உமாவும் கவிதையும்:–

அம்பு உடைத்தவனுக்கே
அருந்ததி என்றால்
எப்படி பெற்றாய் எனை
என் காதலிடம்
தோற்ற உன் வீரத்தால்

Advertisements

Add a comment பிப்ரவரி 22, 2018

உனக்குப்பிடிக்குமென்றே
எதையும்
செய்வதால்
எனக்குப்பிடிக்கவில்லை
என்னை

Add a comment பிப்ரவரி 21, 2018

முதல் முதலாய்
பார்த்த நாள் என்று

முதல் முதலாய்
பேசிய நாள் என்று

முதல் முதலாய்
ரசித்த நாள் என்று

முதல் முதலாய்
ருசித்த நாள் என்று

விழாக்கால
நாட்களெல்லாம்
விழியோரம்
ஞாபகம் கொண்டு

புதிது புதிதாய்
சேர்த்துக்கொள்ளும்
தினம் தினம்
ஒரு பண்டிகையாய்
தீராத
காதல் பித்தாய்

Add a comment பிப்ரவரி 21, 2018

உமாவும் கவிதையும்:–

 

அந்தோணி சாமி:-
—————————

அந்தோணி சாமி பற்றி
உங்களுக்கு தெரியுமா
எனக்கும் தெரியாது
ஆனால் கடலுக்குத்தெரியும்
——————————————–
மணலோடு விளையாடி
சங்கு சேகரித்தான்
சங்கோடு பேசி பேசி
நண்டு பற்றினான்
நண்டோடு ஓடி ஓடி
மீன் பிடித்தான்
மீனோடு நீந்தி நீந்தி
திமிங்கலம் ஏறினான்
நீரோடு சுழன்று சுழன்று
அலையற்ற கடலானான்
———————————————–

பள்ளி
பக்கத்தில் தான் இருக்கிறது
அவந்தான்
தூரத்தில் இருக்கிறான்
———————————————–

அவன்
இழுத்திழுத்து
சொருகித்தான் பார்க்கிறான்
ட்ரவுசரைப்போல படிப்பையும்
————————————————-

கடலோடு பேசினான்
அலையோடு விளையாடினான்
உப்போடு உண்டான்
மீனோடு மணந்தான்
——————————————–
மீன் பிடித்தான்
மீன் விற்றான்
மீன் உண்டான்
மீனானான்
——————————-
வியர்க்க
வியர்க்க படக்கோட்டி
வீசியெறிந்தான்
வியர்வையய்
கடலெங்கும்
உப்பானது
—————————————
சுகமோ
சுமையோ
சுமந்தே திரிகிறான்
சிலுவைபோல்
வலையய்
——————————————

Add a comment பிப்ரவரி 20, 2018

உன் பின் நான் அல்லது
என் பின் நீ
அல்லது எதிரெதிர்
காதல் ஒற்றயடிப்பாதை

Add a comment பிப்ரவரி 20, 2018

உமாவும் கவிதையும்:—

 

கண்னாயா:-
———————-

கண்ணம்மா என்பது
இயர்பெயர்
கண்ணனின் ஆயாவாக
அறிமுகமனதால்
கண்னாயா எனக்கு
—————————————-
மிச்சம் வைக்காமல்
முதுமை தின்ற தலைமுடி
தோலோடு தொங்கிய
காதாட பாம்படம்
மேலாடை அணியாமல்
அறக்கிஇறுக்கிய
கொசுவச்சேலை
தள்ளாடும் நடையுடன்
தாளமாய் ஆடும்
கணத்த தாலி
இவையே அவள்
அவையக்குறிப்பு
————————————

அரைப்படிக்கும்
கம்மியாய்
அரிசிவைத்து
சிறு குஞ்சு கோழிக்காய்
அம்மி அரைத்து
கொடுத்து கிழவனுக்கு
மிச்சம் உண்டு
அதக்கிக்கிடப்பாள்
வெற்றிலை
வாசலில்
—————————————-
அப்பனும் மகனும்
அடித்துக்கொள்ள
அரற்றி அழுது
ஆர்ப்பரிக்காமல்
அழுத்த அமர்ந்திருந்தால்
இடித்தபுளியாக
இன்றுவரை பேசவில்லை
இம்சித்த மகனுடன்
————————————–
அடைக்கடி விரும்பினாள்
அருசுவை உணவை
அப்படியா பசிக்கிறதென்றேன்
ஆமாம் வாய்க்கென்றாள்
ருசிவேண்டி அலையுமாம்
குழவியும் கிழவியும்
———————————
வளித்த வாசலை
வந்து மிதித்தால்
அழுக்கு வேட்டி
உடுத்து நடந்தால்
ஒழித்து ஒழித்து
பீடி புகைத்தால்
தெருவோடு பெண்களை
சாடை இழுத்தால்
பாடுவாள் கிழவனுக்காய்
வஞ்சனையில்லாமல்
வசைகளை

———————————————-
நேசம் கற்றேன் அவளிடம்
நெஞ்சுரம் கற்றேன் அவளிடம்
நம்பிக்கை என்பது வார்த்தையல்ல
வாழ்க்கை என கற்றேன் அவளிடம்
எல்லாம் கற்ற அவளிடம்தான்
காதல் என்பது
எதுவெனவும் கற்றேன்
——————————————–

Add a comment பிப்ரவரி 20, 2018

கூதலுக்கு மூட்டிய குமுட்டியில்
குளீர்காயப்பார்க்கிறது அப்பன் என் மனசு
வெசனத்த விறகாக்கி களி கிண்டும் கருப்பாயி
எருவாகி எரியறா நெஞ்செல்லாம் நெருப்பாகி

உசுராக ஒரு புள்ள ஒத்தையடி பாத போல
எதுக்கால வந்தாக்க முட்டிப்புட்டு போயிடுவான்
விலகித்தான் போகோனும் விதியப்படி என்ன செய்ய

பொடணீல முடி வளர்த்தி
புருசுல பள்ளு விளக்கி
உசுரோடவோ பொணமாவோ புடிக்கச்சொல்ற
திருடனப்போல் இருட்டோடு வந்து
கருக்கலோடு கிளம்பிடறான்

வேலவெட்டிக்கு அறிவில்ல
உழைச்சு களைக்க மனமில்ல
திட்டுமேல வெச்ச காசு திருடுபோகுது
தினம் தினமும்

கேட்டாக்கா சண்டையின்னு
கேவிக்கிடக்கிறா கருப்பாயி
போட்டாக்கா திரும்பிக்குவானோன்னு
பொதிகழுதையா கவிழ்ந்திருக்கேன்

அடிவயிற்று புகச்சலை தனலிலேற்றி
அனலெடுத்து திண்கிறது சீவனிரண்டும்
கண்ணீரே தன்ணீராய்
குச்சுக்குள்ள குடத்திலிருக்கும்

மாரியாத்தாளுக்கு விளக்குப்போடு
வேண்டிக்கிட்டு தீ மிது
ஆறுதலுக்காய் ஆயிரம் சொல்லும்
கூட இருக்கும் ஊர்சனம்

அய்யானாரு அருவாளுல
அடிபட்டு திருந்துவானோ
மெளனச்சாமியாரு மந்திரத்தால்
மனமிறங்கி வருவானோ

மாறித்தான் வந்துவிட்டா
மகனே சாமி எதுக்கு
ஊருக்கு உழைச்சுப்போட்டு
உசுருக்கெல்லாம் ஆக்கிப்போட்டு
கோயிலாட்டம் வீடிருக்கும்
தம்பி குலசாமியா நீ இருப்ப.

Add a comment பிப்ரவரி 14, 2018

விழுந்த பல்லை
சாணி உருண்டைக்குள் பொதித்து
கூரை மேல் வீசுகிறாள் தாமிர பரணி
காலையில் பல் முலைத்துவிடும்
என் பட்டுக்குட்டிக்கு எனக்கொங்சும்
அம்மாவின் வாக்குறுதியில்
ஆர்ப்பரிக்கிறாள்
வானிலிருந்து நட்சத்திரங்களாய் தொடங்கி
பற்களாய் பொழிகிறது கனவில்
தனக்க்குப்பிடித்ததை தேர்ந்தெடுப்பதில்
தடுமாறுகிறாள் செல்லக்குட்டி
காய்ந்த உருண்டையை எடுத்துச்சென்ற காகம்
மன்றாடிக்கொண்டிருந்தது தன் குஞ்சிடம்
பாப்பா எந்த பருக்கையும் இவ்வளவு
கடினமாய் இராது என்று

Add a comment பிப்ரவரி 14, 2018

கொளவியில் தட்டிய
தேங்காயுடன் நசுங்கியது
அவள் மனரணம்
இழுத்து அரைத்ததில் இதமாய்
அரைபட்டது கோபம்
வழித்து தாளித்திட
இலகியது குணம்
கோபத்தோடு உண்ண அமர்ந்தவனை
சாப்பிடு என்று தலை கோதுகிறாள்
சாந்தத்தை கடத்தும் விதமாய்

Add a comment பிப்ரவரி 14, 2018

நெகமச்சீலை கட்டி
கிளம்பிவிட்டாள் அம்மா
ராத்திரிக்கும் சேர்த்து வைத்த குளம்பு
கொதித்து சுண்டி இருந்தது சட்டியில்
அஞ்சாறு கனகாம்பரத்தை
ரெண்டு மரிக்கொழுந்துடன் கட்டி
செருகிக்கொண்டாள் சடையில்
கொழுந்தியா வளைகாப்புக்கு
கொண்டையில் பூவப்பாரு என்ற
குசும்பு பர்வதத்தை
சிறு மூக்கு விறியவிட்டு முறைத்தாள்
சீக்கிரமா வந்திரு நா டவுனுக்குப்போகனும்
என்ற அப்பாவின் வார்த்தை
அலை அலையாய் போனது எங்கோ
இவள் காது தவிர
செருப்பெடுத்து தட்டி போட்டுக்கொண்டாள்
தூசுடன் வேலைகளையும் உதறி
வர்றேன் என்று வாசல் தாண்டுகையில்
காற்றில் குளிர்வாசனை அடித்தது அவளுக்குமட்டும்
பஸ் ஏத்திவிட சீசர் மட்டும் கூட ஓடியது
ராத்திரி யாரெனக்கு சோறு வைப்பா
என்ற கவலையுடன்

Add a comment பிப்ரவரி 14, 2018

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

ஜூன் 2018
தி செ பு விய வெ ஞா
« பிப்    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Most Recent Posts