Archive for ஆகஸ்ட், 2009




பெண் எனப்படுபவள்…

பசிக்கிறது
அனைவருக்கும்
இவர்களுக்கும்தான்

அவர்களுக்கெல்லம்
பசி ஆற்றியபிறகு..

3 comments ஆகஸ்ட் 29, 2009

பெண் எனப்படுபவள்….

அன்னையிடம் மட்டும் அதிகமாய்
தந்தையிடம் கொஞ்சமாய்

தங்கை எனில் இனும்
கொஞ்சம அதிகமாய்

தம்பி எனில்
அண்ணன் எனில்
கொஞ்சமே.. கொஞ்சமாய்

இப்படித்தான் அன்புவைக்க
முடிகிறது ஆண்களால்
எனக்குத்தெரிந்தவற்றில்..

பதியம் போட்ட ரோஜா செடி..
பச்சைகலர் ப்ளாஷ்டிக் ஷ்பூன்…
பக்கத்து வீட்டுப்பெண்னின்
சித்தப்பா பெண்..

என்று எவரையும் எதுவையும்
நேசிக்கமுடிகிறது
பெண்களால் மட்டும்
வரையரையற்று…

3 comments ஆகஸ்ட் 28, 2009

பெண் எனப்படுபவள்….

தன் தேசம் முழுவதும்
தானமாக தந்து
நேசமுடன் கேட்கிறாள்
ஒருவனிடம்
வேலைக்காரி பட்டம்

1 comment ஆகஸ்ட் 27, 2009

பெண் எனப்படுபவள்…

ஒவ்வொரு
ஆணின் வெற்றிக்குப்பின்னும்
பெண் தான்  இருக்கிறாள்

அவன் தோற்றவைகளின்
கோபங்களை
சுமந்துகொண்டு..

2 comments ஆகஸ்ட் 26, 2009

பெண் எனப்படுபவள்…

ஆறறிவு கொண்ட
ஆனினத்தை
இரட்சிக்கும்
ஏழறிவு கொண்ட
தேவதைகள்

அவர்கள்
ஒப்புக்கொண்ட
அதே ஆறறிவை
ஏற்றுக்கொண்டு..

Add comment ஆகஸ்ட் 25, 2009

காதல்..சிறகினிலே…

இதுவரை பார்த்த அன்னை
இன்று ஏனோ தோழி ஆனாள்

கடுகடுவென இருந்த தந்தை
குண நலன் குன்றிய
குழந்தை யானார்

அண்ணனும் தம்பியும்
அதட்டி உருட்டும்
சிறு பிள்ளையானார்

தெருவினில் நடப்பவர்
தெரிந்தவர் அனைவரும்
உறவுகளன்றியும்
நேசமானார்

இதுவரை உண்டதும்
இதுவரை உறங்கியதும்
இதுவரை வாழ்ந்ததும்
இதற்க்குத்தான் என்பதாய்

கண நொடி காதல் வந்து
கரம்பிடித்து தொடங்குகையில்
மறுபடி பிறந்தது
நிஜமாய் வாழத்தொடங்கிய
வாழ்வின் முதல் நாள்

4 comments ஆகஸ்ட் 19, 2009

காதல்..சிறகினிலே..

நடு வானில்
பறக்கின்ற சிறு துகளாய்
நீயும்..நானும்..

விளிம்பற்ற பிரபஞ்சத்தில்
விதிப்படியே காதலராய்

பெருங்காற்றோ!..
பெருமழையோ!..
இழுத்துச்செல்லுமோ
தனித்தனியே?..

இருந்தாலும்
பயமின்றி
மிதக்கின்றோம்
மேகக்கடலில்

இதுகாரும் நடந்தவைக்கு
எதுவெல்லாம் காரணமோ
அதுகாரும் அவ்வப்போது
அவை வந்து சேர்க்கக்கூடும்

அவநம்பிக்கை
சிலநேரம்
வலி தந்து
தலைதூக்கும்

முழுநம்பிக்கை
கொள்ளும் மனம்
உயிர்க்காதலின்
உண்மை மீது

Add comment ஆகஸ்ட் 18, 2009

காதல்..சிறகினிலே…

எனை அழைத்து பேசுகிறாய்
நமக்கு வேண்டா விசயங்களை

அதிலத்தனையிலும் பொதிக்கின்றாய்
உன் உயர்குணங்களை
எடுத்துக்காட்டி

கதையனைத்தும்
கேட்டுமுடித்தபின்
கூசாமல் புகழ்வேன் உனை

இதையனைத்தும் பார்த்திருந்த
காதல் தலை அடித்துக்கொள்ள..

தலை சொரிந்து
நிற்க்கின்றேன் அதன் முன்
கொஞ்சம் அனுசரித்துக்கொள்
என்ற கெஞ்சலுடன்

Add comment ஆகஸ்ட் 18, 2009

காதல்..சிறகினிலே…

உறைந்துகிடந்த
கோபக்கனல்கள்
உருகத்தொடங்கும்
காரணங்கள் புரிகையில்

சரிதானே நான் என்று
தலை சாய்த்த உன் பார்வை
கண்ணத்தில் பிறந்த சிவப்பை
காதுவரை கொண்டு செல்லும்

விரல் கோதும்
விருப்பம் வேண்டி
அலைபாயும் கூந்தலாய் மனது

விரிகின்ற இமைக்குடைகள்
விழுங்கும் உனை
விபரம் சொல்லாது

இணைவதும் பிரிவதும்
இயல்பாகிப்போன நமக்குள்
இனிப்பிற்க்கும் துவர்ப்புக்கும்
இடைப்ப்ட்ட ஒரு சுவையாய்
இப்படியும் சிலநிமிடங்கள்
இனிமையான காதல் வழ்வில்

Add comment ஆகஸ்ட் 17, 2009

காதல்..சிறகினிலே…

வெகு தூரம் வந்துவிட்டேன்
உனைத்தேடி

பேசிச்சிரித்தலிலும்
கோபித்து குளிர்தலிலும்
காதலிலும் காமத்திலும்
எதிலும் நீயில்லையென
திகைக்கிறது மனக்கண்

பழகி நடந்தாலும்
மறக்காமல் தேடும்
என் விருப்ப சொரூபம்

என் தேடல் என்பது
என் விருப்ப குணங்கள் கொண்ட
உனக்குள் இல்லாத உன்னை

பொய்த்தேடல்
உறுத்தும்
அவ்வப்போது

உன் தேடலின் முடிவென
எப்போது எனைச்சேரும்
உன் களைத்த உறக்கத்தை
காண்கையில்.

2 comments ஆகஸ்ட் 14, 2009

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

ஆகஸ்ட் 2009
தி செ பு வி வெ ஞா
« ஜூலை   செப் »
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

Posts by Month

Posts by Category