Archive for மார்ச், 2009
காதல்..சிறகினிலே…
உயிருக்குள் நடக்கும்
விபத்துக்கள் அனைத்திற்க்கும்
உண்மையில் நீதான்
காரணம் என்றாலும்
மருந்தென பொய்யாய்
மனதை மறைத்து
மீள.முயல்கிறேன்
வலித்தனிமையிலிருந்து…
உயிக்குத்தும் ஊசியாய்
உன் நினைவு துளைத்தெடுக்க..
சுக வேதனை சுமந்துசெல்லும்
உடல் பயண..நரம்பெல்லாம்
ஏற்றம் இரைக்கும்
இதய கிணற்றில்
தீராப்பயணங்கொண்டு..
நிறைகிறது…இப்படி
ஓர்..
ஆண் வடிவக்காதல்…
3 comments மார்ச் 22, 2009
காதல்..சிறகினிலே..
ஒவ்வொரு வார்த்தைக்கிடையிலும்
ஒரு அறிவுரையும்..
ஒவ்வொரு வார்த்தைக்கிடையிலும்
ஒரு சந்தேகமும்..
ஒவ்வொரு வார்த்தைக்கிடையிலும்
ஒரு சந்தோசமும்..
ஒவ்வொரு வார்த்தைக்கிடையிலும்
ஒரு சண்டையும்..
சாதாரணமாய்..
நடக்கிறது
நம் ஒவ்வொரு சந்திப்பிலும்.
Add comment மார்ச் 15, 2009
காதல்..சிறகினிலே..
எது..நடந்ததோ
அது நன்றாகவே நடந்தது..
எது நடந்து கொண்டிருக்கிறதோ
அது நன்றாகவே
நடந்துகொண்டிருக்கிறது
எது நடக்கவிருக்கிறதோ
அதுவும் நன்றாகவே
நடக்கும்
எளிதில்..எழுதிமுடித்துவிட்டேன்
நம் காதலின்..
பயணக்குறிப்பை.
2 comments மார்ச் 15, 2009
காதல்..சிறகினிலே…
எதையோ..சொல்ல நினைத்து.
எதையோ..சொல்லிச்செல்கிறாய் நீ..
எதையோ..சொல்லிவிட்டு..
அதுதான் என்று..
எண்ணிக்கொண்டிருக்கிறேன் நான்..
சொன்னது பனிமழை என
என் விழியை நோக்க..
வழிந்த எரிமழை கண்டு
விலகிச்செல்கிறாய்..நீ..
சொன்னது புயல் மழை என..
உன் விழியை நோக்க..
பொழிந்த பூ மழை கண்டு..
தவித்துப்போகிறேன் நான்..
எப்போது ஒத்துப்போகும்
பருவநிலை என்று..
நாம்..விலகிப்போனதும்
சலித்துத்தான்
கொள்கிறது..
நம் காதல்.
Add comment மார்ச் 15, 2009
காதல்..சிறகினிலே…..
எதைக் கொண்டும்
நிரப்ப முடியவில்லை..
நீ இல்லாத வெறுமையை…
சத்தம் நிறைந்த..
சந்தைகளில்
காற்றின் ஆடைபோல்
படர்ந்திருக்கிறது
நீ பேசாத மெளனம்…
பயணச்சன்னலில்
பதித்தக் கன்னத்தில்
வருடியத்தென்றல்
திரும்பிச் செல்கிறது
அருகில் நீ
இல்லை என்று…
நினைவுகளின் வெப்பத்தில்
தகிக்கின்ற தேகத்தால்
உறைந்திருந்த இதயம்
உருகுகிறது விழி வழியே..
துளிர்த்திட்ட துளிகளை
மைத்துளியாய் மெருகேற்றி
வடிக்கின்றேன்
கவிதைகளை
குறைந்த பட்ச
இளைப்பாரலாய்…
Add comment மார்ச் 11, 2009