Archive for ஜூன் 10th, 2009
காதல்..சிறகினிலே..
பேரமைதி
நிறைந்துகிடக்கிறது
என் மொழியில்
வேறு யாருடனும்
பேசும் உத்தேசமின்றி
ஊமையாக உறுதி
செய்திருக்கிறது பாஷை
“நினைவுகளோடு
திரிகிறேன் பெண்ணே
பேச நேரமின்றி”
என்ற..உன்
குறுந்தகவல்
வலியிலும்
சிரிக்கவைக்கிறது
காதலின்
பெருமிகுதியில்
தூரங்களை
கடந்து விரைகிறது
ஊடகங்களற்று
உனைச்சேரும்
முடிவில் என் காதல்
வெறும் மெளனமாய்
Add comment ஜூன் 10, 2009