Archive for பெப்ரவரி, 2009




காதல்..சிறகினிலே..

காதலர் தினத்தன்று
காவிகளுக்கும்..
காதலர்களுக்கும்
கலகமாம்…

நீயொ..காவி…
நான் உன் காதலி…
நமக்குள்
நடந்துகொண்டிருக்கிறது
எந்த கலகமுமில்லாமல்
காதலர்தினம்…
தினம்…தினம்..

Add comment பெப்ரவரி 15, 2009

காதல்..சிறகினிலே….

மல்லிகை பரவிய
மணற்ப்பரப்பில்..
மார்கழிக்கோலம்
இடும் நினைப்பில்
மெல்ல விரலால்
வரைகின்றேன்
விழியில் நிறைந்த
உன் உருவை..

சொல்ல நினைக்கும்
காதலெல்லாம்
சொல்லில் அடங்கா..
எனத்தெளிந்து
கள்ளத்தனமாய்
சுற்றறிந்து…
நிறைக்கிறேன்
காதலை உன்
மணல்வடிவில்

காற்றும் காலை
களைத்திடலாம்..
கடும் மழைவந்து
கரைத்திடலாம்
கால்கள் நடந்தே
அழித்திடலாம்
கலங்கவில்லை
என் காதல்..

காதலனே..

களைத்திட்ட
காற்றில்..
ஒட்டியிருக்கும்
கரைத்திட்ட
மழையால்..
நீர்நிலை தங்கியிருக்கும்
அழித்திட்ட
கால்களால்..
சிதறியிருக்கலாம்
அத்தனையும்
உனைச்சூழ்ந்தே
வாழ்ந்திருக்கலாம்..

Add comment பெப்ரவரி 15, 2009

காதல்..சிறகினிலே…

தெருமுனையில்
நீ..திரும்புவதற்க்கு முன்பே
தெரிந்துவிடுகிறது
வரப்போகிறாய் என்று

நடையும்  உடையும்
உறுதிப்படுத்தியும்
கண்கள்  உன்
கண்களுடன்
குத்திட்டதுபின்னே
ஒப்புக்கொள்கிறது

கடந்து சென்று
சேர்ந்த நொடியில்
இருவரும்
திரும்பிபார்க்க
சமநிலையில்  நிற்க்கிறது
காதல் தராசு

தேநீர் பருகல்த்துளியாய்
நாள்முழுதும்  இனிக்கிறது
மனதின் நாவினடியில்
தினம் தினம் நடக்கும்
இந்த..புத்துணர்வு  நாடகம்.
(என் இனிய நண்பர்களே..கடந்த 6 ஆம் தேதி பிப்ரவரி  யுடன் இந்த தளத்தில் கவிதைகள் எழுதத்தொடங்கி ஒரு வருடம் ஆகின்றது.இதனைத்தெரிவிப்பதன் மூலம்,  அந்த  மகிழ்வை  உங்கள் அனைவருடனும் பகிர்ந்துகொள்கிறேன்.இந்நாள் வரை எனக்கு விமர்சனங்களை தந்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் மிக்க நன்றி..தொடர்ந்து உங்கள் மறுமொழிகளை த்தாருங்கள்.)

Add comment பெப்ரவரி 8, 2009

காதல்..சிறகினிலே..

எப்போதும்போல்தான்
இருக்கிறது
எல்லா..நாட்களும்

சிறப்பாகிவிடுகிறது
சிலசமயம்
உன் வருகையால்

என்ன செய்வதென்று
தெரியவில்லை
கடந்த வருடங்களின்..
உனை அறிந்திடாத
வயதுகளின்..
நான்.
வாழ்ந்திடாத நாட்களை

Add comment பெப்ரவரி 5, 2009

காதல்.. சிறகினிலே…

எல்லோரிடமும் பேசிவிடுகிறேன்
இயல்பாய்..
என் எல்லா தவறுகளுக்கும்
காரணங்கள் சொல்லி..
விரைவாக..வாங்கிவிடுகிறேன்..
வாயாடிப்பட்டமும்..

எதுவும் முடியாமல்
உன் முன் படபடக்கையில்
தெரிந்துகொள்கிறேன்
எனக்குள் இருக்கும் என்னை..

அதனாலென்ன..
ஒன்றும் சிதறாமல்
சொல்லிவிடுகிறேன்
எல்லாவற்றையும்
என்..கவிதைகளில்..

Add comment பெப்ரவரி 3, 2009

காதல்..சிறகினிலே..

ஏற்பட்டுவிடுகிறது
எல்லா விபத்தும்
வேகத்தடைகளையும் மீறி…

எதற்க்கும்.
வெட்க காவல் எங்கும்
கொட்டிவைக்கிறேன்..
வரையறையற்று
நீ..பயணம் செய்யும்..
நம் காதல் சாலையெங்கும்

Add comment பெப்ரவரி 2, 2009

வழக்கொழிந்த..வார்த்தைகள்..

பொடக்காலி: வீட்டின் பின் பக்க..அல்லது இன்னொரு வழி(அசல் கோயமுத்தூருங்கோ..)

2 comments பெப்ரவரி 1, 2009

காதல்..சிறகினிலே….

கொள்ளனிடம்
சொல்லிச்செய்தாய்
காதல் சொல்ல தங்க மோதிரம்..
நெய்தவனிடம்
வாங்கி வந்தாய்

நேசம்  நிறைக்க
சேலைத்தந்திரம்..

உனக்கு..
சமைத்து..துவைத்து..
களைத்து நிமிர்கையில்
வீடு நிறைந்து
வெளியில் வழிகிறது..
நிருபிக்க அவசியமற்ற..
என் காதல்..
மாத்திரம்..

Add comment பெப்ரவரி 1, 2009

காதல்..சிறகினிலே….

பொழியும் நிலவொளி…
சிதறிய
விண் மீன் த்துளி…
காற்றுடன் பேசும்
கூந்தலும் ஆடையும்…
மின்வெட்டு இரவுடன்
இத்தனையும் என்னுடன்..

இவற்றையெல்லாம்
முந்திக்கொண்டு
ஒவ்வொன்றிலும் ஒட்டிக்கொண்டு…
நீயும்… உன் காதலும்…

Add comment பெப்ரவரி 1, 2009

Pages

Categories

Links

Meta

Calendar

பெப்ரவரி 2009
தி செ பு வி வெ ஞா
« Jan   மார் »
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

Posts by Month

Posts by Category