பெண் எனப்படுபவள்…
நவம்பர் 5, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., உமா, கவிதை, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
வெளியூருக்கோ
வெளிக்கிளம்பலோ
தவறாமல்
வீட்டுப்பெண்களிடம்
விசாரிக்கும்
ஒரு குரல்
தொலைகாட்சிமுன் அமர்ந்தபடி
வெளித்திண்ணையில் நடந்தபடி
அடுப்பை அணைத்தாயா
பின்கட்டு கதவு சாத்தினாயா
பூட்டு சாவி எடுத்தாயா
தண்ணீர் பாட்டில் உள்ளதா
இன்னும் பல..பல..
கரைந்து கடந்த
நிமிடங்கள் தொலைந்தபின்
அவசரப்படுத்தும் அதே குரல்
அர்த்தமின்றி கேட்கும்
இன்னும் ஒரு கேள்வி
இவ்வளவு நேரம்
என்ன செய்தாய் என்று
Entry Filed under: கவிதை
4 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
cleorulez | நவம்பர் 5, 2009 at 8:37 மு.பகல்
Rightly said!! This is very common for a common woman!!! No modern age can demolish this Indian culture…
2.
soundr | நவம்பர் 5, 2009 at 11:49 மு.பகல்
ha ha haaa….
nice
இது
நடக்காத வீடே இல்லை
எனலாம்.
என்ன செய்வது,
இந்த கேள்விகளையெல்லாம்
முன்னதாகவே ஒரு தரம்
கேட்காவிட்டால்
அந்த பயணம் முழுவதும்
இது போன்ற கேள்விகள்
சந்தேகங்களாய் தன் சங்கை
நெறிக்கும் என்ற பயம்
அடுத்த தரப்பினர்க்கு.
ஆனாலும், அந்த
//இவ்வளவு நேரம்
என்ன செய்தாய் // என்ற கேள்வி தான்
எல்லா பெண்களுக்கும்
எல்லா காலத்திலும்
threshold point.
பாருங்கள்,
இந்த கேள்விக்கு மட்டும்
//அர்த்தமின்றி//
என்ற அடைமொழி
3.
அடலேறு | நவம்பர் 9, 2009 at 8:22 மு.பகல்
அடடா , ஒரு சிறு நிகழ்வையும் கவிதையாக்கும் உங்க திறன் பாராட்டப்பட வேண்டியது
4.
uumm | நவம்பர் 9, 2009 at 8:28 மு.பகல்
thanks for your commend adaleru. visit again.