பெண் எனப்படுபவள்…

செப்டம்பர் 23, 2009 uumm

Tags: , ,

ஐந்தாம் வகுப்பில் ஆனந்தியைப்பிடிக்கும்

எட்டாம் வகுப்பில் எலிசபெத்திடம் நேசம்

பத்தாம் வகுப்பில் பார்வதியிடம் கண்களால் காதல்

கல்லூரியில் கொஞ்சம் தைரியமாய்
கல்பனாவோ  கார்த்திகாவோ!..

திருமணம் என்றதும்
நடிகையின் சாயலில்

அதற்க்குப்பின்னும்
மனைவிதவிர
மற்றவர்களையும் ரசிக்கிறாய்

கடந்த காதல்
கதைகள் சொல்லி
பலர்முன்
கைதட்டி சிரிக்கிறாய்

மிகப்பிடித்த முகம் கூட
உனை பிடித்த நொடி மறக்க..
வாய் பிளந்து கதைகேட்பவளுக்காய்

எப்போதும் ஏன்
உன்கையில்
சந்தேகக்கொள்ளி!.

Entry Filed under: கவிதை

8 Comments Add your own

  • 1. soundr  |  செப்டம்பர் 24, 2009 at 10:41 மு.பகல்

    ஐந்தாம் வகுப்பில் ஆனந்தைப்பிடிக்கும்

    எட்டாம் வகுப்பில் எட்வினிடம் நேசம்

    பத்தாம் வகுப்பில் பிரபாகரிடம் கண்களால் காதல்

    கல்லூரியில் கொஞ்சம் தைரியமாய்
    கண்ணணோ கபீரோ!..

    திருமணம் என்றதும்
    கனவானின் சாயலில்

    அதற்க்குப்பின்னும்
    கணவனை தவிர
    மற்றவர்களையும் ரசிக்கிறாய்

    கடந்த காதல்
    கதைகள் எண்ணி
    ரகசியமாய்
    சிரிக்கிறாய்

    உனக்கு மிகப்பிடித்த முகம் கூட
    உன் காதல் கதைகளை
    பொதுவிலே நகையாட‌

    அறிந்தும் அறியாதது போல்
    வாய் பிளந்து பிற‌கதைகள்
    மட்டும் பேசுபவனுக்காய்

    எப்போதும் ஏன்
    உன்கையில்
    சந்தேகக்கொள்ளி!…

    its easy to scribble something like this.
    “what you think is what you become” – think good and spread goodness. god bless.

    • 2. uumm  |  செப்டம்பர் 25, 2009 at 8:35 மு.பகல்

      thank you.

  • 3. kapilashiwaa  |  செப்டம்பர் 25, 2009 at 9:22 மு.பகல்

    இந்த கவிதை ரொம்ப நல்லா இருக்கு உமா.
    //மிகப்பிடித்த முகம் கூட
    உனை பிடித்த நொடி மறக்க..
    வாய் பிளந்து கதைகேட்பவளுக்காய்//
    ஆட்டோகிராப் படம் எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு கேள்விய உண்டாக்கின மாதிரி இந்தக் கவிதையிலும் இருக்கு. வாழ்த்துக்கள் உமா.

  • 4. vijaygopalswami  |  செப்டம்பர் 25, 2009 at 3:41 பிற்பகல்

    அக்கா…. இது ஏதோ என்னுடைய கொலைவெறிக்கு எதிர் வெறி மாதிரி தெரியுதே… தயவு செய்து இப்படி எல்லாம் போட்டுக் குடுத்து மானத்த வாங்ககாதீங்க… :) :)

  • 5. uumm  |  செப்டம்பர் 26, 2009 at 9:02 மு.பகல்

    நன்றி தம்பி..தொடர்ந்து மறுமொழிகளைத்தாருங்கள்.

  • 6. uumm  |  செப்டம்பர் 26, 2009 at 9:03 மு.பகல்

    நன்றி.தொடர்ந்து மறுமொழிகளைத்தாருங்கள்.

  • 7. kuttysamy  |  அக்டோபர் 24, 2009 at 12:42 பிற்பகல்

    ”உன் கையில்” என்பதை திருத்தி ”சிலர் கையில்” என்று எழுதவேண்டும் உமா ….ரசித்தேன் வாழ்த்துக்கள்

    • 8. uumm  |  அக்டோபர் 26, 2009 at 8:22 மு.பகல்

      thank you .visit again.


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

செப்டம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« ஆக   அக் »
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

Most Recent Posts