Archive for ஜூலை 24th, 2008
அதே..வாசலில்…
நட்பின்…வாசலில்..
நாம்தான்..வரைந்தோம்…
நண்பர்களாய்..நம்மை..
என்னை..நன்கு..
புரிந்ததன்..நம்பிக்கையில்..
எப்போதும்..கொட்டிவிடுவேன்..
உள்மன..உறுத்தல்களை…
உலறல்களாய்…உன்னிடம்.
உன்னை..
அறிந்ததன்..
அர்த்தமாகத்தான்..
வாதிடுவேன்..உனக்காக..
உன்னுடையவர்களிடம்…
வார்த்தைகளின்..
துளிமழையிலும்..
அடர்மழை..கொட்டியதாய்
அழிந்து கொண்டிருக்கிறது…
நம்..நட்ப்பின்..
வரைபடம்…
ஆனாலும்..இருக்கிறேன்..
அழிந்திட்ட..நிலையிலும்..
அதன்..அச்சிருக்கும்…
நம்..நெஞ்சில்..
என்ற…
அழியாத..நம்பிக்கையுடன்..
அதே..வாசலில்..
நான்.
2 comments ஜூலை 24, 2008