Archive for நவம்பர், 2009
பெண் எனப்படுபவள்

மாறித்தான் போகும்
ஒவ்வொருவர்
கை மணமும்
கலந்துள்ள
வியர்வையின் வாசம்
வித்தியாசப்படுவதால்
1 comment நவம்பர் 28, 2009
பெண் எனப்படுபவள்
காதலை கவிதையாக
காதலை சுவாசமாக
காதலை காமமாக
காதலை குற்றமாக
காதலை வெறும் காரணமாக
காதலை இயல்பான காதலாக
நிர்ணயிக்கிறது
காதலியாகும்
பெண்னின் குணம்
2 comments நவம்பர் 27, 2009
பெண் எனப்படுபவள்

பெண்மையின்
சிவந்த வெட்கம்
மலர்ந்த புன்னகை
நிமிர்ந்த அறிவு
அடர்ந்த அன்பு…
உலகை
புதிப்பிப்பதற்கான
இன்னொரு வாய்ப்பு
Add comment நவம்பர் 26, 2009
பெண் எனப்படுபவள்

ஆழ்கடல்
மனமென்றும்
அறியமுடியாதென்றும்
காரணங்கள்
சொல்லித்தவிர்க்கும்
கதைகள் பல இங்கே
விருப்பங்களும்
விளக்கங்களும்
வெளிப்படையாய்
விரிந்துகிடக்கும்
எப்போதும்
பெண்களின்
கண்களில்
Add comment நவம்பர் 26, 2009
பெண் எனப்படுபவள்
தனித்தனி
பூக்களாய்
படைத்து படைத்து
சலித்துப்போய்தான்
மொத்தமாய்
படைத்துவிட்டான்
கொத்து கொத்தாய்
பெண்களென்று..
1 comment நவம்பர் 26, 2009
பெண் எனப்படுபவள்
வெடித்துச்சிதறும்
பிழம்பாக
வெண்ணிலவின்
குளிராக
சிரிப்பாக
சிணுங்களாக
பயமாக
பரிதவிப்பாக
வித வித
ஒலிச்சிதறல்கள்
பிரபஞ்சமெங்கும்
பெண்களால்
காற்றைப்போல
காற்றைவிடவும்
காற்று இல்லாமலும்
ஒவ்வொருவர்
சுவாசத்திலும்
2 comments நவம்பர் 20, 2009
பெண் எனப்படுபவள்

இதய பாரம் இறக்கி
இடுப்புபாரம் ஏற்றும்
ஒய்யார ஊர்வலம்
காதல்களும்
கவலைகளும்
கலந்து
கரைந்து போகும்
வற்றாத நீர்வளம்
பட்டது பெரு வலி
என பதைத்த நெஞ்சம்
நடந்த நிகழ்வுகள்
சொல்கையில்
நகைச்சுவையாகிப்போகும்
நாணமில்லாமல்
கண்ணுக்குள் விழுந்த காதல்
கண்டெடுப்பாள் ஒருத்தி
கண்ணீரில் விழுந்த காதால்
கரையச்செய்வாள் ஒருத்தி
கொட்டியது
வெறுங்குடங்கள்
அவரவர்
குடங்கள்
தூக்கியபோது
கை மாறும்
ஆறுதல் குடங்கள்
4 comments நவம்பர் 19, 2009
பெண் எனப்படுபவள்

கண்களில்
கவிழ்ந்திடும்
காந்தத்தில் ஓர் அழகு
கார்குழல்
ஒதுக்கி முடிந்ததில்
ஓர் அழகு
மெல்லிய சிரிப்பொளி
இதழ் கசிந்ததில்
ஓர் அழகு
கொள்ளென கை கொட்டி
சிரிப்பதை விட
ஏதழகு
ஊடலும் கூடலும்
ஓடலும் ஆடலும்
பாடலும் தேடலும்
ஒருங்கே
ஒளித்துவைத்து
உயர்வினி இல்லையென
உள்ளதெல்லாம் கொட்டிவைத்த
பெண் என்ற படைப்பே
பிரபஞ்சத்தின் பேரழகு
Add comment நவம்பர் 18, 2009
பெண் எனப்படுபவள்
அவனுக்கு
நினைவு குறிப்பேடு
நிகழ்வுகளின் அலாரம்
அவள்..
எழுந்துருங்கள்
நேரமாகிவிட்டது முதல்
உறங்குங்கள்
நேரமாகிவிட்டது வரை
குறிப்பேடின்
அடிக்கோடிட்ட
அடுத்தடுத்த வரியாய்
“சொல்ல மாட்டியா..” என்பது
முதல் ஞாபகப்படுத்தல்
பதியாத போது
இரண்டவது முறையோ
மூண்றாவது முறையோ
சொல்ல நேர்ந்தால்
அடிக்கொடிட்ட
அந்த வார்த்தை
தவறாது சொல்லப்படுமென
அர்த்தம்
பல நாள் கவனிப்பில்
ஒரு நாள் கேட்டேன்
உனக்கு எதற்காவது
அலாரமாகி இருக்கிறாரா..என்று
அமைதியாய்
அடர்த்தியாய்
ஆழமாய் பார்த்து
வெகு இயல்பாய்
சொல்லிப்போனால்
வெளிக்கிளம்பும்
எல்லா தருணத்திலும்
“இடுப்புச்சேலையை
இழுத்துப்போர்த்து” என்பதை.
Add comment நவம்பர் 16, 2009
| Previous Posts |



