Archive for நவம்பர், 2008
கவிதைத்..துளிகள்…
காத்திருக்கின்றன..
எண்ணங்களும்…
கோப்பைகளும்..
பரிமாற்றுத்திரவமாய்….
தேநீரும்..
பாரங்களும்….
அடுத்தடுத்து..
நடந்துவிடுகின்றன..
நிகழ்வுகள்..
தத்தம்..கடைமையாய்..
கடக்கமுடியவில்லை..
விரைவாய்..
நிகழ்வுகளுக்கு..
இடைப்பட்ட…
தூரத்தை..
Add comment நவம்பர் 28, 2008
கவிதைத்…துளிகள்…
சக..
மனித..வெப்பத்தில்..
தகிக்கும்..
என் தேகம்..
தோல்..சுருங்கி..
தசை வெடிக்க..
தேடிச்சிதறும்..
யாருமற்ற..
பள்ளத்தில்..
சேதங்களின்றி…
எப்போதும்..
தப்புகிறது..
சுடர் கொண்ட..
இன்னொரு..நெருப்பாய்..
என்..மனம்..
Add comment நவம்பர் 26, 2008
கவிதைத்..துளிகள்…
நிழல்..
பரப்பி..
கடக்கும்…
மரத்துணையைச்சேர்த்து…
தளிர்முகம்…
தழுவும்…
குளிர்த்தென்றலை…
உள்..வார்த்து..
உயர்விடத்தில்..
உள்ளதாய்…
பொய்யாய்..
உள்ளம்..களித்து..
குறுமகிழ்வில்..
விரைகிறது..
என்..
ஜன்னலோரப்பயணம்..
Add comment நவம்பர் 26, 2008
கவிதை..த்துளிகள்…
காதல்…
பள்ளத்தாக்குதான்..
நிரப்பப்படுவதை..
பொருத்தழகு..
கண்ணீர்த்துளிகளாலோ..
கவிதைப்பூக்களாலோ…….
முடிந்த..
இடத்தில்..
தொடங்குகிறது..
தொடர்ந்த..
இடத்தில்..
முடிகிறது…
மனித..
வாழ்க்கையும்..
பூமியின்..
மீது..
வாழ்க்கைப்பட்டதால்..
அதன்..படி..
Add comment நவம்பர் 23, 2008
கவிதை..த்துளிகள்.
எனக்குள்..
நீ..
எப்போதும்…
இருக்கிறாய்..
உனக்குள்..
நானும்…
எப்போதும்..
இருக்கிறேன்…
நம்பிக்கையற்று..
தேடுகிறது..
காதல்…
2 comments நவம்பர் 19, 2008
கவிதை..த்துளிகள்…
சரியென்று.
இருந்தவைகள்..
தவறாகலாம்…
தவறென்று..
இருந்தவைகள்…
சரியாகலாம்…
சூழ்நிலையில்…
மனநிலையில்…
2 comments நவம்பர் 19, 2008
கவிதை..த்துளிகள்…
சட்டென..
தூக்கம்..
களைத்து..எழுந்தேன்..
கனவில்..
எனை..
நோகடித்த..நண்பன்…
இறப்பதற்க்குள்..
நடக்க..வேண்டும்..
இனிய..சந்திப்பு..
என்றாய்..உனை..
பிரிந்தபோதே..
நடந்துமுடிந்த..
இறுதி சடங்கை..
மறந்து..
Add comment நவம்பர் 15, 2008
கவிதை..த்துளிகள்..
திரும்பித்திரும்பி
பார்க்கிறேன்..
எவரேனும்..
தொடரக்கூடும்..
என்று..
ஒருமுறையும்.
பார்த்ததில்லை..
தொடர்ந்துவரும்..
நிழலை..
ஏழையின்..
சிரிப்பில்.
இறைவனை
காணலாம்..
இப்படித்தான்..
ஒழிந்துகொள்கிறான்.
எளிதில்..
கிடைக்காத..
இடத்தில்..
4 comments நவம்பர் 14, 2008
கவிதை..த்துளிகள்…
தொடர்கிறது..பயணம்..
தொலைத்த..பாதையின்..
தொலைத்த..பயணத்தின்..
முடிவிலிருந்து…..
அள்ளித்தருகிறேன்..
வல்லலாய்..
கை..நிறைய..
கவிதைகள்..
Add comment நவம்பர் 12, 2008
கவிதை.த்துளிகள்..
கவிதைகள்..எழுதும்..
கையேடாய்..
அவரவர்..
காதல்…முகம்..
எதுவும்..
கிடைககலாம்..
இறப்போ..
இனிப்போ..
தேனிர்..
கோப்பையைச்சுற்றி..
எறும்புகள்..
2 comments நவம்பர் 11, 2008
| Previous Posts |