Archive for ஜூலை 12th, 2008




இழக்க..விரும்பாதது..

தினந்தோறும்..
சந்திக்கிறோம்…
தெருவோர..
நேர்காட்டில்…

எனை..கடக்கும்..நீயும்..
உனை ..கடக்கும்..நானும்..
மறக்காமல்..
திரும்பிப்பார்க்கிறோம்…
நமக்கிடைப்பட்ட..
ஒரு புள்ளியை….

கவிதைகள்..சுமக்கும்..
என்..கண்களும்..
கனவுகள்..சுமக்கும்..
உன்..கண்களும்..
சந்திப்பதே..இல்லை..
சங்கடப்பட்டு..
என்..பேருந்து..
புறப்படும்..நொடியிலோ..
உன்..பேருந்து..
புறப்படும்..நொடியிலோ..
முடிந்துவிடுகிறது…
நம்..ஒரு நாளின் முடிவு..

சத்தங்களை..
விதைத்து..
சந்தோசங்களை..
அறுவடை..செய்கிறோம்..
அதே..நேர்கோட்டில்..

மெளனத்திற்க்குள்…
நடக்கும்..
இம்மனச்சண்டையில்..
இதமான..வெற்றி..
இருவருக்கும்..

தவறிக்கூட..
வரவேண்டாம்..
வார்த்தைகள்…
இழந்துவிடக்கூடும்..
இந்த..இனிமையை…

5 comments ஜூலை 12, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

ஜூலை 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category