Posts filed under 'Uncategorized'




காதல் சிறகினிலே..

எழுதி வைத்த
தற்குறிப்பால்
பாதி அறியமுடியும்

கைகளுக்குள் கை பதித்து
கொஞ்சம் அறிய முடியும்

சில காலம் பேசி ப்பழக
இன்னு கூட முடியும்

இது எதுவும் நடக்காமல்
இரண்டு நிமிட..
உற்றுப்பார்வையில்

உனை முழுதும்
அறிய முடிந்தது
உள்ளே…காதல்
கண்திறந்ததால்…

Add comment மே 2, 2009

காதல்.சிறகினிலே…

வேறு ரத்த வகுப்பு
என்ற போதும் நிற்க்கவில்லை

மாற்று பாலியலாய்
மாறி விட்ட பதற்றமில்லை

உடல் வேறாய் போனதற்க்கும்
ஒரு துளியும் எதிற்ப்புமில்லை

சிறு ரத்தமும் சிந்தாமல்
சிரித்தபடியே நடக்கிறதிங்கே

இதயமாற்று சிகிசை

2 comments ஏப்ரல் 30, 2009

காதல்..சிறகினிலே..

தேநீர் பருகலுக்காய்
கிடைத்த நிமிடத்தில்
தவறாமல் உன் நினைவுகள்
களைப்பெடுத்துச்செல்கின்றன..

பேசுவதற்க்கு நேரமற்று
முயற்ச்சியிலேயே முடிந்துவிடுகிறது
நாள் பொழுது..

பேருந்து பயணத்திலும்..
படியிறங்கி நடக்கையிலும்
நீயே கடந்து போனாலும்
கவனிக்கதவறும் உறுதியில்
தனக்குத்தானே பேசிச்சிரித்து
கனவிலேயே நடக்கிறேன்..

சாப்பிட தட்டெடுக்கையில்
‘சாப்பிட்டாயா”
அனிச்சையாய்  குரலெலுப்புகிறேன்
உள்ளுக்குள் எட்டிப்பார்த்து
உள்ளத்திற்க்குள்…

நடந்து முடிந்த
நாட்க்குறிப்பாய்
நான் எழுத எதுவுமின்றி
மூடிவைக்கிறேன் டைரியை
சோகத்திற்கொன்றாய்..
அதை ருசித்த
சுகத்திற்கொன்றாய்..
இரு துளி
கண்ணீரைப்பதித்து..

சாய்ந்துரங்கும்
எனைஎழுப்பி
நடக்கவிருக்கும்
நாளை சண்டையைச்சொல்லி
இதழ்கோடியில்
ஒரு சிரிப்பை தந்து
போர்த்திப்படர்கிறது
என்மேல்..
உரக்கமோ..உன் நினைவுகளோ..

Add comment ஏப்ரல் 26, 2009

காதல்..சிறகினிலே..

வெறும்  சடங்காக்க
மனமின்றிதான்
சொல்லமறுக்கிறேன்
நீ..இல்லாத வாழ்வை
வாழ்வென்று..

Add comment ஏப்ரல் 26, 2009

காதல்..சிறகினிலே…

ஊடல்..பொழுதில்
உறுதியாய்ச்சொல்வேன்
இனிமேல் நடக்குமெனில்
இல்லை மண்ணிப்பென்று

போதும் அந்தொரு
வார்த்தையென்று
ஆயிரம் சத்தியம்
ஆனந்தமாய் வைப்பாய்

உனக்குத்தெரியுமதை
நீ..காப்பதில்லையென்று..
என்க்கும் தெரியுமது
உன்னால்  முடியாதென்று….

நம்பிக்கையில்
நடப்போம்..
திருந்திடுவாய்..
என..நனும்.
மண்ணிப்பேன்.
என் நீயும்
அடுத்த..ஊடல்வரை…

சில…சிறுந்தவறுகள்
திருத்தலன்றி
ஏற்றுக்கொள்ளப்படுகிறது
குற்றமின்றி…காதலில்.

Add comment ஏப்ரல் 13, 2009

காதல்..சிறகினிலே…

கனவுகளாய்
மென்று தின்றும்
கவிதைகளாய்
பருகித்தீர்த்தும்
நிறைவதில்லை
காதல் மனது
நித்தியமாய்
நீ..அருக்கிருக்கும் வரை..

2 comments ஏப்ரல் 6, 2009

காதல்..சிறகினிலே…

சுடுகதிர்கள்
தெறிக்க வரும்
கதிரவனும்
கால்பதிப்பதில்லை..

குளிர் ஒளியை
தினம் பொழியும்
நிலவு நடந்த
தடமுமில்லை…

உடல் முழுதும்
கைகள் எனும்
அலையனுப்பி
துளவும்கடல்
அடையாளம்
வைப்பதில்லை…

இதழ் விரித்த
மறு நிமிடம்..நறு
மணமனுப்பும்
பூக்களெல்லாம்
பயணத்தின் பாதையேல்லம்
பதியம்போட்டுச்செல்வதில்லை..

ஒரு நிமிடம்
விழி நுழைந்து
மறு நிமிடம்
மனதில் எழுந்து
உயிர் வழியே
உலாவிச்சென்ற..நீ
பதிந்ததேன் என்
உணர்வில்லெல்லாம்

Add comment ஏப்ரல் 6, 2009

காதல்..சிறகினிலே…

நினைவுகளின்
வழியெங்கும்
நிழலனுப்பித்தேடுகிறேன்..
நிகள்காலச்செயலிலெல்லாம்
உன்..
நிழல் கிடக்க ஏங்குகிறேன்

குழல்பிரித்த
இருள் வானில்
வெள்ளி தேடும்
செல்லபிள்ளையாய்
விரல் நீட்டிதுளவுகிறேன்
நகர்முக..சாயலிலெல்லாம்

சாத்தியமற்றே
பயணிக்கிறேன்
பிரிவில்..
தீப்பிழம்பின் மீது
ஒரு பனித்துளியாய்…

Add comment ஏப்ரல் 6, 2009

காதல்..சிறகினிலே..

கார்த்திகையாய்
கருவிழிகள்..
மார்கழியாய்
மனப்புதையல்..
பூஞ்சோலையாய்
தார்ச்சாலையில்..
காத்திருக்கிறோம்
காதல்..பயணிகளாய்
அவரவர் பேருந்து
கடந்தபின்னும்..

Add comment ஏப்ரல் 2, 2009

காதல்..சிறகினிலே…

உயிருக்குள் நடக்கும்
விபத்துக்கள் அனைத்திற்க்கும்
உண்மையில் நீதான்
காரணம் என்றாலும்

மருந்தென பொய்யாய்
மனதை மறைத்து
மீள.முயல்கிறேன்
வலித்தனிமையிலிருந்து…

உயிக்குத்தும் ஊசியாய்
உன் நினைவு துளைத்தெடுக்க..
சுக வேதனை சுமந்துசெல்லும்
உடல் பயண..நரம்பெல்லாம்

ஏற்றம் இரைக்கும்
இதய கிணற்றில்
தீராப்பயணங்கொண்டு..
நிறைகிறது…இப்படி
ஓர்..
ஆண் வடிவக்காதல்…

3 comments மார்ச் 22, 2009

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Posts by Month

Posts by Category