மே 2016 க்கான தொகுப்பு




உமாவும் கவிதையும்:–

27

விதிகளற்றது நம் சாலை
இருமருங்கிலும்
சோலைகளோ
மணல் மேடுகளோ
நினைக்கும் எண்ணத்தில்
நிறையும் வண்ணத்தில்

நடக்கும் விபத்துகள்
வலிக்கும் வலியை வழிக்கும்
நொடியில் மறக்கும்
மீண்டும் பயணிக்கும்

தொடங்கிய நாளுக்கொரு
முத்த சாட்சியை
பக்கத்தில் வைத்து
முடியும் நாள் தெரியாமல்
மூவரும் பயணிக்கிறோம்

நீ
நான்
காதல்

Add a comment மே 27, 2016

உன் கோபத்தை
மிடரி மிடரி விழுங்குகிறேன்
அழுத்தி பிடித்திருக்கும்
உன் வார்த்தைகளை
கடித்தெடுக்கிறேன்
அடைத்த தொண்டையய்
கணைத்து கண் சிவக்க
போடி என துப்புகிறாய்
என் கடைசி மிடரலை
26.jpg

Add a comment மே 27, 2016

உமாவும் கவிதையும்:–

25.jpg

முத்தங்களால்
உயிர்த்தெழ வைக்கிறாய்
கோபங்களால்
கொன்று விட்டு

Add a comment மே 27, 2016

ஒரு ஓரம்
தலை சாய்த்து
இரு கை நீட்டி நீ
அழைக்கையில்
ஓடி வர
உந்தியதில்
உருண்டோடியது
உலகம்
23.jpg

Add a comment மே 27, 2016

உமாவும் கவிதையும்:–

21.jpg

நீ தங்கி இருந்த
அறைக்குள்
சங்கமிக்கிறேன் நான்

தலைமுடியுடன்
உருண்டு
காகிதத்தில் படபடத்து
திரைச்சீலையில்
அசைகிறேன்

அங்கிங்கும் உனைத்தேடி
உன் மிச்ச மூச்சை
உள்ளிழுத்து
திரும்புகிறேன் என்
மூச்சுக்குழலில்
இசையாய்

Add a comment மே 27, 2016

உமாவும் கவிதையும்:–

9.jpg

யாழ் மீட்டும் ஒருவனுக்கும்
எனக்கும் காதல்
அவன் ராகங்களாலேயே
ரகசியம் சொல்கிறான்
கம்பிகளுக்கிடையில்
காற்றாக விளையாடி
அவன் கேசம் கலைப்பதே
என் நோக்கம்
பிரியும் ஒலியய் இசையாக்கும்
இயந்திரம் அவன்
அதன் நுட்பமாய்
உளண்றபடி நான்
எங்கேனும்
யாழிசை கேட்டால்
பருகுங்கள் இசையை
சுவாசிக்ககூடும் எங்களை

Add a comment மே 27, 2016

உமாவும் கவிதையும்:–

5

இந்த கல்லூரி மரத்தடியில்தான்
இரண்டு கல்லிட்டு எனை
அமரச்சொன்னாய்

பத்தடி தூரத்தில் அமர்ந்து
பார்வையால் காதல் தொடுத்தாய்

மட்கிய வேப்பிலையய்
கிளறியபடி மனதையும்
கிளறி பார்க்கிறேன்

நீ இல்லையெனச்சொல்லி
வெடுகென்று எழுந்தவளை
தடுத்துப்பிடித்த உன் கைகள்
வலிக்கச்சொன்னது
உன் காதல் வலிமையை

அந்த கல்லூரியய்த்தான்
இப்போது கடக்கிறேன்
வலித்த கையய் தடவியபடி
மட்கிய வேப்பிலை மனதுடன்

Add a comment மே 27, 2016

உமாவும் கவிதையும்:–

 

நீ உற்று பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உறுத்துகிறது எனக்கு

நான் பறந்துகொண்டிருப்பது உண்மை
நீ நடக்க மறுத்த வானில்

எல்லா விசேஷ வீடுகளிலும்
கண்களால் எனை நீ அளக்கும்போது
கர்வம் கொள்வது நான் அல்ல அவன் தான்

என் அழகை அவன் ரசிப்பதெல்லாம்
உன் அன்பழகை காட்ட மறுத்தவினை
அதனால் எனக்கு தயக்கமில்லை
நீ வேண்டுமானால்
வந்து வாழ்ந்து பாரேன்
எல்லா நரகமும் ஒன்றுதான் என்பதை

 

 

4.jpg

Add a comment மே 27, 2016

உமாவும் கவிதையும்:–

 

நீ உற்று பார்க்கும்
ஒவ்வொரு நொடியும்
உறுத்துகிறது எனக்கு

நான் பறந்துகொண்டிருப்பது உண்மை
நீ நடக்க மறுத்த வானில்

எல்லா விசேஷ வீடுகளிலும்
கண்களால் எனை நீ அளக்கும்போது
கர்வம் கொள்வது நான் அல்ல அவன் தான்

என் அழகை அவன் ரசிப்பதெல்லாம்
உன் அன்பழகை காட்ட மறுத்தவினை
அதனால் எனக்கு தயக்கமில்லை
நீ வேண்டுமானால்
வந்து வாழ்ந்து பாரேன்
எல்லா நரகமும் ஒன்றுதான் என்பதை

 

 

4.jpg

Add a comment மே 27, 2016

புத்தனுக்கு தேவையில்லை
சித்தார்த்தனுக்கு
இருக்கலாம் பசி3.jpg

Add a comment மே 27, 2016

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

மே 2016
தி செ பு விய வெ ஞா
« பிப்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

Posts by Month

Posts by Category