

மழை வெள்ளம்..மக்களுக்காய்..
உன் நினைவெல்லாம்..என் மனதிற்காய்..

பயிர்வளர்ந்து  தழைத்தோங்கி..
மனித உயிர் வாழ்வதுபோல்..
நினைவென்னும்..விதைத்தூவி…
வாழ்ந்திடட்டும்..என்
கவிதைக்காடு…

Add comment ஜூலை 21, 2008

பாவமன்னிப்பு…

வார்த்தைகளோடு..
வழக்காடுகிறது…
என்  மெளனம்..

உன்னோடு…
பேசாத..நட்களில்..
இறுகிக்கிடக்கிறது…
நிமிடங்களுக்கிடைப்பட்ட..தூரம்..

கோபம்..குறைந்து..
குளிர்ந்த..நொடியில்…
எப்படி சந்திப்பேன்..
உன் புன்சிரிப்பையும்..
அதற்க்குப்பின்..கிடக்கும்
நான்..உண்டாக்கிய..காயத்தையும்…

நீ..பேசும்..நீளம் வரை..
இப்படித்தான்..ஜெபிக்கிறேன்..
பாவமன்னிப்பு கேட்க்கும்..
பைத்தியகாரியாய்…

Add comment ஜூலை 18, 2008

இழக்க..விரும்பாதது..

தினந்தோறும்..
சந்திக்கிறோம்…
தெருவோர..
நேர்காட்டில்…

எனை..கடக்கும்..நீயும்..
உனை ..கடக்கும்..நானும்..
மறக்காமல்..
திரும்பிப்பார்க்கிறோம்…
நமக்கிடைப்பட்ட..
ஒரு புள்ளியை….

கவிதைகள்..சுமக்கும்..
என்..கண்களும்..
கனவுகள்..சுமக்கும்..
உன்..கண்களும்..
சந்திப்பதே..இல்லை..
சங்கடப்பட்டு..
என்..பேருந்து..
புறப்படும்..நொடியிலோ..
உன்..பேருந்து..
புறப்படும்..நொடியிலோ..
முடிந்துவிடுகிறது…
நம்..ஒரு நாளின் முடிவு..

சத்தங்களை..
விதைத்து..
சந்தோசங்களை..
அறுவடை..செய்கிறோம்..
அதே..நேர்கோட்டில்..

மெளனத்திற்க்குள்…
நடக்கும்..
இம்மனச்சண்டையில்..
இதமான..வெற்றி..
இருவருக்கும்..

தவறிக்கூட..
வரவேண்டாம்..
வார்த்தைகள்…
இழந்துவிடக்கூடும்..
இந்த..இனிமையை…

5 comments ஜூலை 12, 2008

தொலைந்த..கவிதை..

என்  ..
கவிதைபுத்தகம்..
தொலைந்த..போதே..
தெரியவில்லை..
என்…
கவிதையும்..
தொலையுமென்று…

விபரங்கள்..ஏதும்..
சொல்லாமல்..எனை..
விட்டெறிந்த..போதும்..
வலிக்கவில்லை..
உனக்கென்ன..
பிரச்சனையோ…என்று….

நீ..எரிந்த..
நெருப்பு வளையத்திற்க்குள்..
சுட்டெரிகிறது…
தோல்..கூடு….
துளைத்த..துளைகளில்..
கசிகிறது..
நேசக்கழிவுகள்…
கதறல்களாய்..

எரிக்க..முடியாமல்..
எஞ்சி..நிற்கிறது..
உன் மீது..கொண்ட..
அன்புமட்டும்..

தீ……..க்காயங்களுடன்..
திணரும்..உயிர்..
கேட்கிறது..
“என்ன..தவறு செய்தேன்..
பதில்..உண்டெனில்..
தள்ளி..வைத்திருக்கலாம்..
தண்டனையை..
ஊசலாடி…நான்..
உள்ளடங்கும் வரை..”

என்  ..
கவிதைபுத்தகம்..
தொலைந்த..போதே..
தெரியவில்லை..
என்…
கவிதையும்..
தொலையுமென்று…

Add comment ஜூலை 9, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

ஜூலை 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category