Archive for அக்டோபர், 2008




தொலைத்தது..எரிகிறது..

ஒரு..வார்த்தை..
பேசாமல்..
ஒலித்தனுப்பிய..
பிடித்த..பாடல்..
அலைபேசி..
நனைத்துவிட்டு..
நிறைத்த்து..
என்..மெளனத்தை…
வழிந்தோடி..
சேர்ந்த..தாழ்வார..
மழைத்துளியோ..
காதின்..
வழியோடி..
நிறைத்தது..
நான்..
உடைத்தெறிந்த..
காதல் கோப்பையை..

மனதின்..
அடி.ஆழம்..
சீருடைப்..பூ..
இரண்டு..
மெதுவாக..
முகம்..பார்க்கும்..
பெருந்துக்கம்..
எனைத்தாக்கும்..

இரு,,வார்த்தை..
பரஷ்பரமாய்..
பகிர்ந்து..செல்ல..
சுகமாகும்..

ஒருமெளனம்..
ஊற்றி..
உள்ளே..ஓர்..
தீவைத்தாய்..

பெரும்பாதகம்..
செய்தவனே…
பற்றி..
எரிகிறது…பார்…
தொலைத்த..காதல்…

Add comment அக்டோபர் 25, 2008

விளைவு…..

வெடிகளின்…
சத்தம்…
காதை..பிளப்பதாய்…
கத்தித்தீர்க்கிறேன்….

யாருக்குப்புரியும்…
அங்கே…
வெடிப்பது…
நெஞ்சைப்பிளப்பதால்…
வந்தது..
அது..என்று..

2 comments அக்டோபர் 24, 2008

என்னையும்..மீறி….

உடல் நிலை..
சரியில்லா..உனக்கு…

மருத்துவமும்..
உறவுகளும்…
மீட்டுத்தந்திருக்கும்..
சுக நிலையை..

என்ன..செய்வதென..
புரிவதற்க்குமுன்..
என்னை..மீறி..
அனுப்பிவைத்தன..
விழிகள்..
சில..
கண்ணீர்த்துளிகளை..

4 comments அக்டோபர் 24, 2008

கவிதைக்காரி….

விற்பணைக்கு..
வெளியிறங்குமுன்…
மறக்காமல்..
சூடிக்கொள்கிறேன்…
இரண்டு..கில்லு…

என்..அழகை
பார்த்து..
சூடிக்கொள்ள…
விரும்பலாம்..
எவரும்..

கூடை..நிறைய..
கவிதைகள்…

Add comment அக்டோபர் 21, 2008

விதி…

தனக்குத்தானே…
பாலூற்றிக்கொண்டது….
பாலில்..
விழுந்த…
பல்லி….

Add comment அக்டோபர் 20, 2008

சினிமா..சினிமா..தொடர் பதிவு..

சினிமா…சினிமா…தொடரில்..இணைத்த…அடலேறுக்கு….நன்றி…(விதி..யார..விட்டுச்சு…)

சரி..விசயத்திற்க்கு..வருவோம்….

1.எந்த..வயதில்..சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்.?

வயது..4ங்கோ..5ந்தோ…படம்”விதி”….

2.என்ன..உணர்ந்தீர்கள்.?

அப்போதெல்லாம்..வருடத்திற்க்கு..ஒரு சினிமா…என்பதே..பெரிசு..வீட்டில் அனுமதி இல்லை எனவெ…வெறும்..பிரமிப்புதான்.

3.கடைசியில்..அரங்கில்..அமர்ந்து பார்த்தது…

குருவி…(யாராவது..கிடைத்தால்…கொத்திவிடுவேன்….)

4.மிகவும்..தாக்கிய..சினிமா..

நந்தா…..உடனுக்குடன்..இரண்டுமுறை பார்த்தேன்…(சூர்யாவின்..அம்மாவாக நடித்தவருக்கு…வாய்பேச வராது..என்பது..பாதி வரை தெரியாது..கவனித்தீர்களா..)

5.மிகவும்..தாக்கிய..தமிழ்சினிமா..அரசியல் சம்பவம்…
சினிமாவில்..அரசியல்..என்னை..தாக்கியதில்லை..

6.மிகவும்..தாக்கிய..தமிழ் சினிமா…தொழில் நுட்பம்…
“கல்யாண..சமையல்..சாதம்”..பாட்டில்..கட..கட..வென…லட்டு..ரங்காராவ்.வாயில் செல்வதுதான்…(இப்போது தான்.சாப்பிட்டேன்..அதான்..அதே..மயக்கத்தில்..ப்ளீஷ்..ப்ளீஷ்.அடிக்காதிங்க..)

7.தமிழ் சினிமா..பற்றிய..வாசிப்பு..

எந்த..தமிழ் பத்திரிக்கையானாலும்…கண்டிப்பாக…

8.தமிழ் சினிமா இசை…

எப்போதும்…இளையராஜா…இப்போது..பிடித்தவைமட்டும்…
சமீப ..விருப்பங்கள்..
கண்களிரண்டால்….
தோழியா…காதலியா..

9.உலக..சினிமா..
சில..ஆங்கிலபடங்கள்…ஜாக்கிஜான்..டிஷ்ஷும்..டிஷ்ஷும்..கனவருடன்…கம்பெனிக்காக….ச்சும்மா…
எனக்காக..சில.ஹிந்தி…சமீபமாக..”ஒம் சாந்தி.ஓம்” ரசித்தேன்..பாடல்களுக்காக…

10.தமிழ் சினிமாவுடன்..தொடர்பு…

என்..சண்டைக்குரிய…நண்பன்…பொன்.சுதா…..(சுதாகர்)உதவி இயக்குநராக…பணியாற்றிகொண்டிருக்கிறார்.ஒரு பாடல் எழுதியுள்ளார்(இன்னும் வெளிவரவில்லை..)அவனுக்காகவே..தமிழ் சினிமாவை..நேசிக்கிறேன்…விரைவில்..ஒரு சிறந்த..இயக்குநரை சந்திப்பீர்கள்.

11.ஓராண்டுக்கு..தமிழ் சினிமா..இல்லை..எனில்…

ஒன்றும்..குடிமுழுகி..போகாது..சுபாஷ் சொல்வது..போல்..வேறு ஒன்றை கண்டுபிடிப்போம்..(படைத்தல்…கடவுளர்கள்..நாம்..)

கிடைக்கிற..கேப்பில்..ஆட்டோ ..என்ன…ஏரோப்பிளனே…ஓட்டலாம்..என்ன..என்..சுதாவை..ஒருவருடம்..இழந்து..தவிக்கும்..தமிழ் சினிமா…

4 comments அக்டோபர் 18, 2008

எதிமுனையில்..கடவுள்…

என்..
எப்போதைய…
அழைப்புகளிலும்…
உங்களை..
தொடர்புகொள்ளமுடிவதில்லை..

தொடர்புஎல்லைக்கு..
வெளியில்..இருப்பதாக..
ஒருமுறையும்..

வேறொரு..தொடர்பில்..
இருப்பதாக..
மற்றொருமுறையும்..

தொடர்பு எண்..
உபயோகத்தில்
இல்லை..என..
பிறிதொரு முறையும்..

மாறி..மறி..
வருகிறது..

எனவெ…
என் தவறு..
ஒன்றுமில்லை..
உங்களை..
தொடர்புகொள்ளாமைக்கு..

இறுதியாக..
இருந்த மிச்சத்தில்..
குறைந்த வரங்கள்..
வேண்டி..
குறுந்தகவல்..
அனுப்பியுள்ளேன்…

அவசரம்..
ஆதலால்..
பதில் அனுப்ப..
முடியவில்லையெனில்…
தவறாமல்..
அனுப்பிவிடுங்கள்..
அதை..
அடுத்த..
கடவுளுக்கு…

4 comments அக்டோபர் 17, 2008

பிரதிபலிப்பு…..

வெட்கத்தின்..
தாழ்வாரமெங்கும்…
வெளிர் சிவப்பு..
வண்ணங்கள்….

நாணக்குடை..
மீறி..நனைக்கும்..
எனை..
நீ..பொழிந்த..
காதல்..மழை…

சூடியதை…விட..
உதிர்ந்தவை..அதிகம்..
கொலுசுக்கொண்டாட்டத்தில்..
தரை விரிப்பாய்..
மல்லிகைகள்..

இயல்பாகத்தான்..
இருக்க நினைக்கிறேன்..
இத்தனையும்..
நடந்துவிடுகிறது…

உனைக்கண்ட..
கண்கள்..பின்..
கண்ணாடி..பார்க்கும்..
பிரதிபலிப்பில்…

Add comment அக்டோபர் 16, 2008

மாறாத..மாற்றங்கள்….

புதிய..புத்தகத்தில்..
பழகிய..
வார்த்தைகள்…

புதிய..உடையில்..
பழையதின்..
வண்ணங்கள்…

புதிய..முகத்தில்..
இழந்ததன்..
சாயல்…

புதிதாய்..
கிடைக்கும்..
எதிலும்..
இருக்கலாம்..
பழையதின்..
வாடை..

புதியதை..
முழுதாய்…
ஏற்காத..மனமோ..

பழையதை..
முழுதாய்..
மறக்காத..மனமோ

ஏதோ.ஒன்று..
நம்மிடம்..
புதியதாய்..
பழையதாய்…

3 comments அக்டோபர் 14, 2008

அனுபவம்..

“என்னால்..முடியும்..”
எல்லாம்..என்றேன்..
எல்லாம்..
முடிந்த..பின்பு…

Add comment அக்டோபர் 13, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

அக்டோபர் 2008
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

Posts by Month

Posts by Category