Archive for மே, 2009




காதல்.சிறகினிலே..

நீ..வருவதற்க்குமுன்னெ
உறங்கிவிட்டேன்
நீ..எழுந்து கிளம்பியபின்ந்தான்
துயில் எழுந்தேன்

உனை பார்த்த
தடயமில்லை
கனவில் தவிர

எனை நானே
திட்டியபடி தேடுகிறேன்
வேறெதும் உண்டாயென

இரவில் பெய்த மழையில்
தனைக்குழைத்து
உன் காலணிச்சுவடை
பதியவைத்து
காத்திருந்தது
கோலம்போட்டு
கொண்டாடிய
என் வாசல்
செம்மண்.

Add comment மே 30, 2009

காதல்..சிறகினிலே…

கூடல்களை விட
ஊடல்களே..
குவிந்துகிடக்கிறது
நம்  காதலில்

குறைந்தபட்ச்ச
விருப்பமாய்
கேட்டாய்
சரிவிகிதமாகவாவது
மாற்றென்று

எப்படி
ஒப்புக்கொள்வேன்
கூடலுக்கு
வழிவகுக்கும்
என் ஊடல்
நாடகத்தை

Add comment மே 29, 2009

காதல்..சிறகினிலே…

எனக்காக நீ செய்த
எதுவும் எனை
வசீகரிக்கவில்லை

எல்லாம் 
எனக்காகவே செய்தாய்
என்பதைத்தவிர..

2 comments மே 29, 2009

காதல்..சிறகினிலே…

அடிவானத்தின்
அருகில் தான் இருந்தேன்
தொடத்தோன்றியதில்லை
ஒரு  போதும்

வசந்தங்களும் வாழ்க்கையும்
பிரிக்கமுடியாமல்
பிணைந்துதானிருந்தது
எப்போதும்

விருப்பமென்றோ..
வேணுதலென்றோ..
எதுவுமில்லாத
கை கூப்பலில்
வரமாய் நீ வந்தாய்

நேர்த்திகடனாய்
நான் வேண்டுமென்ற
நிபந்தனையில்.

2 comments மே 29, 2009

காதல்..சிறகினிலே…

குறி சொல்லும் கிழவி
குறித்துச்சொல்லிப்போனால்
களவாடப்படும் நேரமும்.காலமும்
வைத்திருக்கும்
வெள்ளி அலையய்
வீசித்திரியும்
கொள்ளை நிலவிடம்
அள்ளிச்செல்ல என்ன உள்ளது
என்று சொல்லி
எள்ளி நகைத்தேன்

வெட்க்கம் திருட
ஓர் வேடவன்
வந்த நாளில்
தேடி அலைகிறேன்
அவளை..இன்னும்
சொல்லச்சொல்லி..

Add comment மே 27, 2009

காதல்..சிறகினிலே…

செல்ல வேண்டியதை மறந்து

 நீ..நின்று போன இடத்தில்

நிலை கொண்டுவிடுகிறது நெஞ்சம்

எங்கெங்கு நடந்தபோதும்

அங்கு நான் நிற்க்க..

நீ விட்டுப்பொன

உன் பாதச்சூடு

என்பாதத்தில் பயணித்து

 இதயத்து ரத்த ஓட்டம்

அதிகரிக்கச்செய்யும்

 

எனைக்கண்டதும்

ஒட்டிக்கொள்ளும்

எனக்காக காத்திருந்த

நீ..பேசிப்போன ஒலியும்

நீ..பார்த்துப்போன ஒளியும்

 

உன் அடையாளம்

அனைத்தும் தேடி அழுகிறது

 பிரிவின் பெருவழி..

நீ..வேண்டவே வேண்டாம் என்று

உதறிவிட்டு புறப்படுகையில்

எனை ஏமாற்றி ஒளிந்துகொள்ளும்

 பாதச்சூடும்.ஒலி.. ஒளிக்கலவையும்

எனைப்போல் நீயும்

எதிர்பார்த்து வரும் நாளுக்காய்..

2 comments மே 25, 2009

காதல்.சிறகினிலே…

ஆழப்பாய மறந்த
கத்தியாய்
வார்த்தைகளை
செருகிவிட்டு
வந்தவழி போய்விடுகிறேன்

வலிப்பேன் என்றும்
முடிந்தால்
இறப்பேன் என்றும்
ஒரு வார்த்தை சொல்லாமல்
விழியிலே வைத்ததனை
விட்டேத்தியாய்
நிற்க்கிறாய்..சில நாள்

மறுபடி வந்து
மருந்திடுதல்
நடக்குமெனினும்
எப்படி சகிக்கிறாய்
இந்த இம்சைதரும்
இளவரசியை…

Add comment மே 22, 2009

காதல்..சிறகினிலே..

எனக்குள் விழுந்த ஒளி
உனக்குள் பிரதிபலிக்க
ஊடகமானது  காதல்

எனக்குள் ரசித்தவை
உனக்குள் சிலிர்த்திட
உணர்வானது காதல்..

எனக்குள் இனித்தவை
உனக்குள் ருசித்திடும்
உணவாகிப்போனது காதல்…

எனக்குள் தொலைந்த நான்
உனக்குள் கிடைத்திட..
உனக்குள் பிரிந்த நீ..
எனக்குள் பிறந்திட

உயிருக்குள் உயிர்  சுமந்த
இன்னொரு
கருவரையாய்  காதல்…

Add comment மே 21, 2009

காதல் ..சிறகினிலே..

நின்று புறப்படும்
ஒவ்வொரு பேருந்திலும்
ஏறத்தயங்கி
கிழக்கு மேற்க்காக
மாறி நிற்க்கும் கால்கள்

கடித்தெடுத்த
நகத்துகள்கள்
பல்லிடுக்கில்
மெல்லக்கிடைக்கும்
நேரப்பொழுதைக்கழிக்க…

தொலைவில் வரும்
உன் வண்டியின் ஒலியை
பேரிரைச்சலிலும்
உறுதிப்படுத்தும் உள்ளம்

திசை திரும்பாக்கண்களோடு
அவசரமாய் அடைந்துகொள்ளும்
அப்போது நின்ற
ஏதோ ஒரு பேருந்தில்

என் ஜன்னலருகில்
நீ..வந்து நிற்க..
தவிக்கும் உனை தவிர்த்து
யார்..யாரையோ
பார்த்துச்சிரிக்கும்
என் கள்ளப்புண்ணகை

களிப்பொடு நகர்கிறேன்
பேருந்தோடு
காத்திருந்த காலம்
உன் மீது  வீசி..

கொடுங்காரியாகத்தான்
நானும்.இருக்கிறேன்
எதற்க்கும் இரு நீ..
கொஞ்சம் எச்சரிக்கையாய்

Add comment மே 20, 2009

காதல்..சிறகினிலே..

தந்தையின்
சட்டையெடுத்து
அலவுகள் குறைத்து
அணிந்திருக்கிறேன்

அண்ணன் புதுச்சட்டை
எனக்குப்பிந்தான்
அவனுக்கு

அப்படி உன் சட்டை
எடுத்தணிய
எப்படி தெரிந்தது
உடலுக்கு
ஒவ்வொன்றுக்குமான..
வித்தியாசம்

2 comments மே 19, 2009

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

மே 2009
தி செ பு வி வெ ஞா
« ஏப்   ஜூன் »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Posts by Month

Posts by Category