Archive for செப்டம்பர், 2009




பெண் எனப்படுபவள்…

உனக்கு மகளாக பிறக்கச்சம்மதித்து
உன்னுடன் இணையாக வளரச்சம்மதித்து
உனக்காக உருகி வாழச்சம்மதித்து
உன்னையே மறுபடியும் பெற்றெடுக்கச்சம்மதித்து….

விரும்பித்தான் நேசிக்கிறோம்
வெவ்வேறு வடிவங்களில்..
விட்டு விலகிடும் எண்ணமில்லை
எவ்வழியிலும்

மொத்த வாழ்வையும்
பிய்த்து பிய்த்து கொடுத்தபின்னும்

எவ்வடிவிலும் முழுமையாய்
நிறைய மறுப்பதேன்
உனக்கு கொடுத்த எந்த
உறவுக்கோப்பையிலும்..

4 comments செப்டம்பர் 26, 2009

பெண் எனப்படுபவள்…

விரல் நீட்டி
ஒரு குற்றம் சொல்ல..

நெருப்புத்துளி ஒன்று
தெறித்தது போல்
வலி என்றால்

பலகாலமதை
எரிமலைக்குழம்பாய்
இதயத்தில்  சுமக்கும் பெண்கள்
விலகாத வேதனை
நீ விளங்குவதெப்படி..

2 comments செப்டம்பர் 25, 2009

பெண் எனப்படுபவள்…

ஐந்தாம் வகுப்பில் ஆனந்தியைப்பிடிக்கும்

எட்டாம் வகுப்பில் எலிசபெத்திடம் நேசம்

பத்தாம் வகுப்பில் பார்வதியிடம் கண்களால் காதல்

கல்லூரியில் கொஞ்சம் தைரியமாய்
கல்பனாவோ  கார்த்திகாவோ!..

திருமணம் என்றதும்
நடிகையின் சாயலில்

அதற்க்குப்பின்னும்
மனைவிதவிர
மற்றவர்களையும் ரசிக்கிறாய்

கடந்த காதல்
கதைகள் சொல்லி
பலர்முன்
கைதட்டி சிரிக்கிறாய்

மிகப்பிடித்த முகம் கூட
உனை பிடித்த நொடி மறக்க..
வாய் பிளந்து கதைகேட்பவளுக்காய்

எப்போதும் ஏன்
உன்கையில்
சந்தேகக்கொள்ளி!.

8 comments செப்டம்பர் 23, 2009

காதல் சிறகினிலே…

உலகெலாம்
ரசித்திருக்க
பார்ப்பவர்
எவருமில்லையென
பதுங்கிடும்
வென்ணிலவின் பயணமாய்
நகர்கிறது நம் காதல்..

கார்தனில் நுழைந்ததில்
கவிழ்ந்ததில்
ஓர் அழகு..

எட்டிபார்த்திடும்
சிறு பில்ளையாய்
தலை காட்டிட
ஓர் அழகு..

பால்வெலி நீலமாய்
பரந்து விரிந்திட
பார்வைக்கு
எத்தடங்கலன்றி
நேராய்
குளிர் பாய்ச்சிட
ஓர் அழகு..

காலையில் கதிரவன்
கைநீட்டி
தொடுகையில்
தூங்காத
விழி மயங்க
விடை பெறுவதும்
ஓர் அழகு..

கவிதையாய்
காதலாய்
இன்று
மொத்தமாய்
வாழ்ந்த திருப்தியில்

நாளை வரும்
நாளை
நான் என்ன
செய்வேன் சொல்?

Add comment செப்டம்பர் 8, 2009

பெண் எனப்படுபவள்…

எப்போதும் கேட்கிறார்கள்
யாரோ ஒருவறேனும்
ஆனுக்காய்
தாஜ்மஹால் கட்டியவள்
உண்டா? என்று..

பளிங்குகளின்
கலவைகளை தவிர்த்து
உடல் சதைக்குள்
உணர்வுகளை புதைத்து
உயிருள்ள தாஜ்மஹால்களாய்
உலவுவதை மறந்து..

5 comments செப்டம்பர் 5, 2009

Pages

Categories

Links

Meta

Calendar

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஆக   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Posts by Month

Posts by Category