பெண் எனப்படுபவள்…
செப்டம்பர் 26, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., கவிதை, கவிதைகள், காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
உனக்கு மகளாக பிறக்கச்சம்மதித்து
உன்னுடன் இணையாக வளரச்சம்மதித்து
உனக்காக உருகி வாழச்சம்மதித்து
உன்னையே மறுபடியும் பெற்றெடுக்கச்சம்மதித்து….
விரும்பித்தான் நேசிக்கிறோம்
வெவ்வேறு வடிவங்களில்..
விட்டு விலகிடும் எண்ணமில்லை
எவ்வழியிலும்
மொத்த வாழ்வையும்
பிய்த்து பிய்த்து கொடுத்தபின்னும்
எவ்வடிவிலும் முழுமையாய்
நிறைய மறுப்பதேன்
உனக்கு கொடுத்த எந்த
உறவுக்கோப்பையிலும்..
Entry Filed under: கவிதை
4 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
padmahari | செப்டம்பர் 27, 2009 at 9:56 மு.பகல்
பிரமாதம்! அருமையான வாழ்க்கைப் பதிவு! உங்கள் கவிதைப் பகிர்வு தொடர வாழ்த்துக்கள்.
2.
uumm | அக்டோபர் 5, 2009 at 8:27 மு.பகல்
நன்றி. தங்களின் மேலான விமர்சனங்களை தொடர்ந்து தாருங்கள்.
3.
soundr | செப்டம்பர் 29, 2009 at 8:21 மு.பகல்
//பிய்த்து பிய்த்து கொடுத்தபின்னும்//
3rd class
the words are very raw and seem odd with other lines.
//எவ்வடிவிலும் முழுமையாய்
நிறைய மறுப்பதேன்
உனக்கு கொடுத்த எந்த
உறவுக்கோப்பையிலும்//
“A” class
4.
uumm | அக்டோபர் 5, 2009 at 8:22 மு.பகல்
நன்றி.