Archive for ஜூலை, 2009
காதல்..சிறகினிலே
கோபங்கள் மறந்து
ஓடிவரத்தான்
நினைக்கிறேன்
விலக்க தெரியவில்லை
பிரிவில் விழுந்த
கண்ணீர்த்திரையை
Add comment ஜூலை 8, 2009
காதல்..சிறகினிலே..
மழை நின்று
விட்டுப்போன
குளிர்சுகமாய்
அலைவந்து
அடையாளமிட்ட
ஈர மணலாய்
கதிர்மறைந்து
மிச்சம்விட்ட
இளம்சிவப்பாய்
உன் விரல்..
பிரிந்த
நிலையிலும்
மருதாணி
வண்ணம் மிஞ்சும்
என் கையெங்கும்
காதல் வெட்கத்தில்..
Add comment ஜூலை 7, 2009
காதல்..சிறகினிலே..
வேலை நிமித்தமாய்
வெளிநாட்டில் நீ
அணைத்துவிட்டுப்போன
உன் அலைபேசியை
தொடர்வுகொண்டு
ஆறுதல்பெறுகிறது
என் மனம்..
நான் என்று
அறிந்ததும்
தவிக்கும் அது
தகவல் தர
உனைத்தேடி
நீ இல்லையென
மொளனத்தில் சொல்லி
தேற்றுகிறது எனை
காதலின் வலி
கரைத்தலின்
முயற்ச்சியில்
நட்பாகிப்போனோம்..போ
நானும் ஒரு
அலைபேசியாய்.
Add comment ஜூலை 2, 2009