Archive for செப்டம்பர், 2008




கிழவியானேன்..

படிக்கச்சொல்லி..
பணிந்து..நின்ற..
கிழவியின்..
புண்னகையில்..
முதுமையும்..முதிர்வும்..
வரிக்குதிரைகளாய்..

மகனின்..மிடுக்கை..
கடிதத்தில்..கண்டு..
கெளரவம்..சுண்ட
நிமிர்ந்து..நின்றாள்..

நலங்கள்..
அனைத்தும்..
நல்லதாய்ச்சொன்னேன்..
தன்னுடைய..நலத்தை..
இங்கிருந்தே…
சொன்னாள்..

கார் வாங்கி..
இருப்பதாய்..
கண்டு..நன்..
சொன்னதில்..
கைப்பற்றி..
நடந்த..நாள்..
கண்களிலே..
கொண்டாள்…

விரைவில்..வருவதாய்..
விபரம்..சொன்னதும்..
பள்ளிசென்று..
வருவதாய்..
பரபரப்பானாள்..

படித்த…கடிதத்தை..
மடித்துக்கொடுத்தேன்…
கண்களில்..ஒற்றி..
கைத்தறியில்..
முடிந்தாள்..

பரவசம்..
முழுவதும்..
முகத்தில்..தாங்கி..
வயதைத்தொலைத்து..
வாளிபமாய்ச்சென்றாள்..

உணர்வுகள்..
அனைத்தும்..
எனக்குள்..
தேங்க..
ஒரு..கடிதத்தால்..
நானோ..
கிழவியானேன்..

Add comment செப்டம்பர் 30, 2008

வராத..நிலை மாற்றம்…

கடிகார..முட்களுக்குள்..
கத்திச்சண்டையாம்..
தொலைபேசி..
சிணுங்கலெல்லாம்..
முகாரி..ராகமாம்..

திரும்ப..அனுப்பிய..
தென்றலின்..வெப்பம்..
நிலவை..
எரிக்குதாம்..
தெருவெல்லாம்..
பூத்த..பூக்கள்..
அமிலம்..
வடிக்குதாம்..

இனிமேலும்..
கொடுமை..
அனுபவிப்பதற்க்கில்லை..
உடனே..
வர..வேண்டும்..
நீயோ..
அல்லது..உன்..
மின் அஞ்சலோ…

3 comments செப்டம்பர் 29, 2008

முடிந்த…சொத்து…

பிறந்த…முதல்..
நொடி முதலே..
கால்களற்ற…
நெடும்பயணம்…

சத்திரங்களாய்…
சாவடிகளாய்…
சில..இடங்கள்..
உடல்..தங்க..
சில..இடங்கள்..
மனம் தங்க..

உடல்தங்கிய..
இடமெல்லாம்..
உதறித்தள்ளி..
நடந்தபின்பும்..

மனம்..தங்கிய..
இடம்மட்டும்..
மறுக்காமல்..
மறக்காமல்..

கொண்டு வருவது..
ஒன்றுமில்லை..
கொண்டு..செல்வதும்..
ஒன்றுமில்லை…
என்று..சொல்லும்..
கூற்றைப்
பொய்த்து..

பயணங்கள்..
முடிந்த..பின்பும்..
முடியாமல்..
முடிந்த..
சொத்து…

1 comment செப்டம்பர் 27, 2008

ஊடல்..ஒரு புறம்…

உன்..
விழிவழிப்பதையை..
மறிக்கின்ற.
பிறை..நிலவாய்…
உனை..
முறைத்து..ச்செல்லும்..
என்..செயல்கள்..
நினைக்காமல்..
இல்லை..நான்..

புரிதலும்..
பின்பு..
பிரிதலும்..
பிரிதலில்..
புரிதலும்..
இயல்பென்ற..
இம்சை..அறிவேன்.

கடுகளவு..
தொடங்கும்..வலி..
மலையளவு..
மாற..மாற..

பொருக்கின்ற..
திறனற்று..
பொங்கிவிடும்..
கோபக்கனல்..

சுடுகின்ற..
எரிகல்லாய்..
எடுத்ததனை..
நான்..வீச..

துடிக்கின்ற..
உன்..நெஞ்சம்..
சாகாமல்..
சாவதுண்மை..

விடையனைத்தும்..
தெரிந்த பின்பும்..
ஏனடி..இத்தனை..
வினா..என்பாய்….

கொடிமையிலும்..
கொடுமை..
காதலென்பேன்..
காதலிலும்..கொடுமை..
காத்திருத்தல்..
என்பேன்..

குளிர்கின்ற..
முழுநிலவில்..
சுடுகின்ற..
புறமும்..உண்டு…

களிப்பொன்றே..
காதலில்லை..
கடமை…என்பது..
அதிலுமுண்டு..

பொறுப்புணர்ந்து..
நீ..நடந்தால்..
புற முதுகு காட்டி..
உனை..
பொய்யன்..என்று..
வெறுத்த..மலர்..

இதழ்..விரித்து..
சிரிக்கக்கூடும்..
இதழ்…
தேன்..வழிந்து..
தெறிக்கக்கூடும்..

2 comments செப்டம்பர் 27, 2008

அனுப்பாத..அஞ்சல்…

உனக்காக..
கடிதம்..எழுதும்..
ஒவ்வொறு..முறையும்…
மறக்காமல்..
எழுதுகிறேன்..
சொல்ல..நினைக்கும்..
அனைத்தையும்…

இருந்தாலும்..
ஏதோ..விட்டதாய்..
ஒட்டிய..
முகவுறை..
பிரித்து..
நிரப்புகிறேன்..
திரும்ப..திரும்ப..

இப்படித்தான்..
நிரம்பிக்கிடக்கிறது..
இதயமும்..
அனுப்புதலின்றி…

Add comment செப்டம்பர் 26, 2008

அளவுகளற்றவை……

அண்ணனின்..
சட்டை..
தம்பிக்கு..
பொருந்தும்…
தம்பியின்…
சட்டை..
அண்ணனுக்கு..
பிடிக்கும்..

அளவெடுத்து..
தைப்பதற்கில்லை..
சட்டையைப்போல்
விருப்பங்கள்.

3 comments செப்டம்பர் 24, 2008

நானும்…

தெருவோரத்தில்..
நடைபாதையில்…
மனநிலை பாதிப்பென..
கணக்கிடப்படும்…
சுதந்திர..மனிதர்களை…
கானும்போதெல்லம்..

பிரிந்துவந்த..
துயரமோ..
இணையப்போகும்…
பாசமோ…
தவறாமல்..
வருகிறது..
என்..நெஞ்சில்…

Add comment செப்டம்பர் 23, 2008

ஊரைத்தேடி…ஊரில்த்தேடி….

ஓடி..ஓடி..
உழைத்தபின்னும்..
ஒய்யாரமாய்..
வீட்டில்..
இருந்தபின்னும்…

ஓயாமல்…
ஓடுது..மனம்..
நிம்மதி..கிடக்கும்..
ஊர்…
மண்னைத்தேடி…

சேர்த்திடாத..
சொத்துக்களாய்..
சேர்த்துவைத்த..
நினைவிடங்கள்…
சேதாறமாகாமல்..
சேர்ந்திடுமா..
என்னிடத்தில்..

ஆலமர..ஊஞ்சல்..
அப்படியே..இருக்குமா..
அடங்காத…ஆற்றுவெள்ளம்..
அடிப்
பாறைதெரிய..இருக்குமா..

கூவும்..எனை..
கூவச்சொல்லி…
கூப்பிடும் குயில்..
இருக்குமா….

குஞ்சு..மேல..
குஞ்சு வைத்து..
அதன்…
பேரன் பேத்தி…
இருக்குமா..

ஆயாமரம்..
குள்ள மரம்..
அமர்ந்த..இடம்..
இருக்குமா…

அங்கிருந்து..
ரோடு பார்க்கும்..
அந்த..சுகம்..
கிடைக்குமா..

இலந்த..பழ..
மர நிழலில்…
பறித்த..பள்ளம்..
இருக்குமா..

குறத்தி..முழி..
நா..முழிச்சு..
ஒழித்த…மணி..
இருக்குமா..

பம்பு செட்டில்..
தலையலச…
பிய்ந்த..கூந்தல்..
இருக்குமா..

திண்ணை மரக்..
காலில்..செதுக்கி..
வைத்த..பெயர்.
இருக்குமா..

மாறாத..திசைகள்..
தேடி..
மாறாத..தெருக்கள்…
தேடி..
மாறாத..மனிதர்கள்..
தேடி..
மாறாத..பசுமை..
தேடி..

மாறாத..மன..
நினைவுடன்..
மாறிப்போன…
பருவத்துடன்..
மகிழ்ச்சியோடு..
போகப்போறேன்..

என்னைப்போல…
வாக்கப்பட்டு..
எட்டிப்போன….
கருவாச்சி..

பழசையெல்லாம்..
பகிர்ந்து..கொள்ள..
பக்கத்தூட்டில்..
வந்திருக்குமா…

Add comment செப்டம்பர் 20, 2008

இனிது..இனிது….

அறுந்த..மணியாய்..
உருளும்..
விழித்துளி..
நொறுங்ச்சொல்கிறது..
நம்..
நேசத்தை..

மலர்ந்த..பூக்கள்..
மகரந்தம்.தூவி.
மகிழ்த்தும்…காதல்..
தேசத்தை..

தொலைத்த..சிரிப்பை…
மறந்த..மகிழ்வை..
தேடிக்கொடுத்தது..
உனது..குரல்..

உயிரே..
உயிரே…
உருவம்..ஒலியாய்..
என்..
உடலைச்சேர்ந்தது..
உனது..நிழல்..

வலிகள்..மறந்து..
விழிகள்..திறந்து..
உலகை..ரசிக்கும்..
எனது..குணம்..

இனிது…
இனிது..
காதல்..இனிது..
இனி..
இறப்பைக்கேட்க்கும்..
எனது..மனம்…

Add comment செப்டம்பர் 19, 2008

என்..வானமே…

உனை..
தொட்டிருக்கும்..
நினைப்பாய் தான்..
நான்…
நீலநிறமாய்..
விரிந்திருக்கிறேன்..
நீர்பரப்பாய்..
கடல்பெயராய்..

நம்..காதலுக்கு..
சாட்ச்சியாம்..
நான்..சுமக்கும்..
உனது வண்ணம்..

எப்போதாவது..
வந்து..போகும்..
கலங்களில்..
மறக்காமல்..
ஏற்றுகிறேன்..
உன்க்கெழுதிய…
காதலை..

திரும்ப..வரும்..
எதுவும்..
கொணர்வதில்லை..
பதிலை..

சிரமமெடுத்து..
கோர்த்தனுப்பிய…
நீர்த்துளி..
முத்துக்களை..
மேகமென..
மூட்டைகட்டி..
முகத்தின் மீது..
கொட்டியபோதும்…

கோதையிவள்..
பதறவில்லை..
திரும்ப..
அனுப்புவது..
உறுதியென்று..

ஒரு..நேரம்.
வரும்..கதிரவனும்..
மறு..நேரம்..
வரும்..வெண்ணிலவும்..
ஒரு..போதும்..
நிற்ப்பதில்லை..
உனைப்பற்றி..
நான்..கேட்க..

வராத..
உனை..நினைத்து…
சொல்லற்ற..
மொழியெடுத்து..
ஓயாமல்..
ஓலமிடுகிறேன்..
ஊரடங்கும்..
இரவுகளில்..

நோய்..கொண்டு..
நான்..த்துடிக்க..
மாறாமல்..திங்களில்..
ஒரு..நாள்..
பேரழகி..
பெரு..நிலவுடன்..
கோகிலமாய்..நீ..
கொஞ்சிகிடக்கையில்..

ஆறாத..
பொறாமைகொண்டு..
அதிகமாய்..
ஆர்ப்பரிக்கிறேன்…
ஆராயாத..
மன்னனைப்போல்..
ஆகயமாய்….நீ..
இருப்பதென்ன…

ஒரு..புறத்தில்…
நீ..நிற்க…
மறு..புறத்தில்..
நான்.நிற்க..
நமை..படைத்தவன்..
நிற்பதெங்கே…
நீதி..கேட்டு..
நான்..
செல்வதெங்கே…

Add comment செப்டம்பர் 18, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

செப்டம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
« ஆக   அக் »
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

Posts by Month

Posts by Category