Archive for ஜூன் 6th, 2009
காதல்..சிறகினிலே..
சண்டை நடக்கும்பொழுதுகளில்
பொதுவாய் விழும்
ஒரு வார்த்தை
“பேசாமல் இரு
புரிந்துகொள்”என்று
சண்டை முடிந்த இரவுகளில்
மெதுவாய் வரும்
ஒரு வார்த்தை
“இனி புரிந்துகொள்வோம்
பேசிக்கொள்வோம்”என்று
இப்படித்தான்
வெட்கமின்றி மாறுகிறது
நம் புரிதல்களுக்கான
முதல் நாள்.
3 comments ஜூன் 6, 2009