உமாவும் கவிதையும்:–
மே 27, 2016
uumm
இந்த கல்லூரி மரத்தடியில்தான்
இரண்டு கல்லிட்டு எனை
அமரச்சொன்னாய்
பத்தடி தூரத்தில் அமர்ந்து
பார்வையால் காதல் தொடுத்தாய்
மட்கிய வேப்பிலையய்
கிளறியபடி மனதையும்
கிளறி பார்க்கிறேன்
நீ இல்லையெனச்சொல்லி
வெடுகென்று எழுந்தவளை
தடுத்துப்பிடித்த உன் கைகள்
வலிக்கச்சொன்னது
உன் காதல் வலிமையை
அந்த கல்லூரியய்த்தான்
இப்போது கடக்கிறேன்
வலித்த கையய் தடவியபடி
மட்கிய வேப்பிலை மனதுடன்
Advertisements
Entry Filed under: Uncategorized
Trackback this post | Subscribe to comments via RSS Feed

மறுமொழியொன்றை இடுங்கள்