Archive for ஜூலை 21st, 2008




வாழ்ந்திடட்டும்..

சிலு..சிலுவென..காற்றாகி..
சிறு..சிறுவென..த்துளியாகி…
விறு..விறுவென.வழிந்தோடி…
பெருமழையாய்…பெய்கிறது…
மழை…

அசரீரியாய்..குரல்கேட்டு…
மெது  மெதுவாய்..முகம்தோன்றி..
நடப்பது போல்..ஒலிகேட்க..
என் உயிராய்..நிறைகிறது..
உன்..நினைவு…

குளிர்ந்துவிட்ட..பூமியைப்போல்..
குவிந்துவிட்ட..காதல் மேட்டில்..
குதிக்கிறது..என் சலங்கைக்கால்கள்..
சிறுபிள்ளையின்  குறும்பினைப்போல்…

மழை வெள்ளம்..மக்களுக்காய்..
உன் நினைவெல்லாம்..என் மனதிற்காய்..

பயிர்வளர்ந்து  தழைத்தோங்கி..
மனித உயிர் வாழ்வதுபோல்..
நினைவென்னும்..விதைத்தூவி…
வாழ்ந்திடட்டும்..என்
கவிதைக்காடு…

Add comment ஜூலை 21, 2008

Pages

Categories

Links

Meta

Calendar

ஜூலை 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூன்   ஆக »
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Posts by Month

Posts by Category