Archive for ஆகஸ்ட், 2008




புரியாமல்..

என்..
மொளனத்தோட்டத்தில்..
வார்த்தை பூக்களை..
வேண்டி..நிற்க்கிறாய்..
காவற்..காதலனே..

அத்தனையும்..
பறித்து..
மாலையாக்கி..
கொடுக்கும்..
என்..
புன்னகை..
புரியாமல்..

Add comment ஆகஸ்ட் 30, 2008

முடிவற்ற..தேடல்..

L o v e b e a t s

வெவ்வேறு…
பாதைகளில்..
பயணப்பட்டும்..

வெவ்வேறு..
பயணங்களில்..
பயணப்பட்டும்..

மனதிற்க்கு…
தெரிவதில்லை..
இறுதியில்..
இளைப்பாறுமிடம்..
எது..என்று..

பாதங்களைப்போல்..

1 comment ஆகஸ்ட் 29, 2008

விழி நீர் சேமிப்பு..

L o v e b e a t s

மழை நீர் சேமிப்பாய்..
உன் நினைவுகள்..
தேங்க..
விழிநீர்..சேமிப்பு..
வழிந்து..விழுகிறது…

அணைகள்..இரண்டும்..
திறக்கும்..நொடியில்..
நிறம்பும்..கிணறும்..
எஞ்சிய…
நீர்..நிலையும்…

மனிதம்..
வளர்க்கும்..
மழைநீர் போல..
என்..
உயிரை..வளர்க்கும்..
நெஞ்சில்..நீ..
உள்ளவரை..

Add comment ஆகஸ்ட் 29, 2008

நன்பியே…நம்பு..

Send Friendship Day Ecards!

நட்பின்…
நெடுநெல்வாடையில்..
குறுந்தொகையாய்..
தோகைவிரித்திருந்தோம்..

சொல்லாத..மொழிக்கும்..
புரியாதா..சொல்லுக்கும்..
சிரிப்பென்று…சிரித்து..
சில்வண்டாய்…த்திரிந்தோம்..

இடைக்கால…
நிகள்வுகளால்..
திசைமாறிய..
நம் உலகம்..
எதிர்திசையில்..
வைத்ததென்ன..
நாம்..வாழும்..
வீதிதனை..

உன் பெயர் போல்..
ஒரு பெயரை..
உன் ஊரின்..
வாசிகளை..
உன்..சாயல்..
முக,நடையை…
எங்கேனும்..
கானும் போது..

பழகியவர்போல்..
பாசம் கொண்டு..
பாதகி நான்..
பேசிவிடுகிறேன்..

அதிலொருவர்..
நினைத்திருப்பார்..
கிறுக்கச்சியோ..
கீழ்ப்பாக்கமோ..
என்று..

அப்படி..எவரும்..
உன்னிடம்..சொன்னால்..
நாந்தான்..
அது என்று..
நன்பியே..
நம்பு..

2 comments ஆகஸ்ட் 28, 2008

தண்ணீரை..

Mail By BooN

ஆறாமே…
குளமாமே….
அத்தனையும்..
காட்டிவிடு…
காலங்கள்..
கடந்தபின்பு..
கானக்கூடும்..
நான்..
வெறும் துளியாய்…

Add comment ஆகஸ்ட் 27, 2008

நாங்கள்…கவிதைகள்..

கவிதைகள்…
என்..
நினைவுகளின்..பதிப்பு..
கனவுகளின்..பாதிப்பு…

மன விளிம்புகளில்
ஜொலிக்கும்..
சரிகை..வேலைப்பாடு..
அதன்..ஆழத்தில்..
நான்..
அடைத்துவைத்திருக்கும்..
அழுக்கு..

வலிகளை..
வாங்கிக்கொள்ளும்..
சினேகிதி..
பலசமயம்..
விரல்நீட்டி..
காட்டிக்கொடுக்கும்…
எதிரி..

அனுபவத்தின்…
அள்ளித்தெளிப்புகள்…
அழுகையின்..
அடக்கப்பெட்டிகள்..

தொலைத்திட்ட..காதலின்..
கசிவு..
கிடைத்திட்ட..காதலின்..
நெகிள்வு…

தேடுகிற..நிம்மதியின்..
விலாசக்குறிப்புகள்..
கிடைத்திட்ட..
சந்தோஷத்தின்..
செல்ல..ச்சிரிப்புகள்..

உலகையே.
நேசிக்கும்..
உயிர்த்துளிகள்..
கொஞ்சம்…
மனிதரை..
நேசிக்க..மறுக்கும்..
மிருகக்கீறல்கள்…

மொத்தத்தில்..
குழந்தையின்..
வரைபடம்…
பருவத்தின்..
காதல்..கடிதம்..
முதிர்கிழவியின்..
நரைகூந்தால்..

இத்தனை..
சொல்லியும்..
ஒத்துக்கொள்ளாமால்..
“நாங்கள்..கவிதைகள்”
என்கின்றன..
என்..
கவிதைகள்….

Add comment ஆகஸ்ட் 26, 2008

வீரனே…வா…

 

எங்கிருக்கிறாய்..
என்..காவலனே…
என்…உயிர்..
சுமக்கும்..வீரனே…

போருக்குமின்றி..
வேட்டைக்குமின்றி..
இதென்ன…
வெறும்..கலம்..
வெட்டியாக..

காதலாகி..
காமமாகி..
காலம்..
களித்திருந்தாயோ….

இங்கே..
காத்திருக்கும்..
சுமைதாங்கி..
கால் கடுப்பதை..
மறந்தாயோ…

வெகு நேர..
இளைப்பாறலுக்குப்பின்..
விடைத்து..நிற்கின்றன..
என்..கால்கள்..

மலர்மாலை..புடை..சூழ..
மயங்குதோ..வீரத்..
தினைத்தோல்கள்..

கடிவாளம்..
என்கிட்டாய்..
உனக்கதை..எப்படி…
நானிடுவேன்..

கனலாக..
உன் வீரம்..
கொழுந்தெழ….
நான்..என்ன..
செய்வேன்..

உடைவாளை..
உருவி ஏந்தி..
என் உடல் மீது..
பவனி..வா..

வெகு காலம்..
உன் புகழ்.பாடும்..
இப்புவி நாளும்..
பரணிப்..பா..

Add comment ஆகஸ்ட் 25, 2008

இளைப்பாறுகிறேன்…

நீ..
பேசிமுடித்த…
நிமிடத்திற்க்கும்..
பேசப்போகும்..
நிமிடத்திற்க்கும்..
இடையில்..
இளைப்பாறுவது..
கண்கள்…
மட்டுமல்ல..
காதலாகிய..
நானும்…

4 comments ஆகஸ்ட் 23, 2008

காதல்..பள்ளத்தாக்கில்..

Send Gorgeous Grandma Day Ecards!

காதல்…
பள்ளத்தாக்கெங்கும்..
கனவுகளின்..
பூக்கள்…

காமம்..கொன்ற..
காதல்..கண்டு…
கண்..விழிக்கும்..
காலை..க்கதிர்கள்..

கதவுகளற்ற…
நேசக்கூட்டில்..
இதயம்..இரண்டின்..
துயில்கள்…

காலத்திற்க்கும்…
வாழ்த்தும்..இதனை..
கானக்..
கருங்குயில்கள்..

பேதம்..அற்று..
வேஷம்..விட்டு..
நிஜமாய்..நிறைவாய்…
இரு..உயிர்கள்..

போதும்..இதுவென..
பொங்கும்…மனமே…
உண்மை..காதலின்..
களங்கள்..

Add comment ஆகஸ்ட் 22, 2008

தவம்..செய்யப்பார்க்கிறாய்..

gurlz-group [www.friendmails.net.tc]

காதலின்..
கடைசி சொத்து…
காமத்தின்..
முதல்..வித்து..
கடலுக்குள்..
அடங்கா..காதலை..
கண்ணத்தில்…
நிரப்பப்..
பார்க்கிறாய்…

நெஞ்சத்து..
ஆசையெல்லாம்..
இதழ்..
மையெனக்கொண்டு..
எழுத்துக்கள்…
பதியாமல்..
கவி..எழுதப்
பார்க்கிறாய்..

முடிவில்லா…
எண்ணிக்கைக்கு..
முத்தம்..என்று..
பெயர் வைத்து…
சடை..முடிகள்..
இல்லாமல்..
தவம்..செய்யப்
பார்க்கிறாய்..

Add comment ஆகஸ்ட் 21, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

ஆகஸ்ட் 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Posts by Month

Posts by Category