Archive for ஜூன், 2009
காதல்..சிறகினிலே..
இறந்த காலம்
நிகழ்காலம்..
எதிர்காலம்
மூன்றுக்குமான
ஒற்றை
எடுத்துக்காட்டு
“நாம் காதலிக்கிறோம்”.
Add comment ஜூன் 28, 2009
காதல்..சிறகினிலே…
எல்லோரும்
பார்த்திருக்க
யாரும்
பார்க்கவில்லையென
கண்சிமிட்டும்
விண்மினிகள்
காதலர்கள்…
Add comment ஜூன் 27, 2009
காதல்..சிறகினிலே…
கனவுகள்
காத்திருக்கின்றன
இரவை
வரச்சொல்லி
நீயும்
காத்திருக்கிறாய்
உனை நிரப்ப..
என் கனவை
வரச்சொல்லி
வரவேண்டியவை
வந்தவுடன்
போய் விடுகிறது
என் தூக்கம்
Add comment ஜூன் 23, 2009
காதல்..சிறகினிலே..
தாங்க முடியாத
ஒரு மரணம்
தவித்துப்பிரிந்த
ஒரு பிரிவு
ஒதுக்கிச்செல்லும்
ஒரு ஸ்நேகம்
உடல் நிலை பாதித்த
பெரும் வலி
பசியில் துவண்ட
சில மணித்துளி
எது பாதித்த
நிலையிலும்
கை கால் மடக்கி
உன் மடியில் அடங்கி
சிறு பிள்ளையாய்
உறங்குகையில்
எவ்வுறவையும் விட
உயர்ந்ததாகிவிடுகிறது
உனக்கும் எனக்குமான
காதல்…
Add comment ஜூன் 22, 2009
காதல்..சிறகினிலே..
விழுந்த பூக்குளத்தில்
ஆழ நீந்துகிறேன்
வழியில் பார்க்கிறேன்
என்னைப்போல் ஒருத்திகளை
மயங்கிய தெளிவிலும்
தெளிந்த மயக்கத்திலும்
அவரவர் நிலைப்படி
வலிகள் பொதுவாய்
வைத்திருந்தாலும்
வெட்கமாய் வழிகிறது
அவர் விழிகளில் கதல்
கடைசியில் கிடப்பவள்
யாரெனத்தேடி
அடைகிறேன் ஆரம்பத்தை
கண்சிமிட்டிச்சிரிக்கிறாள்
காரணகர்த்தியாய்
ஏவாள் அங்கே..
Add comment ஜூன் 19, 2009
காதல்..சிறகினிலே..
உருவமற்றுத்திரிகிறேன்
காதல் பேழைக்குள்
அனுவாய்..அகிலமாய்
அடிக்கடி மாறும்
என் உருவம்
எரியலாம் குளிரலாம்
கால நிலை அறிவிப்பின்றி
வெட்கமும் வீரமும்
மோதி உடையும் புள்ளியில்
கணக்காய் கணக்கிறேன்
காதலின் எடை தாளாமல்
இழுத்திச்சாத்திய
கதவிற்க்குள்
உலகைப்படைக்கிறேன்
கடவுளாய்
காதல் கொடையில்
Add comment ஜூன் 18, 2009
காதல்..சிறகினிலே…
எதிரும் புதிருமாய்
எப்போதும் இருவரும்
சண்டைக்கோழிகளாய்
தலைசிலிர்ப்பி
திரிகிறோம்
எனக்குபிடித்த எதுவும்
உனக்கு பிடிப்பதில்லை
உனக்கு பிடித்த எதிலும்
எனக்கு உடன்பாடில்லை
துருவங்கள் இரண்டாய்
தொடர்கிறோம் காதலை
பொருத்தமில்லை இருவருக்கும்
போய் விடு என்கிறேன்
செல்லச்சிரிப்புடன்
மெல்லச்சொல்கிறாய்
“அடிச்சிறுக்கி..
உண்மையில் நமக்குத்தான்
பகுத்தறிவுத்திருமணம்”
என்று.
Add comment ஜூன் 16, 2009
காதல்..சிறகினிலே…
எடுத்து வரைகிறேன்
இதயத்தின்
இதழ் பக்கங்களில்
பேசும் ஓவியமாய்
கவிதைகளாய் நீ
பேசாத கவிதையாய்
ஓவியங்களாய் நீ
கனவுகளெனும்
கெட்டி அட்டையிட்டு
பத்திரமாய்
பொதித்து வைத்திருக்கிறேன்
நரம்புகள் பின்னிய
என் உடல் பையில்
நானும் மாணவிதான்
காதல் பள்ளியில்..
Add comment ஜூன் 13, 2009
காதல்..சிறகினிலே..
விலகி நடக்கிறேன்
விட்டு விலகிடும்
நாடகமாய்
தெரியும் உன் தலை
கண்ணாக உயரும்முன்
வாசம் மறைக்கத்தெரியா
மல்லிகையாய் பதுங்குகிறேன்
குரலுயர்த்தி பேசிச் செல்வாய்
எனைக்கூப்பிடும் விதமாய்
காதுக்கும் கட்டளையிட்டு
கண்மூடி இருந்திடுவேன்
சோகம் கொண்டுதிரிவாய் பின்
கோபம் கொண்டு கொலையாக்க எனை
தேடி அலைவாய்
நீரில் இட்ட கல்லாய்
நிகழ்வுகள் நான் நடத்த
நிறையும் காதல் குடம்
விலகிடும் விலகியமனம்
விளக்கவே முடியாமல்
விலகவே முடியாமல்
2 comments ஜூன் 12, 2009
காதல்..சிறகினிலே..
வெக்கையில்
தகிக்கிறது
வீதியெங்கும் வெயில்
அடைகாக்கும்
கோழியாய்
பதுங்கிக்கிடக்கிறது
பறவைகள் முதல்..
வழிந்து விழும்
வியர்வையை
வழித்துக்கடலிலெறிந்து
சுடுகதிர் உள்ளிலுத்து
நிலவாய்ப்பொழியென
சூரியனுக்கு கட்டளையிட்டு
காத்திருக்கிறேன்
கடற்க்கரையில்
காதலி என்ற
கர்வத்துடன்
Add comment ஜூன் 11, 2009
| Previous Posts |