பெப்ரவரி 2012 க்கான தொகுப்பு




காதலர் தினம்

 

ரோஜாக்கூட்டத்தில்
எனை மட்டும்
எடுத்து வந்தாய்

சுமந்த காதலை
சொல்லும் வழியாக
காதலர் தினம் என்று
கை மாறிக்கொண்டிருக்கின்றன
மிச்ச ரோஜாக்கள்

Add a comment பெப்ரவரி 14, 2012

காதலர் தினம்

Jasmine flower (29)

 

அய்யோ..
இன்று
காதலர் தினம்
ரோஜா தான்
தரவேண்டும் என்கிறேன்
“எனக்கு எப்போதும்
மனைவியர் தினம்தான்”
என்கிறாய்
மல்லிகையை
வைத்துக்கொண்டு

Add a comment பெப்ரவரி 14, 2012

காதலர் தினம்

நீ பார்க்க பார்க்க
அழகாகிப்போனேன்
“அழகி நீ” என்று
எனை பார்த்துகிடந்த
பரவசத்தில்

Add a comment பெப்ரவரி 14, 2012

மழை மொழி:–


மழையே
என் மழையே
ஏன் மடியில்
வந்து விழுகின்றாய்

பொதுவில் இடம் இருக்க
எனை தேடித்தேடி
ஏன் நனைகின்றாய்

சிறகுடன் இறகும்
சேர்ந்து நனைய
குளிரும் எனை ஏன்
ரசிக்கின்றாய்

வரப்புகள் அங்கே
வாய்ப்பார்த்திருக்க
வீணாய்  என் மேல்
பொழிகின்றாய்

ரகசியம் வைத்த
மனதைத்தேடி
உனை ரசித்தத்தை
நீயும் அறிந்தாயோ

காதலி நான்
என கட்டியம் கூற
விளக்கமாய் வந்து
விழுந்தாயோ

ஒப்புக்கேனும்
ஒப்புக்கொண்டால்
உடனே விலகிச்செல்வாயா
இல்லை சத்தியம்
செய்யடிஎன மறித்து
விள்ளங்க கடிதம்
கேட்பாயோ

நினைத்ததனாலே
பிடித்ததனாலே
விரும்பியே
நனைகிறேன்
புரியாதா

நிறைந்திட நிறைந்திட
காதல் வழங்கினும்
குறைவெனும்
ஆண் குணம்
கொண்டாயோ

காதலன் ஆனதால்
நின்றாயோ
நீயும்
அதில் நின்றாயோ

Add a comment பெப்ரவரி 3, 2012

பக்கங்கள்

வகைகள்

இணைப்புகள்

மேல்

நாள்காட்டி

பெப்ரவரி 2012
தி செ பு வி வெ ஞா
« Jan   மார் »
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

Posts by Month

Posts by Category

 
Follow

Get every new post delivered to your Inbox.