Archive for ஜூலை 18th, 2008
பாவமன்னிப்பு…
வார்த்தைகளோடு..
வழக்காடுகிறது…
என் மெளனம்..
உன்னோடு…
பேசாத..நட்களில்..
இறுகிக்கிடக்கிறது…
நிமிடங்களுக்கிடைப்பட்ட..தூரம்..
கோபம்..குறைந்து..
குளிர்ந்த..நொடியில்…
எப்படி சந்திப்பேன்..
உன் புன்சிரிப்பையும்..
அதற்க்குப்பின்..கிடக்கும்
நான்..உண்டாக்கிய..காயத்தையும்…
நீ..பேசும்..நீளம் வரை..
இப்படித்தான்..ஜெபிக்கிறேன்..
பாவமன்னிப்பு கேட்க்கும்..
பைத்தியகாரியாய்…
Add comment ஜூலை 18, 2008