Posts filed under: ‘கவிதை‘
நிபந்தனைகளற்றது
நட்பு
நிபந்தனைகளுக்குட்பட்டது
காதல்
அன்பில் எல்லைகள்
வகுத்ததால்
4

Advertisements

Add a comment ஏப்ரல் 19, 2014

உமாவும் கவிதையும்:–

காதலை கவிதையாக
சொல்லமுடிகிறது
எல்லோரிடமும்
என் கவிதையை காதலாக
சொல்லமுடிகிறது
உன்னிடத்தில்
மட்டும்

Add a comment ஏப்ரல் 4, 2014

உமாவும் கவிதையும்:–

1

என் கணத்த
மெளனத்தை
என்னவென்று
பொருள்கொள்வாய் நீ

வலியின்
ஆழமென்றா
ரணத்தின்
நீளமென்றா
விரக்தியின்
உச்சமென்றா

நிராசைகள் அவை
வழக்கம்போல் உணர்வாய்
என் திமிரின்
பெரு உருவம் என்று

Add a comment மார்ச் 14, 2014

உமாவும் கவிதையும்:–

1

நிலைக்கன்ணாடி முன்
பிரதிபளிக்கிறது
என் பிம்பம்
கோப அகங்கார கொம்புகள்
கூர்மையுடன் வளைந்து

பொய்யும் பொறாமையும்
உதடு தடுக்கா பற்களாய்

தலையில் ஒரு புகழ்ச்சி ஏற
குழைகின்றன கொம்புகள்
வாழ்த்து என் வீழ்ந்தபோது
வலுவிழந்தது
கோர நீளம்

கருமை பூசி
உறுத்துப்பார்க்கும்
பொறாமை மட்டும்
பொசுங்கி அழுகிறது
நான் ஒன்றும் செய்யவில்லை
இத்தனைக்கும் காரணம்
இளமையில் மறுத்த
இயல்பான ஆசைகள் என்று

Add a comment மார்ச் 12, 2014

உமாவும் கவிதையும்:–

1

மண் சட்டி கூடுவைத்து
காத்திருகிறேன்
குருவிக்காக

வாசல் தெளிக்கும்
பொழுதுகளில்
வடக்கிலிருந்து
கிழக்காக
பயணிக்கும்
அதன் சிறகுகளுடன்
தொடர்கிறேன் நானும்
விருப்பம் வேண்டி

வேப்பமரத்திலிருந்து
அது குத்தி எடுத்த
குச்சியை கானும் போது
ஆசை கொள்கிறேன்
நாளை தொடங்கும்
கூட்டு வேலை என்று

நம்பிக்கையால்
அரிசி மாறி…
தண்ணீரை மார்றி..
வைக்கோல் மாற்றி..

மாறமறுக்கிறது
மனசு மட்டும்
வசதிகள்
வாய்த்திருந்தாலும்
விருப்பம் என்பது
அதற்க்கும்
உள்ளது என்பதற்க்கு

Add a comment மார்ச் 11, 2014

உமாவும் கவிதையும்:–

1

2

உமாவும் கவிதையும்:–

இப்போது மட்டுமல்ல
எப்போதும்
விழாக்காலம்
அயராத
உழைப்பால்
அசையாத
அன்பால்…

அனைவருக்கும் இனிய மகளீர் தின நல் வாழ்த்துக்கள்

Add a comment மார்ச் 8, 2014

உமாவும் கவிதையும்:–

1
புதிய வீதிகளாம்
வீடுகளாம்
சாலைகளாம்
திரும்ப பார்க்கிறது
பழைய நிலைக்கு

அறுத்த மனிதர்களை
நட்ட பார்க்கிறது
சிங்கள மரங்களால்
நடட்டும்
நடக்கட்டும்

அச்சம் கொள்ளுங்கள்
அரித்து போகலாம்
நீங்கள் புதைத்த
ஆத்ம வீரியத்தால்
Photo
Photo

Add a comment ஜனவரி 24, 2014

உமாவும் கவிதையும்:–

4
நாட்பில் நான்
விருப்பமுற்றவள்
என்பதையும்
காதல் எனில்
விலகி நிறபவள்
என்பதையும்
அறியாமல்
சொல்லிச்செல்கிறாய்
நட்பை சொல்லவந்த இடத்தில்
காதலை

உன் அறியாமைக்கு
அகப்படாமல்
நழுவுகிறது
நட்பும்
Photo:

Add a comment ஜனவரி 24, 2014

உமாவும் கவிதையும்

உனை வெறுக்கத்தொடங்கிய
நிமிடங்களைப்போல
உனை மறக்கத்தொடங்காத
நிமிடங்களும் உண்மை
ஒரு கதாநாயகனைப்போல
கருத்தரித்து நான் வைத்திருந்த
உன் குணங்கள் நிஜத்தில்
உனக்குள் சூல்கொள்ளவே இல்லை
எனும்போது
வயிற்றிலடித்து அழுகிறேன்
காந்தாரியாய்

எம்முனிவனிடமும் மண்டியிட்டு
உனக்கு நல் குணங்கள்
பெற்றுத்தர விருப்பமற்று
உன்னையே மறுத்து
கண்கட்டிக்கொள்கிறேன்
நானும் அவளைப்போல்

மூடிய விழிகளுள்
திறந்த மனது
மறுக்கிறது
மறப்பதற்க்கு மட்டும்
ராணியல்லவே
நான் என்று

Add a comment நவம்பர் 15, 2013

உமாவும் கவிதையும்:–

பெரு மழையில் நனைந்த படி
பேருந்துக்காக காத்திருக்கிறேன்
எனை நோக்கி வருவதும் போவதுமாக
தடுமாறும் உன் கால்களை
கவனிக்கத்தவறவில்லை அப்போதும்
என் அருகில் பேசுபவனை
சந்தேகத்தில் பார்க்கிறாய்
நன்பனா காதலனா என்று
பதறிப்பதறி கழியும் நிமிடத்துடன்
சரியத்துவங்கியது என் எதிர்பார்ப்பும்
பேருந்துப்படியேறி அமர்ந்தவுடன்
முகம் பார்க்கிறேன்
அவசரமாய் கறைத்துக்கொண்டிருந்தாய்
உன் ஆசைகளை மழையில்
பெருமூச்சோடு வேண்டுகிறேன்
நான் இறங்கும் வரை
மழை நிற்க்ககூடாதென்று

Add a comment நவம்பர் 15, 2013

பக்கங்கள்

பிரிவுகள்

தொடுப்புகள்

மேல்

நாட்காட்டி

செப்ரெம்பர் 2017
தி செ பு விய வெ ஞா
« மே    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

Posts by Month

Posts by Category