Archive for ஜனவரி, 2009
காதல்..சிறகினிலே…
கடக்கும் மனிதர்களை
கவனிக்கிறேன்..நீ என்று.
உடைகளின் நிறங்களில்
நடைகளின் லயங்களில்
உனைத்தேடி மீண்டு..
உடைகிறேன்..எனக்குள்..
நடையினில் வேகம்..
வழிந்திடும் தேகம்…
சடாரென உட்புகும்
இல்லத்தனிமையில்..
விழியினில் துளிர்த்த
நீரின் ஒளியில்
திறந்தேன் உயிரின்
இருளின் வெளியை….
ஒன்றல்ல..இரண்டல்ல..
ஓராயிரம் கோடியாய்
நிறையாய்..நிறைவாய்..
அங்கு
நீ..தான்..நீயேதான்..
2 comments ஜனவரி 30, 2009
காதல்..சிறகினிலே..
வெளியில் நான்
வரவேண்டும் என்று
வித்தைகள் பலசெய்வாய்..
சிறு தூரல் பெய்கிறது
நனைந்து விளையாட வா என்பாய்..
அடைமழை ஆரம்பிக்கட்டும்
அப்போது வருகிறேன் என்பேன்..
தென்றல் அழகாய் அழைக்கிறது
தோட்டதுப்பூ..பறிக்க வா..என்பாய்..
பெருங்காற்று வீசட்டும்
பூச்சூடி வருகிறேன் என்பேன்..
சிறுமுகில் மறைத்திட..
ஆதவன் ஒழிந்திட..
கதிர் வெளியே சிதறிடும்
கலையினைக்காண் என்பாய்..
மறைந்தவன்..திரும்பட்டும்..
மாலையும் துவங்கட்டும்..
இளஞ்சிவப்பே..புறவெளியாக..
இதமாய் வருவேன் என்பேன்..
எந்தன் முகம் பார்க்க..
எதற்க்கு இத்தனை வரவேற்ப்பு
கர்வமாய்..அழை என்னை
‘உன் காதலன்’ நான் என்று..
ஓடோடி வந்திடுவேன்
உன் எதிரே..
நான்..அன்று..
2 comments ஜனவரி 29, 2009
வழக்கொழிந்த..வார்த்தைகள்..
கிளியாஞ்சட்டி: கார்த்திகை விளக்கு(மதுரை சைடு…..)
ஏனம்: தட்டு
வடக்கல்: வடைச்சட்டி
சீனி; சர்ககரை
சாலு: தண்ணீர் ஊற்றிவைக்கும் அகன்ற பாத்திரம்.
வெஞ்சனம்: கூட்டு அல்லது பொறியல்(தொட்டுக்கொள்ள..எதாவது)
4 comments ஜனவரி 28, 2009
காதல்..சிறகினிலே…
அலைபேசி வழியே
அழைத்தது நீ..யென்று
அறிந்ததும் நிரம்பிவிடுகிறது
பேசியதற்க்கான மகிழ்ச்சி..
வெளித்தள்ளிய..
தளும்பல் தண்ணீராய்
காற்றில் கரைகிறது
பின்பு வந்த
வெற்று வார்த்தைகள்..
5 comments ஜனவரி 28, 2009
வழக்கொழிந்த வார்த்தைகள்-தொடர் பதிவு
தோண்டி:தண்ணீர் எடுக்கும் சிறிய குடம்.
களாசு:தண்ணீர் குடிக்கும் டம்ளர்
சீமாறு: துடைப்பம்.
2 comments ஜனவரி 27, 2009
காதல்..சிறகினிலே….
கனவுகள் முடியும்
காலைப்பொழுதில்..
கவிதைகள் வரையும்
காதல் பொழுதாய்..
விரல்களின் வழியே
உயிரைச்சிந்தி
விதமாய் வரைவேன்
வண்ணக்கோலம்..
குவளையில் தேநீர்
அருந்தும் சாக்கில்
விழுகளால் என்னை
உறுஞ்சும் உன் உயிர்..
கடக்கையில் நடக்கையில்
கண்டவர் யாருமில்லை
காதல்..சின்னமென்று
நின்றவர் யாருமில்லை
உனக்கும்..எனக்கும்
இன்னொரு பாலமாய்
வாசலில் கிடப்பாள்
என் கோலத்தோழி..
1 comment ஜனவரி 27, 2009
காதல்..சிறகினிலே…
எங்கு வெளிச்செல்கையிலும்
உனைத்தேடுகிறேன்..
பேருந்து நிறுத்தத்தில்..
கடைத்தெருக்களைக்
கடக்கையில்..
கட்டாயம் உனை
காண்பேன் என..
உள் மனது சொல்கிறது..
புறப்பட்ட நொடியிலிருந்து
புதிதாகி விடுகிறது
என் பார்வையும் செயல்களும்
நீ…கவனிக்ககூடும்
என்ற கணிப்பில்..
வீடு வந்து சேர்ந்ததும்
கரைக்கிறேன் ஒப்பனைகளை
உனை க்காணாத கண்களின்.
கண்ணீர்த்துளிகளில்..
2 comments ஜனவரி 26, 2009
காதல்..சிறகினிலே….
எப்போதும்..வழிமறிக்கிறாய்..
காதலை சொல்லச்சொல்லி..
வித விதமாய்..சேர்த்த வார்த்தைகள்
விழிக்கும் மறந்து
உன் வருகை விபத்தால்..
எனக்குள்ளும் வைத்திருக்கிறேன்
ஆசைகள்..
தருவதற்க்குள் சிதறடிக்கிறாய்
உன் வழிப்பறிக்கொள்ளையால்..
கிடைத்ததை அள்ளிக்கொண்டு
உனைகடந்து செல்கிறேன்
மீண்டும் வருவான்
இந்த விழிப்பறிக்காரன் என்று.
8 comments ஜனவரி 24, 2009
காதல்..சிறகினிலே..
அள்ளித்தின்ணும்
உன் பார்வை
அளவாய் பேசும்
உன் வார்த்தை
மெல்லச்சிரிக்கும்
உன் சிரிப்பு
மெதுவாய்ப்பொழியும்
உன் காதல்
சொல்லி ரசிப்பேனோ
அனைத்தும்…
இல்லை..
சுகமாய் புதைப்பேன்
எனக்குள்.
2 comments ஜனவரி 21, 2009
காதல்..சிறகினிலே..
விழிக்கும் முன்பும்..
உறங்கும் முன்பும்..
துயில் எழுப்ப..
தாலாட்ட
உன் குறுந்தகவல்
என் அலைபேசியில் பதியும்
புன்னகையில் உறங்கி
புன்னகையில் விழிக்கும்
காதல் நாட்கள்.
அது சரி..
திருமணம் முடித்து
அருகிலேயே இருக்கையில்
அப்போது அனுப்புவாயோ!
பள்ளிசைப்பாடல் என்றேன்.
“விடியலில்
இதழ்களால்
இரவு முடியலில்
விழிகளால்
உன் முகத்தாளில்
கவிதை எழுதுவேன்
கட்டாயம் படி”என்றாய்.
கள்வனின்
கள்ளச்சிரிப்பில்.
Add comment ஜனவரி 21, 2009
| Previous Posts |