Archive for டிசம்பர், 2008




காதல்..சிறகினிலே…

என்..
ஏனென்ற கேள்விக்கும்..
எதற்கென்ற வினவலுக்கும்
பலபதில்கள் தேடி..அலையும்
உன்..பொறுப்பற்றத்தனம்..

எந்த..உறுத்தலுமின்றி
எல்லா..மறத்தலுக்குமிருக்கும்
ஏதோ..ஒருகாரணம்..

குற்றங்கள் அனைத்தும்
குறைவின்றி செய்தாலும்..
கூசாமல் வைக்கிறாய்.
எனக்கொரு பெயர்.
“சண்டைக்காரி” என்று..

Add comment டிசம்பர் 24, 2008

காதல்..சிறகினிலே..

யாருக்குள்..யாரென்ற…
கேள்வியின்..வேள்வியில்..
எப்போதும்..எரியும்..
காதல்..நெஞ்சங்கள்..

உனக்குள்..நானென்றும்..
எனக்குள்..நீயென்றும்..
உறுதியானபின்பும்..
போதாமல்..தேடும்..
இன்னும்..கொஞ்சமிடம்..

தொடங்கிய..நொடியெது..
தெரியாத..நினைவுபோல்.
தேடலில்..முடிவது..
முடியாமல்..தொடர்ந்திடும்..

காலங்கள்..முடிந்ததும்..
காலனும்..வந்துவிட்டால்..
காதல்..இன்னும்..முடியவில்லை..
கட்டாயம்..போய்..வா..என்பேன்..

Add comment டிசம்பர் 23, 2008

காதல்..சிறகினிலே…

உனக்கொரு..
கடிதம்..எழுத..
எப்போதும்..வேண்டுகிறாய்..
பார்வையால்..பகிர்ந்ததுபோக..
வார்த்தையால்..வழங்கிய்துபோக..
மிச்சமுள்ள..காதலுக்கு..
அத்தாட்சி..கேட்கிறாய்..
கட்டிலில்..படுத்து..சிரிக்க..
கதவினில்..சாய்ந்து..ரசிக்க..
கனவுக்குள்..மிதந்து..ருசிக்க..
உன்..சந்தோசக்கிளைகளெல்லாம்..
கடிதப்பூ..பூக்கவைக்கிறேன்..
இப்படித்தான்.
சொல்லமுடியாமல்..போகிறது..
இயல்பான..என்..
சாதாரணக்….காதலை..

Add comment டிசம்பர் 22, 2008

காதல் சிறகினிலே…

உனக்காக விட்டுக் கொடுத்ததில்
என்னிடம் எதுவுமில்லை இப்போது.

பண்டமாற்று நடவடிக்கையாய்
எப்போதும் வியாபாரம்.

உன் காதல்
வாங்கிச்சேர்க்க
பாசம் பொழிந்தேன்.

உன் கோபம்
வாங்கிப் புதைக்க
என் நியாயம் மறைத்தேன்.

என்னை நினைத்திருக்க
என்னையே பிய்த்து
உன் செயல்களில் ஒட்டவைத்தேன்.

எல்லாம் கொடுத்த பின்னும்
எல்லாவற்றுடனும் இருக்கிறேன்
உன் நேசத்தின் லாபத்தில்..

2 comments டிசம்பர் 22, 2008

காதல்..சிறகினிலே…

நினைக்கும்..நிமிடம்..
நெஞ்சில்..இனிக்கும்..
வலிக்கும்..நொடியில்..
உயிரை..எடுக்கும்..
இதயம்.முழுதும்..
விழிகள்..பிறக்கும்..
புதிதாய்..புதிதாய்..
உலகை..ரசிக்கும்..
கவிதைகள்..எழுதி..
காகிதம்..தேயும்..
கனவுகள்..மென்று..
நிலவினில்..காயும்..
காதல்..பெயரென்று..
வாழ்க்கை வயல்..விரியும்..
அதில்..
விதையும்..மழையுமாய்….
நீயும்..நானும்..

Add comment டிசம்பர் 20, 2008

காதல்..சிறகினிலே….

நீ..உண்ணும்போது..
நானும்..உண்கிறேன்..

உலவும் போது..
கால்களுக்குள்..
நடக்கிறேன்..

உறங்கும்போது..
அருகில்..உறங்குகிறேன்..
உன்..அசைவுகளில்..
விழித்தபடி..

வெளிச்செல்கையில்..
கதவருகில்..இருக்கிறேன்..
கையாட்டிக்கொண்டு..

இப்படியே..
இருக்க.விரும்புகிறேன்..
உன்.செல்ல..ப்பிராணியாய்..

Add comment டிசம்பர் 19, 2008

காதல்.சிறகினிலே…

என்..
அலைபேசி..
குரலின்றி..
பெரும்மெளனம்..
கொண்டிருக்கலம்..
உன்..மொழி..

வெடுக்கென்று..
வந்த..கோபத்தை..
பொசுக்கென்று..
விடமுடியாமல்..
தவிக்கலாம்..
உன்..ஆண் குணம்..

நினைவுகளற்றதுபோல்..
நடிக்கலாம்..
உன்..நினைவுகள்..
என்னையே..
நினைத்துக்கொண்டு..

எதுவும்..வலிக்காமல்..
இயல்பாய்..
ரசித்துத்திரிகிறேன்..

எனை..
முறைக்கையில்..
மறைக்கமுயலும்..

உன்..நமுட்டுச்சிரிப்பை..
நினைத்து..

Add comment டிசம்பர் 17, 2008

காதல்..சிறகினிலே..

கனவுகள்..
கண்விழிக்கும்..
கதிரவன்..
கண்மயங்கும்..
பொழுதினில்..நடக்கிறது..
போர்..போன்ற..
யுத்தம்..நெஞ்சில்..
தவறென..விட்டுவிட..
சரியென..விட்டுத்தர..
முடிவொன்று..
முடியாமல்..
விடிகிறது..
வெள்ளி..ஒன்று..
தொடரட்டும்..
வலிகள்..என்று..
கள்ளியை..
உள்ளம்..தின்று..
வடியலாம்..ரத்தம்..ரத்தம்..
சுகமதில்..நித்தம்..நித்தம்..

Add comment டிசம்பர் 12, 2008

காதல்..சிறகினிலே..

எங்கெங்கோ…
பதுக்கியும்..
தோண்டி..எடுக்க..
தேடுகிறாய்…
விரலிடுக்கில்..
நகக்கண்னில்..
நாக்கடியில்..
நீ..இல்லாத..
பொழுதுகளில்..
கண்ணாடி..
ரசிக்க மட்டும்..
பொல்லாத..
இடம்தேடி..பொருப்பாக..
பொத்திவைத்தேன்..
தேடி..நீ.
களைத்தலிலும்..
பதுக்கி..நான்..
சிரித்தலிலும்..
பத்திரமாய்..
என்னிடத்தில்..
எப்போதும்..
எனது..வெட்கம்..

Add comment டிசம்பர் 12, 2008

கவிதைத்..துளிகள்..

அழுகை..
தவிர..
வேறொன்றும்..
முடிவதில்லை..
வலிகள்..
நிறைந்த..
நெஞ்சில்….

Add comment டிசம்பர் 10, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

டிசம்பர் 2008
தி செ பு வி வெ ஞா
« நவ   Jan »
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

Posts by Month

Posts by Category