Archive for ஜூலை 23rd, 2008
கிடைக்கவில்லை…
நெடுநேர..
த்தேடலுக்குப்பின்..
கிடைத்தது..உன்.
பழையமுகம்..
முன் இரண்டு பல்லில்..
ஒன்று கொஞ்சம்..உடைந்திருப்பது…
உன்.சிரிப்பை..
மறந்த.. நிலையிலும்..
மறக்காமல்..மனதில்…
பல கோடி..
மனித..நடையிலும்..
உன் நடை மட்டும்…
ரிதமாய்..பதிவாகியிருக்கிறது..
விழிகளின்..தாளத்தில்..
விலகாமல்..ஒன்றோடொன்று…
ஒட்டியிருக்கும்..
பாதவிரல்கள்
என் பார்வை..வெகுவாய்..
பதிந்திருந்தபடியால்..
அழியாமல்..அப்படியே….
இன்னும்..இன்னும்..தேட..
தொலைந்த..உன் வடிவை.
ஒருவழியாய்..
மீட்டெடுத்தேன்..
ஆனாலும்..கிடைக்கவில்லை..
பதிவுகளின்..காலமும்..
பதிந்திட்ட..காதலும்…
Add comment ஜூலை 23, 2008