Archive for ஏப்ரல், 2009
காதல்.சிறகினிலே…
வேறு ரத்த வகுப்பு
என்ற போதும் நிற்க்கவில்லை
மாற்று பாலியலாய்
மாறி விட்ட பதற்றமில்லை
உடல் வேறாய் போனதற்க்கும்
ஒரு துளியும் எதிற்ப்புமில்லை
சிறு ரத்தமும் சிந்தாமல்
சிரித்தபடியே நடக்கிறதிங்கே
இதயமாற்று சிகிசை
2 comments ஏப்ரல் 30, 2009
காதல்..சிறகினிலே..
தேநீர் பருகலுக்காய்
கிடைத்த நிமிடத்தில்
தவறாமல் உன் நினைவுகள்
களைப்பெடுத்துச்செல்கின்றன..
பேசுவதற்க்கு நேரமற்று
முயற்ச்சியிலேயே முடிந்துவிடுகிறது
நாள் பொழுது..
பேருந்து பயணத்திலும்..
படியிறங்கி நடக்கையிலும்
நீயே கடந்து போனாலும்
கவனிக்கதவறும் உறுதியில்
தனக்குத்தானே பேசிச்சிரித்து
கனவிலேயே நடக்கிறேன்..
சாப்பிட தட்டெடுக்கையில்
‘சாப்பிட்டாயா”
அனிச்சையாய் குரலெலுப்புகிறேன்
உள்ளுக்குள் எட்டிப்பார்த்து
உள்ளத்திற்க்குள்…
நடந்து முடிந்த
நாட்க்குறிப்பாய்
நான் எழுத எதுவுமின்றி
மூடிவைக்கிறேன் டைரியை
சோகத்திற்கொன்றாய்..
அதை ருசித்த
சுகத்திற்கொன்றாய்..
இரு துளி
கண்ணீரைப்பதித்து..
சாய்ந்துரங்கும்
எனைஎழுப்பி
நடக்கவிருக்கும்
நாளை சண்டையைச்சொல்லி
இதழ்கோடியில்
ஒரு சிரிப்பை தந்து
போர்த்திப்படர்கிறது
என்மேல்..
உரக்கமோ..உன் நினைவுகளோ..
Add comment ஏப்ரல் 26, 2009
காதல்..சிறகினிலே..
பார்வையால் பல்லந்தோண்டி
பதுக்கிவைத்த புதையலாய்
காதலை விதைத்த..
விழிகளுக்கு கொஞ்சம்..
பேசாத மடந்தையாய்
பேசத்தெரிந்த குழந்தையாய்
நான் பேசமறுத்ததெல்லாம்
நீ..பேசி நிறைத்துப்போன..
வார்த்தைக்குக்கொஞ்சம்..
உடை உரசும்
அருகில் வர..
உயிர் நழுவும்
ஒரு நிமிடம்
படக்கென்று
தடம் மாறி
பதைக்க வைத்த
குறும்புக்குகொஞ்சம்..
நடப்பதெல்லம்
நண்மைக்கோ..
இல்லை நான் செய்யும்
தவறுகளோ என..
புரியமல்
மயங்கும் மனம்
இமை விழிம்பில்
நீர் சுமக்க..
“சரிதன் போ..
பைத்தியம் என.”செல்லமாய்
தலைநீவ..
வந்த கை
பாதி வழி
திரும்பி அதை
பார்வையால் செய்த
பக்குவத்திற்க்கு கொஞ்சம்..
குவித்து வைத்த
காதலெல்லாம்
கூறு பிரித்து
கொஞ்சம் கொடுத்துவிட்டு..
மொத்தமாய் உனை
பதுக்கிக்கொண்டேன்
வேடமிட்ட வஞ்சகியாய்…
2 comments ஏப்ரல் 26, 2009
காதல்..சிறகினிலே..
வெறும் சடங்காக்க
மனமின்றிதான்
சொல்லமறுக்கிறேன்
நீ..இல்லாத வாழ்வை
வாழ்வென்று..
Add comment ஏப்ரல் 26, 2009
காதல்..சிறகினிலே…
தவறி விழுந்த
தளிரிலையாய்
பயணிக்கிறேன்
உனக்குள்
நடுநரம்பில்
தொடங்கி
கிளை நரம்பெங்கும்
சிலிர்க்கும் உன்
ரத்த..சதைகள்
படப்பட…
ஆனந்த பயணத்தில்
ஆழம்வரை எரிக்கிறேன்
ஆன்மாவின் அழுக்குகளை
வெளியேற விருப்பமின்றி
இலைவிதையாய்யாவேனோ
கிளைபரப்பும் விருப்பத்தில்..
உன்..ஆழ்மன..அரவணைப்பில்
சிக்கி..முக்கி..மக்கிப்போய்
உரமாகிப்போவேனோ..
உன்..கிளையெல்லம்..
பூ பூக்க..
எதுவும்..நடக்கட்டுமென்று..
அகல..விறிக்கிறேன்
சிறகை..
உனக்குள்..வாழ்வென்று
உறுதிக்குப்பின்…
2 comments ஏப்ரல் 13, 2009
காதல்..சிறகினிலே…
ஊடல்..பொழுதில்
உறுதியாய்ச்சொல்வேன்
இனிமேல் நடக்குமெனில்
இல்லை மண்ணிப்பென்று
போதும் அந்தொரு
வார்த்தையென்று
ஆயிரம் சத்தியம்
ஆனந்தமாய் வைப்பாய்
உனக்குத்தெரியுமதை
நீ..காப்பதில்லையென்று..
என்க்கும் தெரியுமது
உன்னால் முடியாதென்று….
நம்பிக்கையில்
நடப்போம்..
திருந்திடுவாய்..
என..நனும்.
மண்ணிப்பேன்.
என் நீயும்
அடுத்த..ஊடல்வரை…
சில…சிறுந்தவறுகள்
திருத்தலன்றி
ஏற்றுக்கொள்ளப்படுகிறது
குற்றமின்றி…காதலில்.
Add comment ஏப்ரல் 13, 2009
காதல்..சிறகினிலே…
கனவுகளாய்
மென்று தின்றும்
கவிதைகளாய்
பருகித்தீர்த்தும்
நிறைவதில்லை
காதல் மனது
நித்தியமாய்
நீ..அருக்கிருக்கும் வரை..
2 comments ஏப்ரல் 6, 2009
காதல்..சிறகினிலே…
சுடுகதிர்கள்
தெறிக்க வரும்
கதிரவனும்
கால்பதிப்பதில்லை..
குளிர் ஒளியை
தினம் பொழியும்
நிலவு நடந்த
தடமுமில்லை…
உடல் முழுதும்
கைகள் எனும்
அலையனுப்பி
துளவும்கடல்
அடையாளம்
வைப்பதில்லை…
இதழ் விரித்த
மறு நிமிடம்..நறு
மணமனுப்பும்
பூக்களெல்லாம்
பயணத்தின் பாதையேல்லம்
பதியம்போட்டுச்செல்வதில்லை..
ஒரு நிமிடம்
விழி நுழைந்து
மறு நிமிடம்
மனதில் எழுந்து
உயிர் வழியே
உலாவிச்சென்ற..நீ
பதிந்ததேன் என்
உணர்வில்லெல்லாம்
Add comment ஏப்ரல் 6, 2009
காதல்..சிறகினிலே…
நினைவுகளின்
வழியெங்கும்
நிழலனுப்பித்தேடுகிறேன்..
நிகள்காலச்செயலிலெல்லாம்
உன்..
நிழல் கிடக்க ஏங்குகிறேன்
குழல்பிரித்த
இருள் வானில்
வெள்ளி தேடும்
செல்லபிள்ளையாய்
விரல் நீட்டிதுளவுகிறேன்
நகர்முக..சாயலிலெல்லாம்
சாத்தியமற்றே
பயணிக்கிறேன்
பிரிவில்..
தீப்பிழம்பின் மீது
ஒரு பனித்துளியாய்…
Add comment ஏப்ரல் 6, 2009
காதல்..சிறகினிலே..
கார்த்திகையாய்
கருவிழிகள்..
மார்கழியாய்
மனப்புதையல்..
பூஞ்சோலையாய்
தார்ச்சாலையில்..
காத்திருக்கிறோம்
காதல்..பயணிகளாய்
அவரவர் பேருந்து
கடந்தபின்னும்..
Add comment ஏப்ரல் 2, 2009